இந்தியாவின் வலுவை பார்த்து பயங்கரவாதிகள் அச்சம்: பிரதமர் மோடி

Updated : மார் 03, 2019 | Added : மார் 02, 2019 | கருத்துகள் (46)
Advertisement

புதுடில்லி: இந்தியாவின் வலுவை பார்த்து தற்போது பயங்கரவாதிகள் அச்சம் அடைந்துள்ளனர் என டில்லியில் நடந்த இந்தியா டுடே நடத்தும் 18 வது மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.
உலக தலைமைஅவர் மேலும் பேசியதாவது: இங்கு என்னை அழைத்தமைக்கு நன்றி. மேலும் தூய்மை இந்தியா திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இந்தியா டுடேவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.கடந்த 2014 ல், நான் ஆட்சிக்கு வந்த போது டில்லிக்கு அப்பாற்பட்டு வெளியில் இருந்து வந்தேன். டில்லிக்கு வரும் போது ஒன்றும் அறியாதவனாகத்தான் இருந்தேன். இதனை புரிந்து கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. சிலர் எவ்வாறு இந்தியாவை கையாள போகிறார் என கேள்வி எழுப்பினர். இன்று இந்தியா, புதிய இந்தியாவாக உருவெடுத்து உலக தலைமைகளில் ஒன்றாக திகழ்கிறது.


2லட்சத்து 30 ஆயிரம் புல்லட் புரூப்அனைவருக்கும் வங்கிக்கணக்கு, அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின்சாரம், கோடிக்கணக்கான குடும்பத்தினருக்கு சமையல்காஸ் இணைப்பு, மத்திய சுகாதார திட்டத்தின் மூலம் பல கோடி குடும்பத்தினர் பயன் பெற்றுள்ளனர். ராணுவ வீரர்களின் ஒன்ரேங்க், ஒன்பென்ஷன் திட்டத்திற்கு 35 ஆயிரம் கோடி ஒதுக்கினோம். 18 ஆயிரம் கிராமங்கள் எங்கள் ஆட்சியில் மின்சாரம் பெற்றுள்ளது.தைரியம் இல்லைஒவ்வொரு வீரர்களின் ரத்தமும் எங்களுக்கு முக்கியம். ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் புல்லட் புரூப் உடைகள் வாங்கினோம். எங்களின் அரசில் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை. எங்களின் அரசு மிக வேகமாக செயல்படும் அரசு. எங்களின் ஆட்சியின் கீழ் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது.தற்போது யாருக்கும் இந்தியாவுக்கு எதிராக மிரட்டும் தைரியம் இல்லை. இந்தியா புதிய ராஜதந்திரங்களை கையாள்கிறது. உலகம் இந்தியாவை புரிந்து வைத்துள்ளது. இந்தியா தற்போது அச்சமற்றும் , தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் சக்தி கொண்டதாக திகழ்கிறது.


பலவீனப்படுத்த வேண்டாம்கடந்த ஆட்சியாளர்கள் நாடகமாடினர். ஆனால் எந்தவொரு முன்னேற்ற முயற்சியும் எடுக்கவில்லை. பினாமி தடுப்பு சட்டத்தை கடந்த ஆட்சியளர்கள் அமல்படுத்த மறுத்து வந்தனர். 2014 முதல் 19 வரை இந்தியா அதிவேக வளர்ச்சி பெற்றது. ரபேல் விமானங்கள் வாங்காமல் காலம் தாழ்த்தினர். இன்று இந்தியா 21 ம் நூற்றாண்டை நோக்கி முன்னேறி வருகிறது. சட்டமே எங்கள் ஆட்சியில் உயர்ந்தது. மோடிக்கு எதிரானவர்கள் நாட்டை எதிர்ப்பவர்களாக மாறினர். பல மோடிகள் வரலாம், போகலாம். ஆனால் இந்தியா எப்போதும் இருக்கும். எனவே தங்களின் அரசியல் லாபத்திற்காக விமர்சனம் என்ற பெயரில் நாட்டை பலவீனப்படுத்த வேண்டாம். எதிர்க்கட்சியினர், நாட்டிற்கு எதிராக பேசி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
எதிர்கட்சியினர் நாட்டை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரபேல் விமானங்கள் குறைவாகத்தான் வாங்கி இருக்கிறோம் என்பது கவலை தரும் தகவல் ஆகும். இத்தனை ஆண்டுகளாக நமது போர் தியாகிகளுக்கு நினைவுச்சின்னம் கூட கட்டாமல் காலம் தாழ்த்தியுள்ளனர். எனது அரசு இதனை நிறைவேற்றுகிறது.


சுயலாபம்ராணுவ தளவாடங்கள் வாங்குவதில், கடந்த ஆட்சியில் தரகர் முறை இருந்தது. இதில், தரகர்கள் யார் யாருடன் நெருக்கமாக இருந்தார்கள் என்பது இந்திய மக்களுக்கு தெரியும். சுய லாபத்திற்காக ராணுவ தளவாடங்கள் வாங்காமல், காலம் தாழ்த்தினர். எங்கள் ஆட்சியில், தரகும் இல்லை. யாரிடமும் கமிஷனும் கேட்கவில்லை.


பயங்கரவாதிகளுக்கு அச்சம்அரசு கொள்கைகளை விமர்சனம் செய்யலாம் அதே நேரத்தில் நமது ராணுவத்தை அரசியலாக்க வேண்டாம். தேசிய பாதுகாப்பு விஷயத்தில் எதிர்கட்சியினர் விளையாட வேண்டாம். இந்தியர்களின் ஒற்றுமை வலுப்பெற்றுள்ளது. இதனால் வெளிநாட்டிலும் , உள்நாட்டிலும் உள்ள தேச விரோத சக்திகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் வலுவை பார்த்து பயங்கரவாதிகள் அஞ்சி வாழ்கின்றனர். பெரும் குடும்பம் ஒன்று சிறையை கண்டு அஞ்சியபடி வாழ்ந்து வருகிறது. 2019 ல் நாங்கள் மக்களின் ஆதரவை பெறுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pazhaniappan - chennai,இந்தியா
03-மார்-201913:44:31 IST Report Abuse
pazhaniappan புல்லட் ப்ரூப் ஆடை வாங்கலாம், அதிநவீன போர்விமானம் வாங்கலாம், ராணுவத்துக்காக பல லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திருக்கலாம் , இவையெல்லாம் ஒரு நாட்டில் அமைதியை தருமா? அமெரிக்கா வல்லரசு நாடு ஆனால் அந்தநாடும் தீவிரவாத தாக்குதலுக்காளானது, ருசிஸ்யா தீவிரவாத தாக்குதலுக்காளானது இந்த நாடு மக்கள் எவ்வாறு அச்சமின்றி வாழ்கிறார்கள் , அவர்கள் வாழ்க்கை தரம் எவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கிறது , என்பதுதான் ஒரு சிறந்த தலைவர் அந்நாட்டுக்கு ஆற்றுகின்ற பணிகளில் மிகச்சிறந்தது, கையில் ஒருவன் ஆயுதத்தோடு அலைகிறான் என்றால் அவன் மிகவும் பயப்படுகின்றான் என்று பொருள் , நமது பிரதமருக்கு அடிப்படையாகவே சில மாற்றம் வேண்டியிருக்கிறது, பாகிஸ்தானில் தான் பின்லேடன் இருக்கிறான் என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும், மேலும் பாகிஸ்தான் அவனுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கிறது என்பதும் அனைவருக்கும் தெரியும்,ஏன் பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்கவில்லை, ஆகவே மோடி அவர்களே உங்களின் தேர்தல் வியூகத்திற்கு நாட்டை தவறான வழிக்கு இழுத்து செல்லாதீர்கள், நாட்டுக்கு ஆயுதம் வாங்குவது அவசியம் அதில் மாற்றுக் கருத்தில்லை, அதை நீங்கள் சொல்வதுபோல் தம்பட்டம் அடித்துக்கொள்வதில் பெருமை ஒன்றும் இல்லை. எதை செய்தாலும் அதற்க்கு பெரும்பாலும் பெரும்பாலான நாடுகளின் ஆதரவை பெறுகின்ற அமெரிக்காவின் யுத்தி , தீவிரவாதிகளுக்காக எதையும் சமரசம் செய்துகொள்ளாத,மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கின்ற ரஸ்சியாவின் துணிச்சல், மக்களின் வாழ்க்கை தரத்துக்கு முன்னுரிமை கொடுக்கிற ஐரோப்பிய நாடுகளின் அர்ப்பணிப்பு இதுபோன்று இருக்க வேண்டுமே தவிர ,ஏதோ சந்தன கடத்தல் வீரப்பன் போல, பின்லேடன் போல ஒரு கலாச்சாரத்தில் முதிர்ச்சிபெற்ற நமது நாட்டின் பிரதமர் பேசுவது சரியல்ல ,அது மக்களிடையே ஓட்டுக்களை பெறுவதற்கு பயன்படுமே தவிர நாட்டை நாசமாகிவிடும் ,சில காலங்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் வேறுபாடு இல்லாது போய்விடும் ,ப்ளீஸ் மோடி ஜி
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
03-மார்-201914:38:39 IST Report Abuse
VELAN Sபுல்லட் ப்ரூப் ஆடை வாங்கினோம் , அதிநவீன போர்விமானம் வாங்கினோம் என்று சொல்கிறீர்களே மோடி , அதை ஏன் இந்தியாவில் உங்களுடைய மேக் இந்தியா முறையில் இந்தியாவில் ஏன் செய்யவில்லை , என்ன இது நீங்க பேசறது வெட்டித்தனமா இருக்கே , இனிமே வெளிநாட்டு கார பயலுக்கு காசு கொடுக்காமல் நீங்களே செய்ய பழகுங்கள் , இல்லையெனில் மேக் இந்தியா படுத்துடும் சொல்லிட்டேன் ....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-மார்-201912:11:52 IST Report Abuse
Pugazh V படுகேவலமாக அரசியல் செய்கிறார்கள். ஒரு ராணுவ ஆபரேஷனை இந்த அளவுக்கு சொந்த நடவடிக்கை மாதிரி பொய்யாக தம்பட்டம் அடிக்கிறார்கள். அநியாயம். இந்த அளவுக்கு ஸெட்டப், ஸீன் போடறதா? கொடுமை. பயமாக இருக்கிறது. இன்னும் என்னவெல்லாம் செய்யத் துணிவார்களோ? தேர்தல் பைத்தியம், பதவி வெறி. இதுதான் காரணம்
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
03-மார்-201912:58:26 IST Report Abuse
blocked userதேர்தல் நேரத்தில் மோடிக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணம்(?) உங்களை வாழவைக்கும் என்று கனவு காணவேண்டாம்......
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Doha,கத்தார்
03-மார்-201912:03:29 IST Report Abuse
Tamilan இந்தியாவை பார்த்துதான் பயமே தவிர மோடியை பார்த்து அல்ல, மோடிதான் இந்தியா அல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X