கோஹ்லி சதம்: இந்தியா 250 ரன்கள் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கோஹ்லி சதம்: இந்தியா 250 ரன்கள்

Updated : மார் 05, 2019 | Added : மார் 05, 2019
Advertisement

நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் கோஹ்லி சதம் விளாச, இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நாக்பூரில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் பெஹ்ரன்டார்ப், டர்னருக்குப்பதில் ஷான் மார்ஷ், லியான் இடம் பிடித்தனர்.




விஜய் ஷங்கர் அசத்தல்

இந்திய அணிக்கு ரோகித் டக் அவுட்டானார். தவான் 21 ரன்கள் எடுத்தார். லியான் 'சுழலில்' ராயுடு (18) அவுட்டானார். கேப்டன் கோஹ்லி, விஜய் ஷங்கர் ஜோடி அசத்தியது. ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் ஷங்கர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். தன் பங்கிற்கு லியான் பந்தை கோஹ்லி பவுண்டரிக்கு விரட்டினார்.

விஜய் ஷங்கர் (46) ரன் அவுட்டாகி அரை சத வாய்ப்பை இழந்தார். சுழற்பந்துவீச்சாளர் ஜாம்பாவின் ஒரே ஓவரில் ஜாதவ் (11), தோனி (0) சிக்கினர். பின், ஜடேஜாவுடன் இணைந்த கோஹ்லி தனி வீரராக போராடினார். கூல்டர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இவர் ஒரு நாள் அரங்கில் 40வது சதம் எட்டினார். கம்மின்ஸ் 'வேகத்தில்' ஜடேஜா (21) அவுட்டானார். கேப்டன் கோஹ்லி 116 ரன்களில் ஆட்டமிழந்தார். குல்தீப் (3), பும்ரா (0) அடுத்தடுத்து அவுட்டாகினர். இந்திய அணி 48.2 ஓவரில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X