பொது செய்தி

தமிழ்நாடு

'தேஜஸ்' சொகுசு ரயில் துவங்கியது சென்னை - மதுரைக்கு ஆறரை மணி நேரம்

Added : மார் 02, 2019 | கருத்துகள் (10)
Advertisement
 'தேஜஸ்' சொகுசு ரயில்  துவங்கியது சென்னை - மதுரைக்கு ஆறரை மணி நேரம்

மதுரை:மதுரையிலிருந்து நேற்று பயணத்தை துவக்கிய, 'தேஜஸ்' ரயிலில், ஆறரை மணி நேரத்தில் சென்னை செல்ல முடியும். இதில் தானியங்கி கதவுகள், தொலைக்காட்சி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

கன்னியாகுமரியில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் மோடி, தேஜஸ் ரயிலையை கொடியசைத்து துவக்கினார். மதுரை ரயில்வே ஸ்டேஷனில் நடந்த விழாவில் கோட்ட மேலாளர், நீனு இட்டியரா வரவேற்றார்.அமைச்சர்கள் ராஜு, மணிகண்டன், கலெக்டர் நடராஜன், அ.தி.மு.க., - பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரியில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பிரதமர் கொடியசைக்க, ரயில் நேற்று மதியம், 3:00 மணிக்கு சென்னை புறப்பட்டது.கோட்ட இயந்திரவியல்பொறியாளர், ஜித்தின் நெல்சன் கூறியதாவது:

இதில், 12 குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பெட்டிகள், ஒரு உயர்ரக வகுப்பினருக்கான, 'ஏசி' இருக்கை பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. எல்.இ.டி., விளக்குகள்,தானியங்கி கதவுகள், அலைபேசி சார்ஜர், 'வைபை' வசதி, இருக்கையில் மடித்து வைக்குமளவிற்கு சாப்பிடும் ட்ரே, ஒவ்வொரு இருக்கை முன்பும், 'டிவி' மற்றும் எந்த ஸ்டேஷனில் ரயில் செல்கிறது என்பதை, இருக்கையிலேயே பயணியர் அறிய, ஜி.பி.எஸ்., வசதி உள்ளது.

மத்தியிலுள்ள இருக்கை பயணியருக்கு டைனிங் டேபிள், பயோ டாய்ெலட், நவீன கழிப்பறையில் சென்சார் அடிப்படையில் தண்ணீர் குழாய்கள், சோப் டிஸ்பென்ஷர் மற்றும் கை உலர்த்திகள், பெட்டி யில் இருந்தபடி உதவியாளரை அழைக்க வசதி உள்ளிட்டவை உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

பயண நேரம்வியாழன் தவிர தினமும், சென்னையில் காலை, 6:00 மணிக்கு புறப்பட்டு, திருச்சிக்கு காலை, 10:25, கொடைரோடுக்கு காலை, 11:40, மதுரைக்கு பிற்பகல், 12:30 மணிக்கு வரும்.மதுரையில் மதியம், 3:00 மணிக்கு புறப்பட்டு, 3:30 மணிக்கு கொடை ரோடு, திருச்சிக்கு மாலை, 4:52, சென்னை எழும்பூருக்கு இரவு, 9:30 மணிக்கு சென்றடையும்.


பயணியர் குழப்பம்



இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று துவங்கியது. உணவு கட்டணத்துடன், உணவு கட்டணமின்றி டிக்கெட் பதிவு செய்யலாம்.சென்னையிலிருந்து இயக்கப்படும் ரயிலுக்கு ஒரு கட்டணமாகவும், மதுரையிலிருந்து இயக்கப்படும் ரயிலுக்கு ஒரு கட்டணமாகவும் வேறுபட்டுள்ளது, பயணியருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumaresh - Chennai,இந்தியா
07-மார்-201918:41:25 IST Report Abuse
Kumaresh தேஜஸ் ரயில் 6 மணிநேரம் 30 நிமிடங்களில் மதுரை சென்று அடைவதும் [விலை 1035 ரூபாய் ], வைகை எக்ஸ்பிரஸ் 7 மணிநேரம் 40 நிமிடங்களில், பல முக்கிய ஜங்ஷன் ல நின்று மதுரை சென்று அடைவதும் ஒன்றே [chaircar ரேட் 645 ]. தேஜஸ் அதி வேக ரயில் என்று கூற இயலாது. வைகையே சீப், பாஸ்ட் அண்ட் பெஸ்ட் என்று கூறலாம்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-மார்-201912:40:16 IST Report Abuse
மலரின் மகள்கள் கோடை ரோடு நிறுத்தம் தேவை அற்றது.
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
06-மார்-201911:31:39 IST Report Abuse
raghavan சென்னை டு திருச்சி பல்லவனும் கூடுதல் நிறுத்தங்களுடன் கிட்டத்தட்ட நாலரை மணி நேர பயணத்தில் சென்றுவிடுகிறது... ஸ்ரீரங்கத்தில் நிறுத்தி சென்றால் வசதியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X