பொது செய்தி

தமிழ்நாடு

ஈஷா மைய சிவராத்திரி விழா; உற்சாக கொண்டாட்டம்

Updated : மார் 05, 2019 | Added : மார் 04, 2019 | கருத்துகள் (26)
Advertisement

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.


கோவை மேற்கு தொடர்ச்சி மலைச்சாரலில், ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா, விமர்சையாக கொண்டாடப்படுகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு பக்தர்களும் பங்கேற்பர். நடப்பாண்டு விழா கடந்த, 1ம் தேதி 'யக் ஷா' திருவிழாவுடன் துவங்கியது. இதில், இந்துஸ்தானி, கர்நாடக கலைஞர்களின் இசைக்கச்சேரியும், 3ம் தேதி லீலா சாம்சன் மற்றும் ஸ்பந்தா குழுவினரின் 'நதி' என்ற தலைப்பில் நடன நிகழ்ச்சியும் நடந்தது.

தொடர்ந்து, ஈஷா சம்ஸ்கிருதி மற்றும் பஹிரா கேத்தா கான் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. பஞ்சபூத ஆராதனையுடன் மாலை, 6:00 மணிக்கு விழா துவங்கியது. காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக, 'மகிழம்' மரக்கன்று நடப்பட்டது. வீரர்களின் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ்விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வரவேற்று சூர்ய குண்டம், நாகா சந்திதி, லிங்க பைரவி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றார்.

பின்னர், சத்குருவுடன், ஜனாதிபதி, ஆராதனையில் பங்கேற்றார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பின்னர், நடுநிசியில், 112 அடி ஆதியோகி சிலை முன், மிகவும் சக்திவாய்ந்த மஹா மந்திர உச்சாடனையுடன் 'சம்போ' மந்திரத்தை மக்களுக்கு வழங்கி, சத்குரு பேசியதாவது: நமது குடியரசு தலைவர் ஈஷா யோகா மையத்துக்கு வருகை தந்து, மஹா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டது பெருமையளிக்கிறது. ஆதியோகி என்பவர் இறந்த காலத்தை சேர்ந்தவர் அல்ல; எதிர்காலத்துக்கானவர்.

மனிதன் தன் உச்சபட்ச நிலையை அடைய முடியும் என, 15 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், உலகுக்கு உணர்த்தியவர். நாம் மதங்களை தாண்டி, மனிதநேயத்தை நோக்கி நகர வேண்டும். ஜாதி, மதம், இனம், தேசம் கடந்து அனைவருக்கும் நன்மை பயக்கும் விதமாக, யோகா என்னும் அற்புத கருவியை அறிவியல்பூர்வமாக உலகம் முழுதும் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

பின்னர், பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்களின் பாரம்பரிய இசை, நடனங்கள் அரங்கேறியது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அமித் திரிவேதி, ஹரிஹரன், பின்னணி பாடகர் கார்த்திக் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள், துள்ளல் நடனம் போட வைத்தன. இத்துடன், ஆதியோகியின் சிறப்பு குறித்து நடந்த பிரத்யேக 'லேஷர் ஷோ' பிரமிக்க வைத்தது.


பிறர் துன்பத்தை துடைத்து வாழ ஜனாதிபதி அழைப்பு!விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: நமது நாடு ஆன்மிக பூமி. இங்குள்ளது போல், விழாக்களும் பண்டிகைகளும் வேறு எந்த நாட்டிலும் இல்லை. நம் நாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், குஜராத் முதல் அசாம் வரையும், மஹா சிவராத்திரியை லட்சக்கணக்கானோர் கொண்டாடுகின்றனர். 'ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரிக்கின்றனர். சிவபெருமாள் விஷம் அருந்தி மற்றவர்களை காத்து நீலகண்டர் ஆனார். இதன் தத்துவம், நாம் பிறரது துன்பத்தை துடைத்து வாழ வேண்டும்.

உலகில் பெண்ணுரிமை பற்றி தற்போது அதிகம் பேசப்படுகிறது. ஆனால், அர்த்த நாரீஸ்வரர் உருவம், ஆண் பெண் சமம் என்பதை விளக்குகிறது. வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஜப்பான், சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில், சிவ வழிபாடு இருந்துள்ளது. கயிலாய யாத்திரையின் அனுபவத்தை, தென் கயிலாயமான வெள்ளியங்கிரி அளிப்பதால், இளைஞர்கள் யோகா பயிலுவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மார்-201906:10:46 IST Report Abuse
kulandhai Kannan Great work by Jaggi Vasudev. நானும் ஒரு காலத்தில் ஜக்கி, ரவிசங்கர், ராம்தேவ், பங்காரு அடிகளார் போன்றோர்மீது பெரிய அபிப்ராயம் இல்லாமல் இருந்தவன்தான். ஆனால் இன்றைய தினம் இவர்களை போன்றோர் இந்து மதத்திற்கு மிக அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
05-மார்-201918:04:49 IST Report Abuse
J.Isaac யானை வழித்தடத்தில் 109 ஏக்கர் இடத்தை ஆக்கிரப்பு செய்து ஈசா மையம் ஆரம்பித்து அதை காப்பாற்ற பிரதமரையும் ஜனாதிபதியையும் அழைத்து விழா நடத்துகிறார். யோகா செய்வது நடத்தையில் மனதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மது அருந்துகிறவன் அதை விட வேண்டும். கஞ்சா உபயோகிக்கிறவன் அதை விட வேண்டும். இல்லை என்றால் எல்லாம் மாய்மால பக்தி. மாய்மால வாழ்க்கை
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
06-மார்-201910:17:58 IST Report Abuse
Chowkidar NandaIndiaஅதற்கு முன் அங்கே இருந்த காட்டையே நிர்மூலம் செய்து காருண்யா என்ற அமைப்பை ஏற்படுத்தி அங்குள்ள பாதி மக்களை மூளை சலவை செய்து மதமாற்றம் செய்தவர்களை பற்றி சொல்ல மறந்து விட்டீர்களே. பணம் கொடுத்து, ஆசை வார்த்தை சொல்லி மதமாற்றம் செய்பவர்கள் நீங்கள் சொன்னவர்களைவிட கேவலமானவர்கள் இல்லையா? இதுவா இறைபக்தி? இதுவா நல்வாழ்க்கை?...
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
06-மார்-201912:16:35 IST Report Abuse
Chowkidar NandaIndiaஈஷா அங்கு வருவதற்கு முன்னரே அங்கிருந்த காட்டை பெருமளவில் அழித்து பிரம்மாண்டமாய் காருண்யா பல்கலைக்கழகமும் காருண்யா நகரும் உருவாக்கப்பட்டதை நீங்கள் எப்படி மறந்துவிட்டீர்கள்? காசு கொடுத்து, மூளை சலவை செய்து மதம் மாற்றுபவர்கள் நீங்கள் சொன்னவர்களை விட கேவலமானவர்கள் இல்லையா? அப்படி செய்து வாழ்க்கை நடத்துவது ஒரு வாழ்க்கையா?...
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
05-மார்-201913:09:07 IST Report Abuse
hasan சின்னத்தம்பியின் (யானை) வழித்தடத்தில் ஆசிரமம் (செய்தியில் படித்தது )
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
05-மார்-201914:19:43 IST Report Abuse
Chowkidar NandaIndiaசெய்தியில் வந்தது ஈஷா ஆசிரமம் அல்ல. காருண்யா அமைப்பு....
Rate this:
Share this comment
Sittu Kuruvi - covai,இந்தியா
05-மார்-201914:20:21 IST Report Abuse
Sittu Kuruviஅதை சுற்றி உள்ள தென்னந்தோப்புகள் யாருடையது? அதுவும் யானை வழித்தடமா? மலைகிராமங்கள் யானை வழித்தடமா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X