மோடியிடம் எச்சரிக்கை தேவை!

Updated : மார் 03, 2019 | Added : மார் 03, 2019 | கருத்துகள் (142)
Advertisement

'பிரதமர் மோடி, எப்போதும், அதிரடி முடிவுகள் எடுப்பவர்' என, பா.ஜ., தலைவர்கள் சொல்வது வழக்கம்; ஆனால், வெளியுறவுத்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒரு மூத்த அதிகாரி, சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.





மோடி பிரதமரான பின், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலரிடம் பேசும் வாய்ப்பு, அந்த அதிகாரிக்கு கிடைத்தது. அப்போது, 'இதுவரை இந்திய பிரதமராக இருந்தவர்களுக்கும், மோடிக்கும் வித்தியாசம் உள்ளது; மற்றவர்களைப் போல மோடியை நினைக்க வேண்டாம்; மோடியிடம், பாக்., கவனமாக இருக்க வேண்டும்' என, அந்த அதிகாரி எச்சரிக்கை விடுத்தாராம்.




தான் பதவியில் இருந்தபோது, மோடி எப்படி நடந்து கொண்டார் என்பதையும், அந்த அதிகாரி தெரிவித்தார். ஒரு விவகாரத்தில், 'நீங்கள் சொல்வதை செய்வது கஷ்டம்; அதை, இப்படித்தான் செய்ய வேண்டும்' எனச் சொல்லி, அது தொடர்பான சில ஆவணங்களைக் காட்டினாராம், அந்த அதிகாரி.

அதற்கு பதிலளித்த மோடி, 'அந்த ஆவணங்களை நீங்களே படித்துக் கொண்டிருங்கள்; ஆனால், எனக்கு தேவை, இது தான்; நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்' எனக் கூறி, அந்த அதிகாரியை அனுப்பி விட்டாராம்.'பொதுவாக, எந்த ஒரு திட்டத்தை முன்வைத்தாலும், ஏதாவது சட்டங்களை கூறி, அதை செய்ய விடாமல், அதிகாரிகள் தடுப்பது வழக்கம்' எனக் கூறிய அந்த மூத்த அதிகாரி, 'பிரதமர் மோடியிடம், அது எடுபடாது' என, உறுதியாக கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (142)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
10-மார்-201902:06:20 IST Report Abuse
Murugan சர்ச்/மசூதி மூலம் மோடிக்கு ஒட்டு போடாதே என்று சொன்னவர்களுக்கு எதிராக ஏன் எந்த மீடியாவும் மதவாதத்தை தூண்டும் செயல், என்று கூறவில்லை .இதுவே ஒரு கோவிலில் ஒரு இந்து தலைவர் இந்துக்கள் யாவரும் ராகுலுக்கு ஒட்டு போடகூடாது என்று சொன்னால் பெரிய சர்ச்சையே உருவாகி இருக்கும். இந்துக்களுக்கு நான் கூறுவது மத வெறி வேண்டாம் .ஆனால் நம் பக்தியை, மத பற்றை, எக்காரணம் கொண்டு இந்த தேச துரோகிகளுக்காக நாம் விட்டு கொடுக்க கூடாது. இங்கு பொய் பெயரில் கருத்து தெரிவிப்பவர்கள் எல்லாம் மோடியை மத தலைவராக பார்க்காமல் ஒரு அரசியல் வாதியாக பார்த்தால் தான் புரியும்…..ஜெய்ஹிந்த் …...…….மீண்டும் மலரட்டும் மோடி ஆட்சி ……….அப்பொழுது புரியும். இங்கு விஷத்தை விதைக்கும் மிஷினரிகளுக்கு ..
Rate this:
Share this comment
Cancel
R S GOPHALA - Chennai,இந்தியா
08-மார்-201916:21:34 IST Report Abuse
R S GOPHALA கண்டிப்பாக மோடி வருவார். வர வேண்டும். அப்போதுதான் இந்தியா இந்தியாவாக இருக்கும். இல்லாவிடில் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் பங்களாதேஷுக்கும் இந்தியா பப்புவால் விற்கப்பட்டுவிடும். அவர் இத்தாலியில் செட்டில் ஆகி விடுவார் ஜாலியாக...
Rate this:
Share this comment
Sriram - chennai,இந்தியா
09-மார்-201921:19:40 IST Report Abuse
Sriramஅதுக்கு நம்ம தமிழ்நாட்டுல கேரளாவுல காஷ்மீர்ல நெறைய MPகள் வேண்டும். இங்க உள்ளவங்க அறிவு ஜீவிகள் அவ்வளவு சீக்கிரம் ஜெயிக்க விட மாட்டாங்க......
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
04-மார்-201917:24:18 IST Report Abuse
Malick Raja என்னென்ன சொல்ல முடியுமோ அத்தனையும் சொல்லி முடியுங்கள் .. அள்ளி முடித்தவர்கள் மட்டும் கேட்க வாய்ப்பு இருக்கிறது .. மற்றவர்கள் கிள்ளியெறிந்து விடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X