பதிவு செய்த நாள் :
இந்தியர்கள்தான் என் குடும்பம்:
நாட்டுக்காக வீழவும் தயார்;
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

நாகர்கோவில் : ''130 கோடி இந்தியர்கள்தான் எனது குடும்பம். நாட்டுக்காகத்தான் வாழ்வேன், நாட்டுக்காக வீழவும் தயார்,'' என கன்னியாகுமரியில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர்,மோடி,இந்தியர்கள்,என்_குடும்பம்,நாட்டுக்காக,வீழவும்_தயார்


அவர் பேசியதாவது: ஜெயலலிதா தமிழகத்துக்காக செய்துள்ள பணி தலைமுறைக்கும் மனதில் நிற்கும். அவர் முன்வைத்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். விமானி அபிநந்தனும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதில் மகிழ்ச்சி.
'தேஜஸ்' ரயில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. 1964-ல் புயலில் அழிந்த ராமஸ்வரம்- தனுஷ்கோடி ரயில் பாதை 50 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை. இப்போது அதை நாம் செய்கிறோம். விரைவில் பாம்பன் பாலம் கட்டப்பட போவதையும் பார்க்க போகிறீர்கள். வேகமாக பொருளாதாரம் வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது.

ஒரே மாத திட்டம்:மக்களுக்கு பயன் தரும் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இந்தியா 21-ம் நூற்றாண்டில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப மத்திய அரசு வேகமாக செயல்படுகிறது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ஒரே மாதத்தில் செயல்படுத்தப்பட்டது. இதற்காக 24 மணி நேரமும் உழைத்துள்ளோம். ஒரு கோடி10 லட்சம் பேருக்கு அவர்கள் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
'லீப்' ஆண்டு வருவது போல, கால்பந்து போட்டி வருவது போல நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கடன் தள்ளுபடி என்பது காங்., ஆட்சியில் தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பயன்பட்ட விவசாயிகள் எண்ணிக்கை மிகவும் குறைவு.

1900 மீனவர்கள் மீட்பு:மக்கள் முன்னேற்றத்தை விரும்புகின்றனர்; கொள்கை முடக்கத்தை அல்ல. மக்கள் வாய்ப்புகளை விரும்புகின்றனர்; தடைகளை அல்ல. மக்கள் பாதுகாப்பை விரும்புகின்றனர்; தடைகளை அல்ல . மக்கள் முன்னேற்றத்தை விரும்புகின்றனர். வாக்கு வங்கி அரசியலை அல்ல. அனைவருக்கும் சேர்ந்து அனைவருக்கும் முன்னேற்றம் என்ற அடிப்படையில் 130 கோடி மக்களுக்கும் சேர்த்து திட்டம் நிறைவேற்றுகிறோம்.
தமிழகத்தில் கடற்கரை அதிகம். அவர்களின் வாழ்க்கையில் கடினமாக உழைக்கின்றனர். கடந்த அரசுகள் மீனவர்களுக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

நாங்கள் விவசாயிகளுக்காக கடன் அட்டையை மீனவர்களுக்கும் விரிவுபடுத்தினோம்.

அது போல 300 கோடி ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஒதுக்கியுள்ளோம். கடலில் மீனவர்கள் உள்ளூர் மொழியிலேயே தகவல்களை பெறுகின்றனர். இதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த கருவிகள் வழங்கப்படுகிறது. ராமாநாதபும், நாகபட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் முடிவு பெறும் நிலையில் உள்ளது. 2014 முதல் 1900 மீனவர்கள் இலங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

வட்டியும் முதலும்:பாதுகாப்பு விஷயத்திலும் இந்த அரசு முனைப்புடன் உள்ளது. பாதுகாப்புதுறையில் பணிபுரிந்தவர்களுக்கு 'ஒரு பதவி; ஒரு ஓய்வூதியம்' திட்டத்தை செயல்படுத்தினோம். இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் இதுபற்றி சிந்தித்தது இல்லை. பயங்கரவாதத்ததுக்கு எதிராக செயல்பட முடியாதவர்களாக இருக்க முடியாது. கடந்த ஆட்சியில் நாட்டின் பல இடங்களிலும் குண்டுகள் வெடித்தன. மும்பையில் வெடிகுண்டுகள் வெடித்தன. மக்கள் எதை எதிர்பார்த்தார்களோ அதை அப்போதைய அரசு செய்யவில்லை.
தற்போது துணிச்சல்மிக்க நடவடிக்கை எடுத்த ராணுவ வீரர்களுக்கும், அதை முழுமையாக ஆதரித்த மக்களுக்கும் என் வணக்கங்கள். பயங்கரவாத பாதிப்புகளுக்கு வட்டியும் முதலுமாக திருப்பிப்தரப்படும். கடந்த சில நாட்களாக ராணுவத்தின் நடவடிக்கைகைள் நாட்டை ஒருங்கிணைத்துள்ளன. சாதாரண மக்களிடம் இருந்து கிடைத்துள்ள ஆதரவு அசாதாரணமானது.

ராணுவத்தை சந்தேகிப்பதா:ஆனால் துரதிஷ்டவசமாக மோடி மீதான வெறுப்பை நாட்டுக்கு எதிரான வெறுப்பாக காட்டுகின்றனர். ராணுவத்தை மக்கள் பாராட்டுகின்றனர். ஆனால் சிலர், ராணுவத்தின் செயல்பாட்டை சந்தேகிக்கின்றனர். பயங்கரவாதத்துக்கு எதிரான நமது யுத்தத்தை உலகமே பாராட்டுகிறது. விமர்சிப்போரின் பேச்சு பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசப்படுகிறது. பாகிஸ்தான் ரேடியோவில் ஒலிபரப்பாகிறது. இது இந்தியாவை காயப்படுத்துகிறது. இப்படிப்பட்டவர்கள் ராணுவத்தை ஆதரிக்கிறீர்களா, சந்தேகிக்கிறீர்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மோடி வருவார்; போவார். இந்தியா உறுதியாக இருக்கும். அரசியலை பலப்படுத்த நாட்டை பலவீனப்படுத்தி விடாதீர்கள். இந்த நாட்டில் ஒரு பிரதமர் சொன்னார்... 'நலத்திட்டங்களில் ஒரு ரூபாயில் 15 காசு மட்டுமே மக்களிடம் கிடைக்கிறது' என்று. இந்த நாடு ஒரு அகம்பாவம்மிக்க அமைச்சரை பார்த்தது. 'பல லட்சம் கோடி ஊழலில் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை' என சொன்னவர் அவர்.

ஊழல் அவர்களுக்கு வாழ்க்கை முறையாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக மோடி அதை அனுமதிக்கமாட்டார். ஊழலுக்கு எதிராக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். போலி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நாட்டில் ஊழல் செய்த அனைவரும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

'ரீ கவுன்டிங்' அமைச்சர்:தமிழகத்தை சேர்ந்த 'ரீ கவுன்டிங்' புகழ் அமைச்சர் நடுத்தர வர்க்கத்தினரை மிக மோசமாக பேசினார். அப்படி பேசியவர் இன்று, தனது குடும்பத்தினருக்கு ஜாமின் வாங்குவதற்காக போய் நிற்கிறார். அவரது கட்சியின் முதல் குடும்பம் எப்படி நிற்கிறதோ... அப்படி அவரும் போய் நிற்கிறார்.
ஊழல் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போல நேர்மையாக வரி செலுத்துவோரையும் கவனத்தில் கொண்டுள்ளோம். ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளோர் வரிகட்ட வேண்டியதில்லை. குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு லபாம் தரும் பொருளாதார கொள்கைகளை காங்கிரஸ் நடைமுறைப்படுத்தியது. இதற்கு எதிராக குரல் கொடுத்த ராஜாஜியின் விருப்பத்தை நாம் நிறைவேற்றியுள்ளோம்.

இந்தியா முன்னேற்றம்:சுலபமாக தொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 142-வது இடத்தில் இருந்து 77-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 59 நிமிடத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. 15 கோடி பேருக்கு ஏழு லட்சம் கோடி ரூபாய் முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு சமூக நீதியில் உறுதியான நிலைப்பாடு கிடையாது. அம்பேத்கரை காங்., இரண்டு முறை தோற்கடித்தது. அவரது உருவபடத்தை பார்லிமென்டில் பா.ஜ., அரசுதான் திறந்தது.

தி.மு.க., மீது சாடல்:2019 தேர்தல் இரண்டு பிரதான பக்கங்களை கொண்டது. ஒன்று நம்முடையது. பலம், உறுதித்தன்மையை வைத்திருப்பது. மற்றொரு பக்கம் என்ன இருக்கிறது. பலவீனம் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகின்ற சூழ்நிலை. நாம் வேலை செய்யும் முறை நாடே தெரிந்தது. ஆனால் அவர்கள் குழம்பி போய் இருக்கின்றனர். அவர்களால் ஒரு தலைமையை நாட்டுக்கு தரமுடியவில்லை. அவர்களுக்கு எந்த கொள்கையும், குறிக்கோளும் கிடையாது.

ஆனால் ஊழல் செய்வதில் வெட்கம் இல்லை. 2009 காங்.,- தி.மு.க. கூட்டணி அரசில் எப்படி அமைச்சர் பதவியை பகிர்ந்து கொண்டார்கள். அமைச்சர்களை தேர்வு செய்தது பிரதமர் அல்ல. பொது வாழ்வில் சம்பந்தம் இல்லாதவர்கள் போனில் பேசி துறைகளை ஒதுக்கினர். இந்த கலப்பட அரசு என்பது தனிநபர் அகந்தை மற்றும் குடும்ப அபிலாஷைகளின் பிணைக்கைதியாக செயல்பட்டது.
எனது குடும்பம் 130 கோடி மக்கள்தான். நான் அவர்களுக்காகவே வாழ்வேன். அவர்களுக்காகவே வீழ்வேன். நான் பொதுவாழ்வில் இருப்பது எந்த விதமான குடும்ப அரசியலையும் முன்னுக்கு கொண்டு வருவதற்கு அல்ல. நாட்டின் வளர்ச்சிக்காக, வளத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன். இதற்கு மக்கள் எனக்கு ஆசீர்வாதமும், ஆசியும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினர். கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை சபாநாயகர் தம்பிதுரை, டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், விஜயகுமார் எம்.பி., கலந்து கொண்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jesudass Sathiyan - Doha,கத்தார்
02-மார்-201921:18:04 IST Report Abuse

Jesudass Sathiyanகடைசியா உண்மைய ஒத்துக்கிட்டார்...

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-மார்-201919:38:32 IST Report Abuse

Malick Rajaஅய்யா எல்லாம் சரிதான் .. அந்த 40 பாதுகாப்பு வீரர்கள் வீரமரணமா ? இல்லையே என்று ராஜ்தாக்கரே சொல்கிறாரே அது எப்படி ..அதற்கு பல புள்ளி விவரங்களையும் சொல்கிறாரே எப்படி ? அது தீவிரவாத தாக்குதல் இல்லை என்றும் சிலர் இதில் இருப்பதாகவும் மிகப்பெரிய புள்ளியும் சந்தேகத்திற்கிடமில்லாமல் இருக்கிறதாம் ஆக உண்மை வெளியே வந்து கொண்டிருக்கிறது

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-மார்-201918:43:02 IST Report Abuse

Malick Rajaநீங்கள் பதவியிலிருந்து வெளிவருவது உறுதி .. நீங்கள் வீழவே விடமாட்டோம் . 5.ஆண்டுகளில் யாருக்கெல்லாம் என்ன கொடுத்தீர்கள் .. எப்படிய்யேல்லாம் பணக்கார்கள் செல்வம் குவித்தார்கள் . பிஜேபி அலுவலகம் திடீர் என்று வந்தது எப்படி .. எல்லா உண்மையும் வரவேண்டும்

Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X