அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
dmk,stalin,திமுக,ஸ்டாலின்,கூட்டணி,லோக்சபா தேர்தல்

சென்னை: தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஐம்பது சதவீதத்திற்கும் மேலான தொகுதிகளை ஒதுக்கி விட்டு மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிட தி.மு.க. முடிவு செய்துள்ளது. காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கு சரிபாதியான தொகுதிகளை தி.மு.க. தாரைவார்த்துள்ளது. இதற்கிடையில் கூட்டணிக்கு இழுத்தடித்த தே.மு.தி.க.வை கைகழுவி விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் தி.மு.க. இன்று உடன்பாடு காண உள்ளது.

கடந்த 2014 லோக்சபா தேர்தலில் தி.மு.க. 34 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், முஸ்லிம் லீக் போன்றவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. அக்கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க. அணியில் காங்கிரஸ் ஒன்பது தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. முஸ்லிம் லீக் - கொ.ம.தே.க. - ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வைகோவின் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரு தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்சிகளை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சிக்கும் கடைசி நேரத்தில் ஒரு தொகுதி ஒதுக்க வாய்ப்பு உள்ளது. தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதற்கு இழுத்தடித்த தே.மு.தி.க., வை கைகழுவி விட்டு மற்ற கட்சிகளுக்கு ஐம்பது சதவீதத்திற்கு மேலான தொகுதிகளை ஒதுக்கவும் மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிடவும் தி.மு.க. முடிவு செய்துள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு அதிகமான தொகுதிகளை தாரைவார்த்து கொடுப்பதன் வாயிலாக 21 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வியூகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 21 தொகுதிகளிலும் தி.மு.க.வே போட்டியிட உள்ளது. அதன் வெற்றிக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உட்பட ஒன்பது

கட்சிகளின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் என கணக்கு போடப்படுகிறது. இதன் வாயிலாக 21 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என தி.மு.க. திட்டமிடுகிறது. அப்படி வெற்றி பெற்றால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்றும் அக்கட்சி கருதுகிறது.

தி.மு.க.விடம் தற்போது 89 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்; காங்கிரசுக்கு எட்டு பேர் உள்ளனர். 21 தொகுதிகளையும் பிடித்து விட்டால் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் பலம் கிடைத்து விடும். எனவே இந்த தந்திரத்தில் தான் லோக்சபா தேர்தலில் கடந்த முறை போல் அதிக தொகுதிகளில் போட்டியிடாமல் பாதி தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தாரைவார்க்கும் முடிவுக்கு தி.மு.க. தலைமை

வந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. வரும் தேர்தலில் 20க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிட முன்வந்ததற்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற கணக்கே காரணம்.

அதேபோல கடந்த தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது அ.தி.மு.க. அணியில் பா.ம.க. - ஏழு; பா.ஜ. - ஐந்து புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. - த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் அ.தி.மு.க.வும் 20க்கும் குறைவான தொகுதிகளில் தான் போட்டியிடும் நிலை உள்ளது. இதற்கு காரணமும் இடைத்தேர்தல் வெற்றி தான். 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 10 தொகுதிகளையாவது பிடிக்க வேண்டும் என்பது தான் அ.தி.மு.க.வின் இலக்கு.

அப்படி ஜெயித்தால் தான் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்பதால் கூட்டணி பலத்தை அதிகரித்து வருகிறது. இப்படி இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை தாரைவார்ப்பதற்கு அக்கட்சிகளில் செல்வாக்கு மிக்க தலைவர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா மறைவும் மற்றொரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இரு கட்சிகளின் தலைமையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை கூட்டணி கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தகுதிக்கு அதிகமாகவே தொகுதிகளை பெற்றுள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-மார்-201923:34:46 IST Report Abuse

Pugazh Vஒரு சிறிய பிரிவு திமுகவை எதிர்த்து எழுதி தானே படித்து ரசித்து கொள்கிறது. இவர்கள் அணி வி.காந்த் வீட்டுக்கு இன்னும் காவடி தூக்கி கொண்டு இருக்கிறது. அவர் செம்மயா ஆட்டம் காட்டறார். கூட்டணி க்கு ஒத்துக் கொள்ள வில்லை என்றால் காவடியை ஓரமாக வைத்துவிட்டு கழுவி ஊத்தி கோலம் போடுவார்கள். வெய்ட் அண்ட் ஸீ.

Rate this:
Arasu - Ballary,இந்தியா
11-மார்-201912:19:54 IST Report Abuse

Arasuஅதாவது நீங்கள் செய்ததை மற்றவரும் செய்வார்கள் என்பதை உணருங்கள்...

Rate this:
Pandi - Katumandu,நேபாளம்
05-மார்-201921:56:26 IST Report Abuse

Pandiஎல்லாத்தையும் தாரைவார்க்கும் எடப்பாடி. முற்றும் துறக்கும் அடிமைகள். கண்ணீர் மல்க கதறும் தொண்டன்.

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
05-மார்-201920:23:20 IST Report Abuse

Bhaskaranவைகோ ஸ்தாலினை முதல்வராக விடமாட்டார் தன் ராஜதந்திர வேலைகளை துவங்குவார் இனி கேப்டன் அதிமுக சொல்படிதான் கேட்கணும் இல்லேன்னா கமலோட தான் போகணும்

Rate this:
மேலும் 85 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X