சந்தா கோச்சார் வீட்டில் அதிரடி சோதனை

Updated : மார் 02, 2019 | Added : மார் 02, 2019 | கருத்துகள் (28)
Advertisement
 சந்தா கோச்சார் வீட்டில் அதிரடி சோதனை

புதுடில்லி: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக, சந்தா கோச்சார் இருந்த போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வீடியோகான் நிறுவனத்திற்கு, 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கினார்.இதன் வாயிலாக, அவரது கணவரும், உறவினர்களும் பயனடைந்ததாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்வாகம், முன்னாள் நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா குழு தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட்டது.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைமை செயல் அதிகாரி பதவியை,சந்தா கோச்சார், கடந்தாண்டு ராஜினாமா செய்தார். 'சந்தா கோச்சார், வங்கி விதிமுறைகளை மீறி, வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்க ஒப்புதல் அளித்தார்' என, ஸ்ரீகிருஷ்ணா குழுவும் அறிக்கை அளித்தது.





இதையடுத்து, வீடியோகான் நிறுவன தலைவர், வேணுகோபால் துாத், சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.அமலாக்கத் துறையும், இவர்களுக்கு எதிராக, சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து, விசாரிக்கிறது.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, சந்தா கோச்சார், வேணுகோபால் துாத் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத்துறை, நேற்று அதிரடிச் சோதனை நடத்தியது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை மற்றும் அவுரங்காபாதில், இந்த சோதனை நடத்தப்பட்டதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-மார்-201918:44:19 IST Report Abuse
Bhaskaran வங்கி அதிகாரிகள் அனைவரின் வீட்டிலும் சோதனை நடத்தவேண்டும் ஆனால் பத்துபைசாகூட கிடைக்காது அந்த அளவுக்கு அவர்கள் முட்டாள்களா
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
02-மார்-201916:12:59 IST Report Abuse
Girija இதுல என்ன அதிரடி சாந்தா ஒரு வங்கியின் சி இ ஓ கணவர் கோச்சார் பிசினெஸ்மேன் வீட்டில் ஆவணங்களை வைத்திருக்க ? அதுவும் மூன்று மாதங்களுக்கு பிறகு ? சி பி ஐ செயல்பாடுகள் தொலைக்காட்சி சீரியல்கள் போல் உள்ளது. ஆணால் பாவம் அவர்கள் எதை செய்தாலும் கோர்ட் அவர்களை தடுக்கிறது. 2 G விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் அந்தஸ்து உள்ள நீதிபதியை போடாதது யார் தவறு ? ராஜீவ் கொலை வழக்கை விசாரித்தபோது கார்திகேயனையும் ஜெயின் கமிஷனையும் மேற்பார்வை இடாதது யார் தவறு ? சிதம்பரம் குடும்பத்தை விசாரிக்கும் போதெல்லாம் கைது செய்யக்கூடாது என்று சொன்னால் எந்த அதிகாரி ஒரு அரசியல்வாதியிடம் தைரியமாக விசாரிப்பான் ?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
02-மார்-201915:05:03 IST Report Abuse
Endrum Indian இது வரைக்கும் என்ன தூங்கிட்டா இருந்தீங்க அமலாக்கத்துறையே?????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X