எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குழப்பம்!
எல்லா தொகுதிகளும் தெற்கே தானா?
கடும் குழப்பத்தில் காங்., மேலிடம்

தென் மாவட்டங்களை உள்ளடக்கிய பெரும்பாலான தொகுதிகளை குறி வைத்து, தமிழக காங்கிரசார் கேட்பதன் பின்னணி குறித்து விசாரிக்கும்படி, டில்லி காங்கிரஸ் மேலிடத்தில், புகார் குவிகின்றன.

காங்கிரஸ், தமிழகம்,


வரும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரசுக்கு, ஒன்பது இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த, காங்., தலைவர்கள், தங்களுக்காகவும், தங்களுக்கு வேண்டியவர்களுக்காகவும், தொகுதிகள் கேட்டு, கட்சி மேலிட தலைவர்கள் வீடுகளுக்கு படைஎடுக்க துவங்கியுள்ளனர். இவர்கள் கேட்கும்

தொகுதிகளில் பெரும்பாலானவை, தென் மாவட்டங்களாக இருப்பதால், காங்கிரஸ் மேலிடம் குழப்பமடைந்துள்ளது.

கன்னியாகுமரி தொகுதி, ராபர்ட் புரூஸ் என்பவருக்காக கேட்கப்படுகிறது. சி.எஸ்.ஐ., சர்ச் பிஷப்பான இவருக்கு, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிலரது ஆதரவு உள்ளது. திருநெல்வேலி தொகுதியை பீட்டர் அல்போன்சுக்கு கேட்கின்றனர். தேனி தொகுதியை, ஆருண் அல்லது அவரது மகன் ஹசனுக்காக கேட்கின்றனர். சிவகங்கை, கார்த்தி சிதம்பரத்துக்கும், ராமநாதபுரம் திருநாவுக்கரசருக்கும் கேட்கப்படுகின்றன.

ஜெயகுமாருக்காக தனித் தொகுதியான தென்காசியும் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இவை அனைத்துமே, தென் மாவட்டங்கள். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதே ஒன்பது தொகுதிகள் தான். இதில், மேலே கூறப்பட்டுள்ள ஏழு தொகுதிகளும் தென் மாவட்டங்களில் உள்ளன. கூட்டணி தலைமையிடம், தொகுதிகளை கேட்டு

Advertisement

வாங்குவதில், எந்த ஒரு, 'லாஜிக்'கும் இல்லாமல், மாநிலத்தின் ஒரு பகுதியிலேயே கட்சியை முடக்கினால், எப்படி சரியாக அமையும் என, காங்., தலைவர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.

எனவே, 'யாருடைய அறிவுரையின்கீழ், எந்த அடிப்படையில், இவ்வாறு தென் மாவட்ட தொகுதிகளாக கேட்கப்படுகின்றன என்பதை, மேலிடம் விசாரிக்க வேண்டும்' என, கட்சி மேலிடத்தில் புகார்கள் குவிந்து வருகின்றன.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adithyan - chennai,இந்தியா
07-மார்-201919:33:44 IST Report Abuse

adithyanமதுரைக்கு தெற்க்கே எல்லாமே அழகிரியின் பிடியில் தான் உள்ளது.அதனால் தீ மூ கா கூட்டணி அம்பேல்

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
06-மார்-201912:29:20 IST Report Abuse

pradeesh parthasarathyகுமாரி மாவட்டத்தில் ராபர்ட் ப்ரூசிர்க்கு கொடுக்க வேண்டாம் ... முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸிற்கு கொடுக்கவும் ... துடிப்பான இளைஞர் .. அதிகப்படியான இளைஞர்களை கட்சியில் சேர்த்தவர் .... காங்கிரஸ் தலைமை இடத்திடமிருந்து இதற்கான சான்றிதழும் பெற்றுள்ளார் .... களத்தில் இறங்கி செயல் படுபவர் ... அப்படிப்பட்டவருக்கு தான் சீட் கொடுக்க வேண்டும் ... தங்கபாலுவின் ஆதரவாளரான ராபர்ட் ப்ரூசிர்க்கு கட்சி சீட் கொடுத்தால் தங்கபாலு தமிழக காங்கிரஸ் யை எவ்வாறு குழி தோண்டி புதைத்தாரோ அதை போன்று அந்த வேலையை ராபர்ட் ப்ரூஸும் செய்வார் ...

Rate this:
06-மார்-201909:39:09 IST Report Abuse

ஆப்புபொதுவாக மதுரைக்கு தெற்கே கல்வியறிவு குறைவாகவே உள்ளது.

Rate this:
puratchiyalan - Nagercoil,இந்தியா
06-மார்-201913:05:44 IST Report Abuse

puratchiyalanஹலோ ஆப்பு, உன்னோட அறிவு இவ்வளவு தான்.. நல்லா தெரியுது.. தமிழ் நாட்டில் கன்னியாகுமரி தான் அதிகம் படித்தவர்கள் உள்ள மாவட்டம்.. இது கூட தெரியல.. ஆப்பு சூப்புனு... ...

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X