சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மார் 01, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'கூட்டணிக்கு, யாராவது கூப்பிடுங்கப்பா இவரை...' எனச் சொல்லி, பரிதாபப்படத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர், சரத்குமார் பேட்டி: தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுக்கும், என் உழைப்பு தெரியும். தகுதியானவர்கள் அழைத்து பேசினால், கூட்டணி குறித்து யோசிக்கப்படும். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., சேர்ந்ததால், பலவீனம் ஏற்பட்டு இருக்கிறது. ரஜினி, கமலுக்கு முன்பே, நான் கட்சி ஆரம்பித்து விட்டேன். நாங்கள் தான், அவர்களை விட மூத்த கட்சி. பிரபலமானவர்களில், அவர்கள் உயர்ந்தவர்கள்; ஆனால், அரசியலில் நானே, அவர்களை விட பெரியவன். கமல் என்னுடன் பேச்சுக்கு வந்தால் பார்க்கலாம்.

த.மா.கா., கட்சி தலைவர், வாசன் அறிக்கை: தமிழகத்தில், நீர் மேலாண்மையை முழுமையாகச் செயல்படுத்தினால் தான், நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க முடியும். ஆறுகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் வீணாகாமல் இருக்க, அருகில் உள்ள மற்ற ஆறுகளுடன் இணைத்து விடவும், வெளியேறும் நீரை தேக்கி வைக்கவும் முயற்சிகள் எடுத்தால், நிலத்தடி நீர் மட்டம் உயரும். எனவே, தமிழகத்திற்கான தண்ணீர் தேவையை, முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்க, செயல் திட்டங்களை, அரசு தொடர்ந்து செயல்படுத்த முன்வர வேண்டும்.

தமிழக மின்துறை அமைச்சர், தங்கமணி பேட்டி: கோடைக் காலத்திற்கும், குறைந்த மின் அழுத்தத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை. கோடைக் காலத்தில், தமிழகத்தின் மின் தேவை, 15 ஆயிரம், 'மெகா வாட்' அளவிற்கு அதிகரித்து உள்ளது. 16 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு, தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம். தேவையான அளவிற்கு மின் உற்பத்தி இருப்பதால், தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர், ராஜு பேட்டி: உலக அரசியல் வரலாற்றில், இழந்த சின்னத்தை, இருமுறை மீட்டெடுத்த வரலாறு, அ.தி.மு.க.,வுக்கு மட்டுமே உண்டு. இரட்டை இலை, அ.தி.மு.க.,வுக்கு உரிய சின்னம். அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரனின் குரல், ஒட்டுமொத்த மக்களின் குரல் கிடையாது. இந்தத் தேர்தல் போட்டி களத்திலேயே, அவர் இருக்க மாட்டார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர், வேல்முருகன் பேட்டி: தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில், வட மாநிலத்தவர்களே அதிகளவில் உள்ளனர். இது போன்ற நிலை, வேறு எந்த மாநிலங்களிலும் இல்லை. எனவே, தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை, நிறைவேற்ற வேண்டும். அரசு வேலைகளில், 100 சதவீதமும், தனியார் வேலைகளில், 90 சதவீதமும், தமிழர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

'நிறைய இடங்கள்ல, இலவச, 'டிவி' எரிஞ்சு போன கதையெல்லாம், உங்க காதுக்கு வரலியா சார்...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் பேச்சு: தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட கலர், 'டிவி' இப்போதும் நன்றாக உள்ளது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் பழுதாகி, 'ரிப்பேர்' செய்ய முடியாமல், பழைய கடைக்கு எடுத்துச் சென்று, மாற்றாக, பேரிச்சம் பழம் கூட வாங்க முடியவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-மார்-201907:23:00 IST Report Abuse
Bhaskaran இருமுறை சின்னத்தை மீட்டெடுத்த பெருமையா உள்கட்சித்தகராறால் உலகறிய அசிங்கமான விமர்சனங்களை செய்துகொண்டு அடித்துக்கொண்டு பின் ஒன்றுசேர்ந்த பெருமையும் உங்களுக்கே உண்டு தினகரனும் விரைவில் வந்து சேர்வார் நீங்களும் சேர்த்துக்கொள்வீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
02-மார்-201905:40:41 IST Report Abuse
Bhaskaran சரத் சார் நீங்கள் கமலுடன் சேர்ந்து கூட்டணிவையின்கள் நிறைய சீட் போட்டியிட கிடைக்கும் அங்கேயும் ஆள் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
02-மார்-201905:39:21 IST Report Abuse
Bhaskaran துரைமுருகன் ஐயா இம்முறை நீங்கள் ஆட்சிக்குவந்தால் நல்ல டிவி கொடுங்கள் கூடவே மிக்ஸி பேன் grinderum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X