பொது செய்தி

இந்தியா

பாக்.,கிற்கு அழுத்தம் கொடுத்த உலக நாடுகள்

Updated : மார் 01, 2019 | Added : மார் 01, 2019 | கருத்துகள் (21)
Advertisement

புதுடில்லி : இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, சவுதி அரேபியா, யுஏஇ அளித்த அழுத்தத்திற்கு அடிபணிந்தே அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.

பாக்.,கின் பாலாகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத பயிற்சி முகாமை இந்திய விமானப்படை துல்லியமாக தாக்கி அழித்தது. பாக்., ராணுவத்திற்கோ, பொது மக்களுக்கோ, பாக்., சொத்திற்கோ பாதிப்பு ஏற்படாமல், பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டும் இந்திய விமானப்படை தங்களின் அசாத்திய திறமையால் தாக்கி அழித்தனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாக்., இந்தியாவின் விமானப்படை தளம் அருகே தாக்குதல் நடத்த முயன்றது.
இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்ததற்கு பழிவாங்க பாக்.,கிற்கு 2 வாய்ப்புக்கள் மட்டுமே உள்ளது. ஒன்று ராணுவத்தை குறிவைத்து தாக்குவது, மற்றொன்று பொதுமக்களை குறிவைத்து தாக்குவது. இதில் இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால் அது போருக்கு வழிவகுக்கும்.
பயங்கரவாத முகாம்கள் இந்திய விமானப்படை துல்லியமாக தாக்கி, அழித்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பாராட்டியதுடன், ஆதரவும் தெரிவித்துள்ளன. அதே சமயம் அதற்கு பதிலாக பாக்., நடத்திய தாக்குதலுக்கும் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, சவுதி அரேபியா, யுஏஇ கொடுத்த அழுத்தத்திற்கு பயந்தே பாக்., இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை விடுவிக்க பாக்., பிரதமர் இம்ரான் கான் ஒப்புக் கொண்டுள்ளார். இதில் அமெரிக்கா, பாக்., கிடம் நேரடியாகவே பேசி கண்டனத்தையும், எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடமும், அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ பேசி, போரை தவிர்க்கும்படியும், எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளார். யுஏஇ இளவரசர் ஷேக் முகம்மது பின் சையதும் இரு நாட்டு பிரதமர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
svs - yaadum oore,இந்தியா
01-மார்-201915:17:54 IST Report Abuse
svs //..... இல்லையேல் அழிவு நிச்சயம்....//......அழிவை இப்போது செய்ய வேண்டியதுதானே ??...யார் வேண்டாம் என்று சொல்வது ??........
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
01-மார்-201915:03:33 IST Report Abuse
மலரின் மகள்கள் நிலையை தெளிவு படுத்தி இருக்கிறோம். எந்த வித நிபந்தனையும் கிடையாது. வீரரை கவுரவமாக நடத்தவும் உடனே விடுதலை செய்யவும் அவர்கள் வேண்டும் என்று முக்கிய தேசங்களின் தூதரகங்களுக்கு தெளிவு படுத்தி அவர்களின் மூலமாக பாகிஸ்தானிற்கு செய்திகளை அனுப்பி இருக்கிறோம். மீறினால் ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும் அதனால் அங்கு மிக பெரிய அழிவு ஏற்படும் என்பதையும் அவர்களுக்கு புரிய வைத்திருக்கிறோம். முக்கிய ஆப்பு தேசங்கள் பாகிஸ்தானை அறிவுறுத்தி விட்டன. அதை அவர்கள் ஏற்க மறுத்தால் எந்த நாடுகளும் அவர்களுக்கு உதவ முன்வராது என்பதை அவர்கள் கொண்டிருக்க வேண்டும். இஸ்லாமிய கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா சிறப்பு விருந்தினர் என்பதை உணரவேண்டும். பாகிஸ்த்தானிற்கு ஆதரவாக நிறைய நாடுகள் உதவிக்கு வரும் இந்தியாவிற்கு யாரும் இல்லை என்று பேசித்திரிந்த அவர்களுக்கு இந்த செய்திகள் புரிந்திருக்க வேண்டும். நமது ராணுவ தாக்குதல்கள் மற்றும் காசுமீரில் தீவிரவாதிகள் மீது உடனடி நடவடிக்கை அதுவும் தீவிரமான நடவடிக்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பண உதவி அடியோடு நிறுத்தப்படும் நிலை. பாகிஸ்தானிற்கு ஆதரவாக பேசிய பலர் இன்று கப்சிப் என்று ஆகி இருக்கிறார்கள். இந்தியாவில் குடியுரிமை பெற்றோர் தேசப்பற்றுடன் இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் இந்தியாவிற்கு எதிராக கனவிலும் எண்ணாமல் வாழவேண்டும். இல்லை நாட்டை விட்டு வெளியேறவேண்டும். இங்கு வாழ்ந்து கொண்டு நாட்டிற்கு எதிராக குரல் கொடுப்போர் எண்ணம் கொள்வோர் களை எடுக்கப்படுவார்கள் என்பது அவர்களுக்கு சொல்லப்பட்ட செய்தி. அதற்காகவே அவர்கள் இந்த அரசு தொடரக்கூடாது என்றும் காங்கிரசிற்கு வாக்களிக்கவேண்டும் என்றும் அவர்கள் அமைப்புக்கள் மூலம் பிரார்த்தனை செய்யும் நேரத்தில் செய்தி சொல்கிறார்கள். திருந்த வில்லை என்றால் கடுமையான தண்டனைகளில் திருத்தத்தான் வேண்டும். முடியாத மாடு படியாது என்பார்களாம். அப்படியா?
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
01-மார்-201915:03:13 IST Report Abuse
svs அமெரிக்கா, சவுதி அரேபியா, யுஏஇ இவை எல்லாம் "சும்மா " அழுத்தம் கொடுக்கவில்லை .... எதற்கு அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்?? .....அப்படியே அழுத்தம் கொடுத்து இந்த பிரச்னையை நிரந்தர தீர்வு காணலாமே ??......விமான படை தயாரில்லாத போது எதற்கு இந்த யுத்தம் ??.............
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
01-மார்-201917:24:22 IST Report Abuse
Cheran Perumalசொல்வதை தெளிவாக சொல்லவும். மோடி ஒயிக, அதானே?...
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
01-மார்-201917:25:39 IST Report Abuse
Cheran Perumalமோடியின் வெளிநாட்டு கொள்கையின் பயன் இதுதான். உலக நாடுகள் இந்தியா பக்கம் நிற்பதற்கு தேவையான நட்புறவை வளர்த்து வருகிறார். "நண்பேன்டா" பாணிதான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X