பொது செய்தி

இந்தியா

இன்று அபிநந்தன்; அன்று தனோவா

Updated : மார் 04, 2019 | Added : மார் 04, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி: இன்று இந்திய விமானப் படை விமானி அபிநந்தனுக்கு நடந்ததைப் போல், 20 ஆண்டுகளுக்கு முன் தற்போதைய விமானப்படை தளபதி தனோவாவுக்கும் நடந்தது.






1999ல் கார்கில் போர் நடந்தபோது பதிண்டா நகரில் உள்ள இந்திய விமானப்படை முகாமில் விங் கமாண்டராக பணிபுரிந்தவர் தனோவா. கார்கில்லைத் தாண்டி திராஸ் மற்றும் படாலிக் ஆகிய இடங்களில் விமான தாக்குதல் நடத்தும் பொறுப்பு தனோவாவுக்கு ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பணியை திறமையாக செயல்படுத்தினார் தனோவா.





போட்டோ பணி


அப்போது, கார்கில் மலையில் எதிரிகளின் நிலை பற்றி விமானத்தில் சென்று புகைப்படம் எடுத்து திரும்பும் பணி தான் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தனோவாவும் அவரது சகாக்களும் அதோடு நில்லாமல், எதிரிகளின் நிலைகள் மீது குண்டு வீசித் தாக்கும் வேலையையும் செய்தனர். இரவு நேரத்தில் மலைப்பகுதிகளில் குண்டு வீசிய அனுபவம் இருந்தது, அவருக்கு கைகொடுத்தது.
இந்த வீரதீரத்தைப் பாராட்டி தனோவாவுக்கு யூத் சேவா விருது வழங்கி கவுரப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழில், ‛‛குறுகிய நேரத்தில் தனது விமானத்தை குண்டு வீச்சுக்கு தயார்படுத்தினார். போர்க்களத்தின் முன்னணியில் இருந்து தலைமை வகித்து எதிரிகளின் நிலை மீது துல்லியமாக குண்டு வீசி தாக்கினார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அபிநந்தன் சாகசம்


மிக் 21 ரக விமானத்தில் அதிநவீன எப்-16 விமானத்தை விரட்டிச் சென்ற அபிநந்தனின் வீரம், தனோவாவுக்கு பழைய நினைவுகளை கிளறிவிட்டது. இன்னும் சொல்லப் போனால், என்னை விட அபிநந்தன் அதிக சாகசம் செய்துள்ளார் என்றாராம் தனோவா.எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய முதல் இந்திய விமானி அபிநந்தன் தான். அதுவும் மிக் 21 பைசன் விமானத்தை வைத்துக்கொண்டு அந்த சாகசத்தை செய்துள்ளார். மிக் 21 விமானம் நவீனமானதாக இருந்தாலும், எப்-16க்கு அது இணையாகாது. ஏனென்றால் போர் விமானங்களிலேயே மேம்பட்டது எப்-16 என்று கூறப்படுகிறது.
பிப்.28ல் காஷ்மீருக்குள் வந்த பாக்., விமானங்களை துரத்திய அடித்த இந்திய விமானங்களில் ஒன்று தான் அபிநந்தன் ஓட்டிய விமானமும். பாக்., விமானப் படையின் முக்கிய அங்கமான எப்16ஐயும் வீழ்த்தியது, அந்நாட்டுக்கு பேரிழப்பு.மீண்டும் விமானப்படையில் அபிநந்தன் சேர வேண்டும் என்பதையே தனோவாவும் விரும்புகிறாராம். ‛‛அபிநந்தனின் உடல்நிலை தகுதி பெற வேண்டும். இதில் ரிஸ்க் எடுக்க முடியாது'' என்கிறார் அவர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
05-மார்-201905:27:53 IST Report Abuse
 nicolethomson அபிநந்தன் ட்ரைனிங் ஹெட் ஆகலாம்
Rate this:
Share this comment
Cancel
Gopalkrishnan GS Secunderabad - Hyderabad,இந்தியா
04-மார்-201920:33:17 IST Report Abuse
Gopalkrishnan GS Secunderabad ஒரு தமிழன். அதுவும் அரதப் பழசான விமானத்தை வைத்துக்கொண்டு மிகவும் நேர்த்தியான உயர்தர விமானத்தை வீழ்த்துவதற்கு தில் தேவை. அவரைத்தான் நமது சமூக வளைத்த தளங்களில் பாராட்ட வேண்டும். நாமோ தமிழகத்தில் யில்லாத பிஜேபி யை சாடிக்கொண்டு இருக்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-மார்-201919:57:18 IST Report Abuse
Natarajan Ramanathan ஏனென்றால் போர் விமானங்களிலேயே மேம்பட்டது F-16 என்று கூறப்படுகிறது. பிறகு ஏன் F16, ரஃபேல் விமானத்தைவிட விலை மிகவும்குறைவாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X