பாக்., விமானியை அடித்துக் கொன்ற பாகிஸ்தானியர்கள்

Updated : மார் 03, 2019 | Added : மார் 03, 2019 | கருத்துகள் (83)
Advertisement

இஸ்லாமாபாத் : பாக்., விமானப்படை விமானியை, இந்திய விமானி என நினைத்து பாகிஸ்தானியர்களே அடித்துக் கொன்றதாக லண்டன் குடியுரிமை பிரிவு வழக்கறிஞர் கலீத் உமர் தெரிவித்துள்ளார்.



இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாக்.,ன் எப் 16 ரக விமானத்தை, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். பாக்., பதிலுக்கு தாக்கியதில் அபிநந்தன் சென்ற மிக் 21 ரக விமானமும் நொறுங்கியது. அபிநந்தன் பாராசூட் மூலம் தப்பித்து, தவறுதலாக பாக்.,எல்லைக்குள் இறங்கிய போது அங்கிருந்த பாகிஸ்தானியர்கள் சிலர், அபிநந்தன் மீது கற்களை வீசி தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய போதே பாக்.,ராணுவம் அபிநந்தனை சிறைபிடித்தது.



அபிநந்தனை போன்று எப் 16 விமானத்தை இயக்கிய பாக்.,விமானப்படை விங் கமாண்டர் ஷாஜஸ் உத் தின் என்பரும் பாராசூட் மூலம் தப்பித்து, பாக்., எல்லைக்குள் இறங்கி உள்ளார். அவரை இந்திய விமானி என தவறாக நினைத்து, அங்கிருந்த பாகிஸ்தானியர்கள் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர் உயிரிழந்துள்ளதாக லண்டன் வாழ் பாகிஸ்தானியரான குடியுரிமை வழக்கறிஞர் உமர் தெரிவித்துள்ளார். இதனை நேரில் பார்த்த சாட்சிகளும், வீடியோ ஆதாரங்களும் உள்ளதாகவும் உமர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ டிவி செய்திகளில் ஒளிபரப்பப்பட்ட போது தான் பார்த்ததாகவும், பின்னர் அந்த வீடியோ பாக்.,ன் சென்சார் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டதாகவும், சிறிது நேரத்தில் ஆன்லைனில் அந்த வீடியோ நீக்கப்பட்டதாகவும் உமர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த வீடியோவை தான் ஏற்கனவே பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
05-மார்-201910:27:25 IST Report Abuse
Dinesh Pandian நான் பாக்கிஸ்தான் காரன் அப்படினு சொல்லி இருப்பான். கில்ஜித் பல்டிஸ்டான் காரன் அவன் மேல செம கடுப்பு ஆகி கொன்னுட்டாங்க
Rate this:
Share this comment
Cancel
Sangeedamo - Karaikal,இந்தியா
04-மார்-201916:44:05 IST Report Abuse
Sangeedamo பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்... என்ற குறள்தான் ஞாபம் வருது...
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
04-மார்-201911:35:13 IST Report Abuse
ganapati sb இங்கே ராணுவம் மீது கல்லெறிபவர்களை விட அங்கே ராணுவம் மீது கல்லெறிபவர்கள் அதிகம் என தெரிகிறது . இதை தான் முட்டாள் பாக் ராணுவம் இரண்டு இந்தியர் பிடி பட்டார் ஒருவர் எங்களிடமும் மற்றொருவர் பலத்த காயமடைந்ததால் ஆஸ்பத்திரியிலும் இருக்கிறார் என கூறி பின் அது பாகிஸ்தானியர் என தெரிந்து ஒருவர் மட்டுமே உள்ளார் என தெரிவித்தது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X