பொது செய்தி

இந்தியா

அபிநந்தன் இன்று விடுவிப்பு

Updated : மார் 01, 2019 | Added : மார் 01, 2019 | கருத்துகள் (37)
Share
Advertisement

புதுடில்லி : சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக சிறைப்பிடித்துள்ள இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் இன்று (மார்ச் 01) விடுவிக்கிறது. பிற்பகல் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார்.



latest tamil news



பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிய பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படையின் 12 மீராஜ் விமானங்கள் தாக்கி அழித்ததை தொடர்ந்து, இந்திய ராணுவ நிலைகளை குண்டு வீசி தாக்க முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய விமானப்படையின் சுகோய், மிக் ரக போர் விமானங்கள் விரட்டியடித்தன. இதில் ஆகாயம் மார்க்கமாக ஏவும் ஏவுகணையை சுமந்து வந்த பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை, மிக் 21 விமானத்தில் இருந்து சுட்டு வீழ்த்தினார் அபிநந்தன் என்ற தமிழக வீரர். பாகிஸ்தான் விமானம் தாக்கியதில் அபிநந்தனின் விமானமும் சேதம் அடைந்ததால் பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் தரையிறங்கிய அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப்பிடித்தனர்.


latest tamil news


ஜெனிவா ஒப்பந்தத்தின் படி அபிநந்தனை மரியாதையுடன் நடத்தும்படியும் உடனடியாக தங்களிடம் ஒப்படைக்கும்படியும் இந்தியா வலியுறுத்தியது. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தந்ததால் வேறு வழியின்றி பாகிஸ்தான் பணிந்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பார்லி., கூட்டுக் கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபிநந்தன் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார். இன்று (மார்ச் 01) பிற்பகல் ராவல்பெண்டியில் இருந்து லாகூருக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படும் அபிநந்தன், வாகா எல்லையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.


latest tamil news


இதனிடையே இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவதால் அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவரை வாகா எல்லையில் வரவேற்க அபிநந்தனின் பெற்றோர் டில்லி புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக அபிநந்தனின் வீட்டில் கூடிய உறவினர்களும் நண்பர்களும் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-மார்-201911:46:17 IST Report Abuse
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) அடிமைகளே பாக்கிகள் புகழ் பாடுவதை நிறுத்தி விட்டு பாரத் மாதா கி ஜெ , வந்தே மாதரம் , பாக்கிஸ்தான் ஒழிக என்று கோஷம் போடுங்கள், உண்ட நாட்டுக்கு துரோகம் செய்யாதீர் ??அவர்கள் தீவரவாதத்தில் இழந்த உயிர்கள் எண்னிக்கை கணக்கில் அடங்காதவை?? உங்கள் செயல் அவர்களே கேவல படுத்தவதாக உள்ளது
Rate this:
Cancel
matheen - chennai,இந்தியா
01-மார்-201911:39:14 IST Report Abuse
matheen Valvil Ori. ..ur dirty politics will not work here bro..good luck next time..ha ha ha
Rate this:
Cancel
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
01-மார்-201911:15:59 IST Report Abuse
Sheri இந்த அரிய வாய்ப்பு பயன்படுத்தி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு உறவுபாலம் ஒன்று அமைப்பது சிறப்பாக இருக்கும். இரு நாட்டு மக்களின் நல்லுறவு மேம்படும்... இரு நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயரும்... வாழ்க வளமுடன்.
Rate this:
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
01-மார்-201914:23:41 IST Report Abuse
வல்வில் ஓரிஇதை நீ அங்க போயி சொல்லு. இவ்ளோ நாளும் நாங்க இழந்த வீரர்களுக்கு அப்போ என்ன மரியாதை இருக்கு... அவன் வேற....நாங்க வேற தான்....நாங்க சண்டைக்கு வரல..ஆனா வந்தா இப்படி தான்..இன்னும் இருக்கு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X