எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆச்சரியம்!
மதிப்புமிக்க ராஜ்யசபா, 'சீட்'டுகளை
கூட்டணிக்கு தாரைவார்க்கும் அ.தி.மு.க.,

தேசிய அரசியல் நிலவரங்களை சரிவர கணக்கில் எடுக்காமல், மதிப்புமிக்க ராஜ்யசபா சீட்டுகளை, அ.தி.மு.க., மேலிடம், கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்ப்பது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

A.D.M.K,ADMK,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்


ஜூலை, 24ல், தமிழகத்தை சேர்ந்த, ராஜ்யசபா, எம்.பி.,க்கள் கனிமொழி, டி.ராஜா, மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜுனன் ஆகிய ஆறு பேரின் பதவிக் காலம் முடிவடைகிறது. மொத்தம், 34 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தால் தான், தமிழகத்திலிருந்து, ராஜ்யசபாவுக்கு, ஒரு எம்.பி., தேர்வாக முடியும். சட்டசபையில், கட்சிகளுக்குள்ள தற்போதைய பலத்தின்படி, தி.மு.க.,வுக்கு இரண்டு பேரும், அ.தி.மு.க.,வுக்கு மூன்று பேரும், புதிதாக தேர்வு செய்யப்படுவது உறுதி.

மீதமுள்ள ஒரு இடத்துக்கு தான் போட்டி. ஆனாலும், ஐந்து பேரை தேர்வு செய்தபின், தி.மு.க., விடம், 27 எம்.எல்.ஏ.,க்களும், அ.தி.மு.க.,விடம், எட்டு அல்லது ஒன்பது எம்.எல்.ஏ.,க்களும் தான், மீதமிருப்பர்.

எனவே, அந்த ஆறாவது இடமும், தி.மு.க.,வுக்குத் தான் கிடைக்கும். இதையெல்லாம் கணக்கிட்டால், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தரப்பில், தலா, மூன்று எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அ.தி.மு.க.,விலிருந்து நான்கு பேர் ஓய்வு பெறும் நிலையில், மூன்று பேர், புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளனர். தி.மு.க., தரப்பில், ஒருவர் ஓய்வு பெற்று, மூன்று பேர் தேர்வாகவுள்ளனர். மொத்தத்தில், அ.தி.மு.க.,வுக்கு இது சரிவுதான். நிலைமை இப்படியிருக்க, லோக்சபா தேர்தல் கூட்டணிக்காக, ராஜ்யசபா சீட்டுகளை, பிற கட்சிகளுக்கு தாரை வார்ப்பதில், அ.தி.மு.க., தாராளம் காட்டுகிறது.

ஏற்கனவே, பா.ம.க., வுக்கு ஒரு சீட் தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வுக்கும் ஒரு சீட் தர, அ.தி.மு.க., மேலிடம் உறுதியளித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கூட்டணிக்குள் இழுப்பதற்காக, தே.மு.தி.க.,வுக்கும், ஒரு சீட் தரவுள்ளதாக செய்திகள் கசிகின்றன. கிடைக்கப்போவதே, மூன்று இடங்கள்தான். இது தெரியாமல், மொத்த இடங்களையும் பங்கு வைக்கிறதா அ.தி.மு.க., என்ற கேள்வி, பார்லிமென்ட் வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.

லோக்சபா சீட் தந்தால், தேர்தலில் களமிறங்கி, போராடி ஜெயிக்க வேண்டும். ராஜ்யசபா சீட் அப்படியல்ல; லட்டு மாதிரி; எந்தவித சிரமமும் இன்றி, பார்லிமென்டிற்குள் நுழையலாம்.

Advertisement

புதிதாக அமையும் அரசு, ஏதோ காரணத்தால் கவிழ்ந்தால், லோக்சபா, எம்.பி., பதவியும் காலியாகி விடும். ஆனால், ராஜ்யசபா எம்.பி.,யை, ஆறு ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது. கூட்டணி யுகமாக மாறிவிட்ட இந்த காலத்தில், ராஜ்யசபாவில், ஒரு எம்.பி., இருந்தாலும், அது விலை மதிப்பற்றதாக கருதப்படும். எனவே, தங்களுக்கு கிடைக்கவுள்ள மூன்று சீட்டுகளையும் பங்கு வைப்பது, அ.தி.மு.க.,வுக்கு, எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

'பல்வேறு தேசிய பிரச்னைகள் மற்றும் பார்லிமென்ட் விவகாரங்கள் எல்லாம், தங்களுக்கு அவ்வளவு முக்கியமில்லை என, அ.தி.மு.க., தலைமை நினைக்கிறதோ' என, டில்லி அரசியல் வட்டாரங்கள், ஆச்சரியம் தெரிவிக்கின்றன.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-மார்-201911:48:07 IST Report Abuse

Malick Rajaகரணம் தப்பினால் மரணம் ..இந்த தேர்தலில் ஜெயிக்காவிட்டால் அதிமுக இருக்காது அமுமுக அதிமுகவாகிவிடும் அது காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த நிலைக்கு வந்துவிடும்.. எனவே என்ன விலையானாலும், தற்போதைய விளைவுகள் எதுவானாலும் கவலைப்படாது வெற்றி ஒன்றே இலக்கு இல்லையேல் இழுக்கு என்பதனால் இதுயென்ன அணைத்து பாராளுமன்ற தொகுதிகளை கூட விற்பதற்கு தயார் ஆனால் ஒரு நிபந்தனை மட்டும் ஆட்சி நீடிக்கவேண்டும் மீதம் உள்ள இரண்டாண்டுகள் கடந்தால் அதன்பின் மாற்றத்தை பார்க்கலாம்

Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
09-மார்-201903:39:20 IST Report Abuse

meenakshisundaramராஜ்ய சபா என்பது முன்பெல்லாம் அரசியல்' சாக்கடையில் ' முங்கி அசிங்கப்படாமல் சமூகத்தில் பிரபலஸ்தர்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு முறை.ஆனால் இன்றோ வைகோ .கம்யூனிஸ்ட் ராஜா.ஊழல் கனி ஆகியோர் அதில் அடைக்கலம் வாங்கி டெல்லியில் 'சுக'ங்களை அனுபவிக்க என்று ஆகிப்போச்சு.

Rate this:
karutthu - nainital,இந்தியா
08-மார்-201909:19:46 IST Report Abuse

karutthuஆ தி மு க வின் ஏன் இப்படி செய்கிறது கூட்டணியில் அதிமுக பேசுவது சரியில்லை .எந்த காரணம் கொண்டும் ராஜ்ய சபா சீட்டை விட்டுக்கொடுக்கக்கூடாது . அண்ணா திமுக எங்கோ தடுமாறுகிறது

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X