அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசுக்கு சிதம்பரம் மனதார பாராட்டு

Updated : மார் 03, 2019 | Added : மார் 03, 2019 | கருத்துகள் (113)
Share
Advertisement

சென்னை: கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஆளும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மனதார பாராட்டு தெரிவித்துள்ளார்.



latest tamil news


சென்னையில் நடந்த புத்தக வெளீயிட்டு விழாவில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்,காங்கிரஸ் கட்சி 5 முறை கங்கையை சுத்தம் செய்ய முயற்சி செய்தது. ஆனால் முடியவில்லை.

சமீப காலமாக ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் மேக்ஸிஸ், சட்டவிரோத பணபரிமாற்றம் என பல்வேறு குற்றச்சாட்டுகளை சிதம்பரமும் அவரது மகனும் எதிர்கொண்டுள்ளனர். மத்திய அரசின் மீது எப்போதும் விமர்சனம் செய்யும் சிதம்பரம் தற்போது மத்திய அரசை பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது; மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். ஜி.எஸ்.டி.,யும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை பணியும் பாராட்டுக்குரியது. நாள் ஒன்றுக்கு நாங்கள் செய்ததை விட பல கி.மீட்டர் சாலை அமைத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை பணிகள் வெற்றிகரமாக நடந்துள்ளது. அனைவருக்கும் வங்கிக்கணக்கு திட்டம் நல்ல பாராட்டுதலுக்குரியது. எங்களை விட கூடுதலாக 35 கோடி பேருக்கு வங்கி கணக்கு துவங்கும் ஜன்தன் திட்டம் நல்ல முறையில் செயல்பட்டுள்ளது.


latest tamil news



கங்கை நதி தூய்மைப்படுத்தும் பணியை காங்கிரஸ் ஆட்சியில் 5 முறை முயற்சிகள் எடுத்தோம். இவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. ஆனால் பா.ஜ., அரசு நடவடிக்கை மிக முனைப்புடன் உள்ளது. இதனால் தோல்வி பெறாது என நினைக்கிறேன். இதனை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா
04-மார்-201906:12:14 IST Report Abuse
Jagath Venkatesan இவருக்கு சமீபகாலமாக உடல் நிலை சரியில்லை.... அதற்காகத்தான்...இப்படியெல்லாம் பேசுகிறார்.....தலை சும்மா இருக்க வால்...எல்லாம் ....ஆடுகிறது....எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய்... சொந்த நாட்டிலே....சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறாய் ...
Rate this:
Cancel
ராமநாதன் நாகப்பன் எங்கே எந்த நிகழ்வில் இப்படிப்பட்ட கருத்தை அவர் தெரிவித்தார்?
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
04-மார்-201904:44:18 IST Report Abuse
Siva Kumar இனி எப்போ குடும்பத்தோடு பாஜகவில் ஐக்கியம் ஆகப் போகிறார்? எல்லாம் கோர்ட்டும் கேசும் படுத்தும் பாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X