'சரக்கில்' டியூட்டி பார்த்து எஸ்.ஐ., 'ரூட்டு' : கஞ்சா விற்பனைக்கு 'டார்கெட்டு'

Added : மார் 05, 2019
Share
Advertisement
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் எங்கும் 'சிவாயநம' என பஞ்சாட்சரம் ஒலித்து கொண்டிருக்க, சித்ராவும், மித்ராவும், சிவனடியார் பூஜை செய்யும் இடத்தில் அமர்ந்து வழிபட்டனர். அதன்பின், இருவரும், பூண்டி கோவிலுக்கு புறப்பட்டனர்.''அந்த சிவனை கூட பார்த்திடலாம் போல. தாசில்தார பார்க்க முடியறதே இல்லைனு பேசிக்கறாங்க,'' ஆரம்பித்தாள் மித்ரா.''அப்படியா... எந்த தாலுகாவுல இந்த
'சரக்கில்' டியூட்டி பார்த்து எஸ்.ஐ., 'ரூட்டு' : கஞ்சா விற்பனைக்கு 'டார்கெட்டு'

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் எங்கும் 'சிவாயநம' என பஞ்சாட்சரம் ஒலித்து கொண்டிருக்க, சித்ராவும், மித்ராவும், சிவனடியார் பூஜை செய்யும் இடத்தில் அமர்ந்து வழிபட்டனர். அதன்பின், இருவரும், பூண்டி கோவிலுக்கு புறப்பட்டனர்.

''அந்த சிவனை கூட பார்த்திடலாம் போல. தாசில்தார பார்க்க முடியறதே இல்லைனு பேசிக்கறாங்க,'' ஆரம்பித்தாள் மித்ரா.

''அப்படியா... எந்த தாலுகாவுல இந்த கொடுமை?''

''திருப்பூர் வடக்கில்தான். தாசில்தார் ரூமுக்கு தனியா கதவு இருந்தும், அதைய மூடி வச்சுக்கறாங்களாம். சாதாரண மக்கள் போனா, அலுவலக ஊழியர்கள் திருப்பி அனுப்பிடறாங்க. அவரை பார்த்து எந்த மனுவையும் கொடுக்க முடியறதில்லை. அங்க இருக்கற சேவை மையத்துல இதுலவிட கொடுமை நடக்குதாம்,''

''சான்றிதழ் பதிவு செய்யறதுக்கு, ரொம்ப இழுத்தடிக்கறாங்களாம். அதுகூட பரவாயில்லை, தாசில்தார் வரை ஒப்புதல் கொடுத்து, 'சர்டிபிகேட்' ரெடினு எஸ்.எம்.எஸ்., வந்தவங்க போயி கேட்டா, 'சர்வர் வேலை செய்யலை. இன்று போய் நாளை வா,'ன்னு திருப்பி அனுப்புறாங்கன்னு, மக்கள் புலம்பி தள்றாங்க,''

''மக்களுக்கு சேவை செய்யத்தான் அதிகாரிங்க இருக்காங்க. ஆனா, எல்லோருமே கலெக்டர் ரேஞ்சுக்கு 'பில்டப்' கொடுக்கறது ஏன்னு தெரியலையே,''

''ஏக்கா.. இந்த ஒரு நம்பர் லாட்டரியை ஒழிக்க முடியாதுபோல''

''மித்து... போலீஸ் 'மாமூல்' வாங்கற வரைக்கும் இதை ஒழிக்கவே முடியாது. திருப்பூரில், ஒரு, மூணு நெம்பர் லாட்டரி 'ஓேஹா'ன்னு போயிட்டு இருக்கு. சனிக்கிழமை சம்பளங்கறதால, ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் துாள் பறக்குதாம்,'' சொன்ன சித்ரா, பூண்டி கோவில் முன், வண்டியை பார்க் செய்தாள். பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கவே, இருவரும், நடராஜர் முன் மண்டபத்தில், அமர்ந்தனர்.

''திருப்பூரில் நடக்கற அரசு விழாவுல, நடராஜர் சிலைய மட்டும்தான் கொடுக்கறாங்க. என்ன சென்டிமென்ட்டுனே தெரியலைக்கா,'' ஆச்சரியத்துடன் கேட்டாள் மித்ரா.

''அதில் ஒரு விஷயம் இருக்குதுடி. பிரதமர் நிகழ்ச்சியிலும், முதல்வர் இதே மாதிரியான சிலையைத்தான், மோடிக்கு கொடுத்தாரு. அதுக்கப்புறம்தான், கூட்டணி உறுதியாச்சு. பத்மினி கார்டனில் நடந்த விழாவில், கார்ப்ரேஷன் சார்பில், முதல்வருக்கு நடராஜர் சிலையை பரிசா கொடுத்தாங்க,''

''திருப்பூரில் விழா முடிச்சுட்டு, அத்திக்கடவு அடிக்கல் நாட்டு விழாவில், முதல்வர் பேசிட்டிருந்தப்பதான், இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ்., -இ.பி.எஸ்.,க்குத்தான்'னு டில்லி கோர்ட் தீர்ப்பு சொன்னது. இதனாலதான், நடராஜர் சிலை சென்டிமென்ட்டா, ஒர்க்அவுட்டாகுதன்னு, ர.ர.,க்கள் பேசிக்கறாங்க,''

''எப்படியெல்லாம் சென்டிமென்ட் பார்க்றாங்க பாருங்க. ஏங்க்கா, 'காலையில சந்தோஷமா வந்துட்டு போனாங்க. சாயந்திரம் வேற மாவட்டத்துக்கு மாற்றின விஷயம் தெரியுங்களா,'' என்றாள் மித்ரா.

''ம்...ஹூம், தெரியாதே!''
''லோக்சபா எலக்ஷனுக்கு முன், தாசில்தார்களை 'டிரான்ஸ்பர்' செஞ்சாங்க. சி.எம்., பங்ஷன் இருந்ததால, 25ம் தேதிக்கு பதிலா, 1ம் தேதி, புதிய இடத்தில், பொறுப்பேற்றாங்க. ஆனா, அன்னைக்கு சாயந்திரமே, கோவை, ஈரோடு மாவட்டத்துக்கு மாத்திட்டாங்க. இதனால, கடுப்பான அவங்க, கலெக்டர் ஆபீசுலயே வெளிநடப்பு செஞ்சு, ஆர்ப்பாட்டம் நடத்துனாங்களாம்,'' என்ற மித்ரா, ''என்னக்காஎலக் ஷன் நெருங்குது. ஒரு நியூஸ் கூட சொல்ல மாட்டேங்குறீங்க,'' என, சலித்துக்கொண்டாள்.

''பருப்பு இல்லாத கல்யாணமா? இதோ, சொல்றேன் கேட்டுக்க. ''கோவையை, தாமரைக்கட்சிக்காரங்க கேட்டு வாங்கிட்டாங்களாம். அதனால, திருப்பூர் தொகுதியை பிடிச்சுடணும்னு, 'மாஜி' முதல் ஆளா 'சீட்' பிடிக்க துண்டு போட்டு வச்சிருக்காராம். தன்னோட வீட்டு விேஷசத்துக்கு பத்திரிகை கொடுக்க போனப்பவே, கோரிக்கை வச்சுட்டாராம்,''

''சரிங்க்கா, தி.மு.க., தரப்பில் என்னாச்சு?''

''தி.மு.க.,வில், யாரும் நிக்கலையாம். கூட்டணிக்கு தள்ளி விட்டுடுவாங்கன்னு ஒரு பேச்சு ஓடுது,'' என்ற சித்ரா, கூட்டம் குறைஞ்சிடுச்சு போல, வா... போய் கோவிலுக்கு உள்ளே போலாம்,'' என்று எழுந்தாள், மித்ரா பின் தொடர்ந்தாள்.இருவரும் சுவாமி தரிசனம் செய்து விட்டு, மாணிக்கவாசகர் தமிழரங்கில் நடக்கும், கலை நிகழ்ச்சியை காண சென்றனர்.

அப்போது, ''அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா அமர்க்களமாக நடந்தது பார்த்தீங்களா?'' என்றாள் மித்ரா.

''ஆமாம். விழாவெல்லாம் அமர்க்களமாக நடந்தது. ஆனால், சி.எம்., செக்யூரிட்டி என்ற பெயரில் அந்த பாதுகாப்பு அதிகாரிகள் செய்த கெடுபிடி தான்எல்ேலாருக்கும், வெயிலை விட கடுப்பாக போச்சு,''

''சி.எம்., விழா என்றால் பாதுகாப்பு கெடுபிடி இருப்பது, வழக்கம் தானேக்கா,''

'அட.. நான் சொல்றதே முழுசா கேட்டுட்டு சொல்லு. அத்திக்கடவு திட்ட அடிக்கல் நாட்டு விழாவில், திட்டத்துக்காக போராடிய அமைப்பினர் யாரையும் மேடையில் அனுமதிக்கவில்லை. முதல்வருக்கு சால்வை அணிவிக்க கூட, செக்யூரிட்டி ஆபீசர்கள் கெடுபிடி செஞ்சாங்க,''

''ஆனா, அந்தன்னைக்கே, திருப்பூர் நகரில் நடந்த ஸ்மார்ட் சிட்டி பணிகள் துவக்க விழாவில் எந்த கெடுபிடியும் இல்லை. விழாவுக்கு, தொடர்பில்லாத பலரும் கூட சாதாரணமாக மேடைக்கு சென்றனர். முதல்வர் சிம்பிளாக இருந்தாலும், இந்த செக்யூரிட்டி ஆபீசர்கள் ஆட்டம் கொஞ்சம் அதிகம்தான்,'' என, விளக்கினாள் சித்ரா.

செல்லும் வழியில், பூங்கா வரவே, ''மித்து.. ஒரு 'டென் மினிட்ஸ்' இங்க, உட்கார்ந்திட்டு போலாமே!' சித்ரா சொல்வதற்குள், மித்ராவும் உட்கார்ந்தாள்.

''ஏக்கா.. இத்தனை கூட்டம் இருக்குது. போலீசை காணோமே,''

''ஆமாமா.. நானும் கவனிச்சேன். ஏதோ பேருக்கு, ஒண்ணு, ரெண்டு போலீஸ்காரங்க இருக்காங்க. அவங்களுக்கு 'ரொட்டீன்' வேலை பாதிக்கும் இல்லையா?''

''என்ன.. வண்டியை புடிச்சு, பைன் போடறதா?'' எனக்கூறி சிரித்தாள் மித்ரா.

''எப்படிடீ, கரெக்டா சொல்றே. சிட்டியில இருக்கிற எஸ்.ஐ., ஒருத்தர், 'பைன்' போடறதை தவிர, வேற எந்த வேலையும் செய்றதில்லையாம்,''

''அவரு எப்ப பார்த்தாலும், 'சிவனே'ன்னு, கோவில் முன்னாடி, ஜீப்பை நிறுத்திட்டு, ரெண்டு கான்ஸ்டபிள் கிட்ட கம்பை கொடுத்து, வண்டிகளை புடிக்க சொல்றாரு. அதிலும், போதையில வர்வறங்கிட்ட, கடுமையான 'வரி' போடறாராம்,''

''அதில, இன்னொரு கொடுமையான விஷயம் என்னன்னா, அவர்கிட்டயும், 'சரக்கு'வாசம் அடிக்குதாம். இதை தெரிஞ்சுகிட்ட, பொதுமக்களில் சிலர், 'மொதல்ல, உங்க அதிகாரியை 'செக்' பண்ணுங்க. அப்புறமா எங்ககிட்ட வரலாம்,'ன்னு, போலீஸ்கிட்ட 'ஓபனா' சொல்றாங்களாம்,''

''கான்ஸ்டபிள் என்ன பண்ணுவாங்கக்கா... இதுக்கு அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்கோணும்?'' மித்ரா சொன்ன போது,
''அடுத்ததாக, சண்முகசுந்தரம் நாடக சபா சார்பில் நாடகம் நடைபெறும்,'' என்று அறிவிப்பு வெளியானது.உடனே, ''அக்கா, இவர மாதிரியே இன்னொரு எஸ்.ஐ., இருக்கிறார். அவரு, 'பைன்' தொகையை சுருட்டுவதில் செம 'கில்லி'யாம்''

''அது யாரு மித்து,''

''மத்திய பகுதியை சேர்ந்த ஒரு எஸ்.ஐ., அங்கங்க நின்னு, டூவீலர்காரங்ககிட்ட, விதிமீறலுக்கு 'ஸ்பாட் பைன்' வசூலிக்கிறாரு. பைன் போட்ட ரசீதில் ஒரு காப்பியை கொடுக்கோணும். ஆனா, இவரே கையெழுத்து போட்டு, 'பைன்' தொகையில் கையை வைக்கிறாராம். இவரு பண்ற சேட்டையை கேட்க, அதிகாரி யாருமில்லாததால், தனி ராஜாங்கம் நடத்தி வருகிறாராம்,''

அப்போது, 'கே.வி.ஆர்., நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை காணவில்லை. அவர் அம்மா இங்கே காத்திருக்கிறார். உடனே, மேடை அருகில் வரவும்,' என அறிவிக்கப்பட்டது. இரவு நேரம் என்றாலும் கூட, பூங்காவில் வேர்க்கடலை, சுண்டல் வியாபாரம் நடந்தது. மித்ரா இரண்டு சுண்டல் பாக்கெட் வாங்கி வந்து, சித்ராவுக்கு கொடுத்தாள்.

சுண்டலை சாப்பிட்டவாறே சித்ரா, ''ஐ.எஸ்., பிரிவு இந்த விவகாரத்தையெல்லாம், கமிஷனர் காதுக்கு கொண்டு போறங்களான்னு தெரியல. அதனால, ஒரு குட்டி ஆபீசர் ஆட்டம் நாளுக்கு நாள் ஜாஸ்தியாயிட்டு இருக்குது,'' என்றாள்.

''அக்கா... எந்த விஷயத்த, சொல்றீங்க?''

''சமீபத்துல, கோவில் திருவிழாவில், ஒரு கும்பல், சிலரை தாக்கிய பிரச்னையில் சம்பந்தப்பட்ட, அ.தி.மு.க., நிர்வாகி மகன் உட்பட, எட்டு பேரை அரெஸ்ட் செய்ய சொல்லி, அதே கோவிலுக்குள் மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினாங்க. போலீஸ் கண்டுக்கலை,''

''உடனே, அடுத்த நாள் அவிநாசி ரோட்டில் மறியல் பண்ணாங்க. பெரிய பிரச்னையாயிடுச்சு. உயரதிகாரி நேரில் போய், மக்களை சமாதானம் பண்ணாங்க,''

''அப்புறம் என்னக்கா.. ஆச்சு!''

''இந்த கூத்தையும் கேளு. இப்பிரச்னைக்காக, விசாரிக்க போன, குட்டி அதிகாரி எந்த சம்பந்தமும் இல்லாமல், கோவிலுக்கு பொருள் இறக்க வந்த, ஒரு வேனை பறிமுதல் செஞ்சு, ஸ்டேஷனுக்கு எடுத்துட்டு போயிட்டாரு,''

''சம்பந்தப்பட்ட வேன் ஓனர், எம்.எல்.ஏ.,கிட்ட சொல்லியும், வண்டி வரலை. வேற வழியில்லாம, அந்த அதிகாரிக்கு, ரூ.10 ஆயிரத்தை 'காணிக்கை' கொடுத்துட்டுதான், வண்டியை எடுத்துட்டு போனாராம்,''அதேநேரம், மித்ராவின் போன், ''திருச்செந்துாரில், கடலோரத்தில், செந்தில்முருகன் அரசாங்கம்,'' என சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கல குரலை ரிங் டோனாக வெளியிட்டது.எடுத்து பேசிய, மித்ரா, ''ஓ.கே., அங்கிள் நாளைக்கு கண்டிப்பா வந்திடறேன். கமிஷனர்கிட்ட சொல்லி, கந்து வட்டி பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டலாம்,'' என்று கூறி, போனை அணைத்து வைத்தாள்.

''ஏய்... என்ன பிரச்னை?''

''சவுத்தில், கந்துவட்டி புகார் ஒன்னு வந்துச்சு. ஒழுங்கா விசாரிக்காமல், ஒரு ஏட்டு, 'கந்துவட்டி 'லேடி'க்கு விஸ்வாசமாக நடந்துக்கிறாராம். வாங்குன பணத்தை ஒழுங்காக கொடு இல்லையென்றால், நடவடிக்கை பாயுமுன்னு, கம்ப்ளைன்ட் பார்ட்டியை மிரட்டுறாராம். இதனால, அவர் 'செல்வ' செழிப்போடு இருக்கிறாருன்னு, எல்லோரும் சொல்றாங்க,''

''மித்ரா, இங்க மட்டுமில்ல, சிட்டி, ரூரலிலுள்ள நிறைய ஸ்டேஷன்களில் கந்துவட்டிக்காரங்களுக்கு 'செம' மரியாதையாம். ஏன்னா... 'மாமூல்' கரெக்டா போயிடுதாம்,''

''அக்கா... கந்து வட்டி மட்டுமல்ல. கஞ்சாவிலும், நல்லாவே 'கல்லா' கட்டுறாங்களாம்,''

'யெஸ்.. நான் கேள்விப்பட்டேன். குமரானந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் கிலோ கணக்கில் கஞ்சா பொட்டலங்களை கொண்டு வந்து, பள்ளி, கல்லுாரி பசங்களுக்கு சிலர் 'சப்ளை' செஞ்சு வர்றாங்க. இதை வாங்கி குடுச்சுட்டு, பல பசங்க கெட்டு குட்டிச்சுவராயிட்டு வர்றாங்க,''

''அதிலும், தினமும் மூணு கிலோ விக்கோணுமின்னு, 'டார்கெட்' உண்டாம். ஒரு சின்ன ஏரியாவிலேயே மூணு கிலோன்னா, சிட்டி பூராவும், எவ்ளோ விப்பாங்கன்னுபாரு,''

''அடக்கடவுளே. சிட்டியில கஞ்சான்னு சொன்னா, காளைக்கு பேர் போன ஊர் பஸ் ஸ்டாண்டில், சர்வசாதாரணமாக லாட்டரி விக்கறாங்க. அதுக்காக, அதிகாரி உட்பட எல்ேலாருக்கும், மாசமாசம், நல்லா கவனிப்பாம்,'' என்றாள் மித்ரா.

''ஓ.கே., மித்ரா... நாம போய், 'சிவார்ப்பனம்' டேன்ஸ் பார்த்துட்டு, கிளம்பலாம் வா. இல்லாட்டி, நாலாம் கால பூஜை ஆரம்பிச்சிடுவாங்க,'' என்று சித்ரா எழுந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X