பெண்கள் போற்றப்பட வேண்டும் : நடிகை தாஷ்மிகாவின் ஆசை| Dinamalar

பெண்கள் போற்றப்பட வேண்டும் : நடிகை தாஷ்மிகாவின் ஆசை

Added : மார் 03, 2019 | கருத்துகள் (1) | |
பெண்மையின் உணர்ச்சிகளை கதாபாத்திரத்திற்கு ஏற்ப பிரதிபலித்து தன் முகபாவங்கள் மூலம் வெளிக்கொணர்ந்து நடிப்பால் குறும்பட உலகில் தனி இடத்தை தக்க வைத்து வருகிறார் நடிகை தாஷ்மிகா. இவர் இயக்குனர் கலையின் இயக்கத்தில் வெளியான 'செல்லக்காசு' குறும்படத்தில் உதவி இயக்குனராக 2017 சினிமாவில் நுழைந்தார். இரண்டரை ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட குறும்படங்கள், ஆவணப்படங்கள்,
பெண்கள் போற்றப்பட வேண்டும் : நடிகை தாஷ்மிகாவின் ஆசை

பெண்மையின் உணர்ச்சிகளை கதாபாத்திரத்திற்கு ஏற்ப பிரதிபலித்து தன் முகபாவங்கள் மூலம் வெளிக்கொணர்ந்து நடிப்பால் குறும்பட உலகில் தனி இடத்தை தக்க வைத்து வருகிறார் நடிகை தாஷ்மிகா. இவர் இயக்குனர் கலையின் இயக்கத்தில் வெளியான 'செல்லக்காசு' குறும்படத்தில் உதவி இயக்குனராக 2017 சினிமாவில் நுழைந்தார். இரண்டரை ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட குறும்படங்கள், ஆவணப்படங்கள், விருதுக்கான படங்கள், விழிப்புணர்வு குறும்படங்களில் நடித்துள்ளதுடன் தற்போது மூன்று சினிமாக்களிலும் நடித்து வருகிறார். சினிமா படப்பிடிப்புக்காக தேனியில் முகாமிட்டிருந்தவருடன் மகளிர் தினத்திற்காக பேசியதிலிருந்து..
* பெற்றோர்அன்புக்கும் கண்டிப்புக்கும் அப்பா லட்சுமணன். பாசத்திற்கும் பண்புக்கும் அம்மா காமாட்சி, பரிவுக்கும் நேசத்துக்கும் தம்பி முரளிதரன்.

* படித்ததுநாகபட்டினம் தான் என் சொந்த ஊர். அங்கு பிறந்து கும்பகோணத்தில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்தேன்.

* சினிமா வாய்ப்புபள்ளி, கல்லுாரியில் கவிதை, கட்டுரை, கதை எழுதுவது வழக்கம். முகநுாலில் எழுதியதன் மூலம் வாய்ப்பு கிடைத்தது. 2017ல் கூத்துப்பட்டறையில் இயக்குனர் கலையிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன். இயக்குனர் பாக்யராஜின் உதவியாளர் தாமோதரன் இயக்கிய 'அசரிரீ ' குறும்படத்தில் கதாநாயகியானேன். இயக்குனர் ராஜபாண்டி இயக்கிய 'தீண்டாதே' குறும்படத்தில் தாயாக நடித்தேன். பத்துக்கும் மேல் குறும்படங்களில் நடித்ததால் வரவேற்பு கிடைத்தது. அசரிரீ குறும்படம் சினிமாவாகிறது. அதிலும் கதாநாயகி தான். பெயரிடப்படாத சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிட்டியுள்ளது.

* அழகின் ரகசியம்...நல்ல துாக்கம், சரிவிகித உணவு முறைகளை கடைபிடித்தாலே அழகு மிளிரும்.

* பெண்மையை முன்னிறுத்த காரணம் நடித்த குறும்படங்கள் பெண்களின் பிரச்னைகளை மையப்படுத்துவதாக இருந்தன. பெண் குழந்தை, பெண்களுக்கான சமூக சமநிலை அங்கீகாரம் இன்றும் கிடைக்கவில்லை. பெண் குழந்தைகள் மீது பாலியல் வன்முறைகள் தொடர்கின்றன. தொழில்நுட்பத்தில் 4ஜி, 5ஜி என வளர்ந்த நிலையிலும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்த சமூக மாற்றத்திற்கான படங்களை இயக்குனர்களின் காட்சிப்படுத்தலில் நான் ஒரு கருவி மட்டுமே.

* ரோல் மாடல்எனக்கு நானே ரோல்மாடல்.

* பிட்னஸ் ரகசியம்யோகா, சூரிய நமஸ்காரம் தினமும் செய்தால் உடம்பு கச்சிதமாக 'செட்' ஆகிவிடும்.

* மகளிர் தினம் குறித்து...பெண்கள் இந்த சமுதாயத்தில் மதிக்க கூடியவர்கள். அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சியும், மிக அழகான அதே நேரத்தில் ஆழமான கருத்தை கொடுக்கக்கூடியவை. அவர்களுக்கான தினம் ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டியது அல்ல. ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியது. மானுடபிறவி உள்ள வரை பெண்கள் போற்றப்பட வேண்டும்.இவரை வாழ்த்த thashmiga lakshman.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X