அபிநந்தனுக்கு விமானம்: பாக்., மறுப்பு

Updated : மார் 01, 2019 | Added : மார் 01, 2019 | கருத்துகள் (34) | |
Advertisement
புதுடில்லி : இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படும் இந்தியா விமானப்படை விமானி அபிநந்தனை விமானத்தில் அனுப்பும்படி இந்தியா கேட்டதாகவும், அந்த கோரிக்கையை ஏற்க பாக்., மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.அபிநந்தனை விடுவிக்க பாக்., ஒப்புக் கொண்ட உடன், அவரை சிறப்பு விமானத்தில் அனுப்பி வைக்கும்படி இந்தியா, பாக்.,கிடம் கேட்டுள்ளது. ஆனால் இதனை மறுத்து விட்ட

புதுடில்லி : இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படும் இந்தியா விமானப்படை விமானி அபிநந்தனை விமானத்தில் அனுப்பும்படி இந்தியா கேட்டதாகவும், அந்த கோரிக்கையை ஏற்க பாக்., மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.latest tamil news


அபிநந்தனை விடுவிக்க பாக்., ஒப்புக் கொண்ட உடன், அவரை சிறப்பு விமானத்தில் அனுப்பி வைக்கும்படி இந்தியா, பாக்.,கிடம் கேட்டுள்ளது.


latest tamil news


ஆனால் இதனை மறுத்து விட்ட பாக்., வாகா எல்லை வழியாக மட்டுமே அவரை திருப்பி அனுப்புவோம் என கூறி உள்ளது. அபிநந்தனை திருப்பி அனுப்பப்படுவதால் பதற்றம் காரணமாக இன்று வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsபிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், வாகா எல்லை வழியாக அபிநந்தனை திருப்பி அனுப்ப உள்ளதாக இந்தியாவை தொடர்பு கொண்டு நேற்று (பிப்.,28) பாக்., தெரிவித்துள்ளது. சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக அமிர்தசரசிற்கு அனுப்புவது அல்லது இஸ்லாமாபாத்தில் இருந்து விமானம் மூலம் அனுப்புவர் என்ற 2 வாய்ப்புக்களே இருந்தன. இதில் வாகா எல்லையில் மீடியாக்களும், பொது மக்களும் அதிக அளவில் குவிய வாய்ப்புள்ளதால் விமானம் மூலம் அபிநந்தனை அனுப்பி வைக்கவே இந்தியா விரும்பி உள்ளது. அபிநந்தன் விடுதலை குறித்து பாக்., பிரதமர் இம்ரான் கான் அறிவித்ததுமே ,அவர் விமானி என்பதால் தனி விமானம் மூலம் அனுப்பி வைக்க இந்தியா கேட்டுள்ளது.
அத்துடன் அபிநந்தனை விமானம் மூலம் நேரடியாக டில்லி வரவைத்து, அங்கு அவருக்கு விரிவான மருத்துவ சோதனை நடத்த இந்தியா விரும்பியது. ஆனால் அதனை பாக்.,நிராகரித்து விட்டது. இந்த தகவல் பரவியதும் அதிகாலை முதலே வாகா எல்லையில், அபிநந்தனை வரவேற்க பொது மக்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர். வாகா சாலை வழியாக அபிநந்தன் நடந்து வருகையில் மேளதாளங்கள் வாசித்து, பாரத் மாதா கி ஜே என முழக்கமிட மக்கள் திரண்டுள்ளனர். மாலைகள், தேசப்பற்று பாடலுடன் அபிநந்தனை வரவேற்க 2 விமானப்படை அதிகாரிகள் குழுவும் வாகா எல்லையில் காத்திருக்கிறது.


Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
03-மார்-201912:43:50 IST Report Abuse
Sai இந்தியாவின் மகத்தான வெற்றி வீரனை வரவேற்க எல்லைப்புற மக்களே மிக பொருத்தமானவர்கள் அவர்கள்தான் தினம் தினம் எல்லையில் அனுபவிக்கிறார்கள் டில்லி பெருந்தலைகள் இரண்டாம் பட்சமே
Rate this:
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
02-மார்-201901:09:40 IST Report Abuse
Babu விமானத்தில அவுங்க பத்திரமா அனுப்பி வச்சாலும் இங்க இருக்கற "தேசத்தியாகிங்க" ஓட்டுக்காக என்ன வேணும்னாலும் பண்ணிட்டு "பாக்"கை கைகாட்டிருவாங்களேங்ற பயமா இருக்கலாம்.
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
01-மார்-201921:10:14 IST Report Abuse
Poongavoor Raghupathy We must appreciate this good gesture of Imran Khan. Imran Khan seems to be on the right direction in maintaining peace without any war against India. How far Imran will be able to eradicate terrorists in Pak only time will tell us. But for Imran Abhinanandan's returning to India within a few days is not possible. Our Govt should give a chance to Imran through dialogues to free us from Terrorists. WAR CANNOT ERADICATE TERRORISTS BUT IT WILL END UP THE LOSS OF MANY INNOCENT LIVES. India jointly with Pak Govt must extinguish terror in both our Countries. Imran has been talking sensibly so far. Let us wait and see how far Imran will keep up his words and if Imran removes all terrorists gangs in Pak Imran will become a very Leader not only for Pak but for the humanity. Let us pray to GOD that Allah must give strength to Imran for eliminating terrorism in our Countries.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X