பொது செய்தி

இந்தியா

பாலகோட் தாக்குதல்: ஆதாரம் வெளியிடுகிறது இந்தியா

Updated : மார் 02, 2019 | Added : மார் 02, 2019 | கருத்துகள் (73)
Share
Advertisement
புதுடில்லி : பாலகோட் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கு ஆதாரம் உள்ளதாகவும், அவற்றை விரைவில் அரசு வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாக்., எல்லையில் உள்ள பாலாகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் பயங்கரவாதிகள் முகாம் மீது பிப்.,26 அன்று

புதுடில்லி : பாலகோட் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கு ஆதாரம் உள்ளதாகவும், அவற்றை விரைவில் அரசு வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாக்., எல்லையில் உள்ள பாலாகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் பயங்கரவாதிகள் முகாம் மீது பிப்.,26 அன்று இந்திய விமானப்படை சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படை பாலாகோட் மீது தாக்குதல் நடத்தியதற்கு என்ன ஆதாரம் உள்ளது என மேற்குவங்க முதல்வர் மம்தா கேட்டிருந்தார். இதே போன்று சிலர், பாலாகோட் பாக்., எல்லைக்குள் இல்லை எனவும், அது இந்திய எல்லைக்குள் தான் உள்ளது எனவும் எதிர்க்கட்சிகள் சில கூறி வருகின்றன.


latest tamil news


இதனையடுத்து பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்தியில், பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதாரங்கள் உள்ளது. செயற்கைக்கோள் படங்கள் உள்ளது. அவற்றில் பயங்கரவாத முகாம் கட்டிடடங்களை சுற்றி 150 முதல் 200 மீட்டர் தொலைவிற்கு குண்டுகள் வீசப்பட்டது தெளிவாக உள்ளது.
தாக்குதலுக்கு முன்பும், பின்பும் உள்ள செயற்கைகோள் புகைப்பட ஆதாரங்களும் உள்ளன. அதனை வெளியிட வேண்டுமா, வேண்டாமா என்பது அரசின் விருப்பம். தாக்குதலில் சேதமடைந்த பகுதியை சரி செய்யும் முயற்சியில் பாக்.கும் ஈடுபட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
09-மார்-201911:55:20 IST Report Abuse
R.MURALIKRISHNAN இந்தியா நடத்திய தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலையும்,இந்திய இராணுவத்தயும் விமர்சிப்பவர்கள் இந்தியனாக இருக்க அருகதையட்ரவன்கள்.கெடுகெட்ட இப்பிரவிகளை இராணுவத்தில் ஏவப்படும் மிசைலின் முன்பு கட்டிவைத்து ஏவவேண்டும்.விழுந்த இடத்தை துல்லியமாக அறிந்து கொள்வார்கள்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-மார்-201912:26:08 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இதை சர்ஜிக்கல் ஆபரேஷன்னா சொல்றீங்க.. என்ன ஜீ, டார்க்கெட்டிலேருந்து 200 மீட்டர் தள்ளி சர்ஜரி பண்ணியிருக்கீங்க.. முட்டியிலே பண்ண வேண்டிய ஆபரேஷனை மூளையிலே பண்ணிட்டு "ஆபரேஷன் சக்ஸஸ்" ன்னு சொன்ன கதையா இல்லே இருக்கு..
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-மார்-201912:23:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் டார்கெட்டில் (இருந்து) 200 மீட்டர் தள்ளி குண்டு விழுந்தது என்பதை ஒரு வேகத்தில், பாலகோட்டில் 200 பேர்கள் தலையில் குண்டு விழுந்ததுன்னு சொல்லிட்டாங்க.. சரி விடுங்க.. நம்பலைன்னா இன்னும் காமெடி பண்ணிக்கிட்டே இருப்பாங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X