பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பதிலடி
ஓ.ஐ.சி., தீர்மானத்துக்கு மத்திய அரசு ..
காஷ்மீர் விவகாரத்தில் தலையிட எதிர்ப்பு

புதுடில்லி: ஓ.ஐ.சி., எனப்படும், முஸ்லிம் நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில், காஷ்மீர் பிரச்னை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'காஷ்மீர் எங்கள் நாட்டின் ஒரு பகுதி. இது, முற்றிலும் உள்நாட்டு பிரச்னை. இதில், மற்றவர்கள் தலையிட தேவையில்லை' என, மிகவும் உறுதியுடன் பதில் அளித்துள்ளது.

ஓ.ஐ.சி., எனப்படும், முஸ்லிம் நாடுகள் கூட்டமைப்பின், வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, வளைகுடா நாடான, யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரசு எமிரேட்சின், அபுதாபியில் சமீபத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, நம் வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அண்டை நாடான, பாகிஸ்தானின் கடும் எதிர்ப்பையும் மீறி, முதல் முறையாக, இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, கூட்டத்தில், சுஷ்மா சுவராஜ் பங்கேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த மாநாட்டை, பாக்., புறக்கணித்தது.

இரண்டு நாள் மாநாட்டின் இறுதியில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், 'ஜம்மு - காஷ்மீர் விவகாரம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே முக்கியமான பிரச்னையாக உள்ளது. தெற்காசியாவில் அமைதி ஏற்பட இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மாநாட்டில், தேவையில்லாமல்காஷ்மீர் விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக, கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

ஓ.ஐ.சி., மத்திய அரசு, பதிலடி, காஷ்மீர்,


இது குறித்து, நம் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர், ரவீஸ் குமார் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீர் குறித்து, பல முறை நம் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவித்து விட்டோம். அது, இந்தியாவின் ஒரு பகுதி. இது முற்றிலும் உள்நாட்டு பிரச்னை. இதில், மற்ற நாடுகளை தலையிட தேவையில்லை; மற்றவர்களின் மத்தியஸ்தமும் தேவைஇல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

லஷ்கர் அமைப்புடன்தொடர்பு: அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்



மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 2008ல், பாக்.,கை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த

Advertisement

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அமெரிக்கர்கள் உட்பட, 166 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அமெரிக்க பார்லிமென்டில், குடியரசு கட்சி, எம்.பி., ஜிம் பாங்க்ஸ் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவை சேர்ந்த, 'ஹெல்பிங் ஹேண்ட் பார் ரிலீப் அண்ட் டெவலப்மென்ட்' என்ற அரசு சாரா அமைப்புக்கு, மும்பையில் தாக்குதல் நடத்திய லஷ்கர் - இ - தொய்பா இயக்கத்துடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.இந்த அமைப்பு, பாக்.,கில் செயல்படும், பலா - இ - இன்சானியாட் என்ற அமைப்புடன், வெளிப்படையாக தொடர்பு வைத்துள்ளது. பலா - இ - இன்சானியாத், பயங்கரவாத அமைப்பு என, 2016ல், அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டது.எனவே, அமெரிக்காவில் செயல்படும் இந்த அரசு சாரா அமைப்பின் செயல்பாடு, பயங்கரவாத அமைப்புகளுடன் அதற்குள்ள தொடர்புகள் குறித்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி வரும், அரசு சாரா அமைப்புக்கு எதிராக, தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மார்-201912:16:00 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடுதான் சரி. இந்தியாவின் உள்விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடும் என்றால் பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் நாமும் தலையிடலாம்.

Rate this:
Karthik - Chennai,இந்தியா
04-மார்-201917:39:25 IST Report Abuse

Karthikஅதன் பலுசிஸ்தான் பேரு என்னங்க. ...

Rate this:
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
04-மார்-201921:31:57 IST Report Abuse

HSRநாயின் போட்டோ வைக்கும் அளவுக்கு உனக்கு தகுதி இல்லை.. மாற்றிவிடு ...

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
04-மார்-201910:52:18 IST Report Abuse

ganapati sb35A வை நீக்கி இந்துக்களை காஸ்யபபுரத்தில் குடி அமர்த்தினால் தான் இப்பிரச்சனை முற்றாக தீரும்

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-மார்-201910:05:05 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்நேத்து ஓ.ஐ.சி பத்தி ஆஹா, ஓஹோன்னு போட்டு, பாகிஸ்தானுக்கு மூக்குடைப்புன்னு போட்டிருந்தாங்களே. அது வேறயா?

Rate this:
இளமுருகு - தொப்பூர்,இந்தியா
04-மார்-201919:46:19 IST Report Abuse

இளமுருகுநாம கலந்துக்கிட்டதால, பாகிஸ்தான் இந்த மாநாட்டுல பங்கெடுத்துக்காம செஞ்சது நமது ராஜதந்திரம். இந்த காஷ்மீர் விஷயம், அம்மாநாட்டில் செய்யப்பட தீர்மானத்தைப் பற்றியது. இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்தான். விவரம் தெரியாம சும்மா எதையாவது மோடி எதிர்ப்புங்கற தேவை இல்லாத விஷத்தை உங்க மனசுல ஏத்திக்கிட்டு வழக்கப்படி உளறிக்கிட்டிருக்காம, என்ன நடக்குதுன்னு கொஞ்சம் ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாருங்க. ...

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X