சிறுநீரில் யூரியா: கட்கரி புது 'ஐடியா'

Updated : மார் 05, 2019 | Added : மார் 05, 2019 | கருத்துகள் (86)
Advertisement
சிறுநீரில்  யூரியா: கட்கரி புது, 'ஐடியா'

நாக்பூர்:''மக்களின் சிறுநீரை சேமித்து வைக்க வேண்டும்; இதன் மூலம், யூரியா இறக்குமதி செய்ய வேண்டிய தேவையிருக்காது,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி யோசனை கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாநகராட்சி விருது வழங்கும் விழாவில், நேற்று முன்தினம், மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது, அவர்




பேசியதாவது:நான் கூறும் பல நல்ல யோசனைகள் ஏற்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்காக, இன்று மேலும் ஒரு யோசனையை முன் வைக்கிறேன்.


வேதி பொருட்கள்


மனிதர்களின் சிறுநீரில் இருந்து, யூரியா எனப்படும், உரம் தயாரிக்க முடியும். இதை செயல்படுத்தினால், உரம் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருக்காது.மக்கள் அனைவரின் சிறுநீரையும் சேமிக்க வேண்டும். அதை பயன்படுத்தி யூரியா தயாரிக்க வேண்டும். இயற்கை கழிவில் இருந்து, உயிரி எரிபொருள் தயாரிக்க முடியும்.மனிதர்களின் சிறுநீரில் இருந்தும், இயற்கை எரிபொருளை தயாரிக்கலாம். இதில் இருந்து அம்மோனியம் சல்பேட், நைட்ரஜன் உள்ளிட்ட வேதிப் பொருட்களை பெற முடியும்.விமான நிலையங்களில் சிறுநீர் சேமிப்பகங்கள் அமைக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். நாட்டில் உள்ள அனைத்து மக்களின் சிறுநீரையும் சேமித்து பயன்படுத்த துவங்கினால், யூரியா இறக்குமதியை நிறுத்தி விடலாம். சிறுநீரில் இருந்து, பெறப்படும் பொருட்கள் எதுவும் வீணாகாது.என் யோசனைகள் அனைத்தும் அற்புதமானவை. ஆனால், அவற்றை செயல்படுத்த யாரும்ஒத்துழைப்பதில்லை. மாநகராட்சி அதிகாரிகளும் உதவ மறுக்கின்றனர்.


சர்ச்சை


அரசுகளில், மக்கள் செக்கு மாடுகளாய் பழக்கப்படுத்தப்படுவதே இதற்கு காரணம். அவர்கள், புதிய யோசனைகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.நிதின் கட்கரி, ஏற்கனவே ஒரு முறை, தன் சிறுநீரை சேமித்து, தன் பங்களாவில் உள்ள தோட்டத்துக்கு உரமாக பயன்படுத்துவதாக கூறி, சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lokesh Raju -  ( Posted via: Dinamalar Android App )
06-மார்-201909:40:01 IST Report Abuse
Lokesh Raju முதன் முதலில் யூரியா கண்டுபிடிக்க பட்டதே சிறுநீர் இல் தான். கேலி செய்யும் முட்டா டுமிளர்கள் கொஞ்சம் படிக்கவும்
Rate this:
Share this comment
Cancel
06-மார்-201909:31:41 IST Report Abuse
ஆப்பு ஜெர்மனில சிறுநீரிலிருந்து பீர் தயாரிக்கிறார்களாம். நாம வேணா ஏற்றுமதி பண்ணலாம்.
Rate this:
Share this comment
Cancel
Kandaswamy - Coimbatore,இந்தியா
05-மார்-201920:47:01 IST Report Abuse
Kandaswamy மொரார்ஜி தேசாய் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக தாதா பாய் நவ்ரோஜி என்று குறிப்பிட்டுவிட்டேன் மன்னிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X