பொது செய்தி

இந்தியா

வீரர்களுக்கு ரூ.110 கோடி நிதி அளிக்கும் பார்வையற்றவர்

Updated : மார் 04, 2019 | Added : மார் 04, 2019 | கருத்துகள் (63)
Advertisement

புதுடில்லி: புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு, மும்பையை சேர்ந்த பார்வையற்ற விஞ்ஞானி, ரூ.110 கோடி நிதி அளிக்க முன்வந்துள்ளார்.



மும்பையை சேர்ந்த 44 வயதாகும் முர்தாஜ் ஏ.ஹமீது பிறவியிலேயே கண்பார்வை இழந்தவர். கோட்டாவில் பட்டப்படிப்பு முடித்த இவர் தற்போது மும்பையில் விஞ்ஞானியாகவும், ஆராய்ச்சியாளராகவும். பல்வேறு தொழில்நுட்ப தொழில்களும் நடத்தி வந்தார். இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ, ரூ.110 கோடி நிதி அளிக்க அவர் முன்வந்துள்ளார். இத்தொகையை, பிரதமர் தேசிய மீட்பு நிதிக்காக, பிரதமரிடம் நேரடியாக சந்தித்து கொடுக்க அனுமதி கேட்டு, பிரதமர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் அனுமதி கேட்டுள்ளார்.


இதுகுறித்து தேசியப் பேரிடர் நிவாரண நிதி செயலாளர் அக்னி குமார் தாஸ் உடன் போன் மூலம் பேசி உள்ளார். இதுகுறித்து ஹமீது கூறுகையில், 'நாட்டிற்கான உயிர் தியாகம் செய்த அவர்களின் தியாகம், ஒவ்வொரு இந்திய குடிமகனின் ரத்தத்திலும் கலந்துள்ளது. இந்த எண்ணம் தான் அவர்களுக்கு உதவ வேண்டும் என என்னை தூண்டியது' என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 'கடந்த 2016ம் ஆண்டில், 'Fuel Burn Radiation Technology' தொழில்நுட்பத்தை கண்டறிந்தேன். இத்தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு வாகனத்தையோ அல்லது ஒரு பொருளையோ, கேமரா, ஜிபிஎஸ் வசதி இல்லாமல் கண்காணிக்க முடியும். இதனை கடந்த 2016ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறைக்கு இலவசமாக வழங்க முன்வந்தேன். ஆனால் அதற்கான ஒப்புதல் 2018ம் ஆண்டே கிடைத்தது. ஆனாலும் அதில் முன்னேற்றம் இல்லை. இத்தொழில்நுட்பத்துக்கு அரசு சரியாக அங்கீகாரம் அளித்திருந்தால், புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்' என வருத்தம் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramanathan - Ramanathapuram,இந்தியா
06-மார்-201908:05:25 IST Report Abuse
ramanathan இந்த மாமனிதர் நீண்ட ஆயுளுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். இவர் தான் அல்லா வை அறிந்த மனிதர்.வாழ்க
Rate this:
Share this comment
Cancel
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-மார்-201909:14:27 IST Report Abuse
Saleem மிக உயர்ந்த மனிதராய் பார்க்கிறேன்... மேலும் உங்களுக்கு இறைவன் அருளும் ஆசியும் புரிய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் ...
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
05-மார்-201904:21:44 IST Report Abuse
Cheran Perumal முத்தான மனிதர். பார்வையில்லாவிட்டால் என்ன, இவருக்கு அகக்கண் திறந்துள்ளதே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X