அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் தேமுதிக : ஓபிஎஸ்

Updated : மார் 06, 2019 | Added : மார் 06, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement

சென்னை : லோக்சபா தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதியாகி விட்டதாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



latest tamil news



செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஓ.பி.எஸ்., அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுகிறது. அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகி விட்டது. இன்னும் சற்று நேரத்தில் தேமுதிக நிர்வாகிகள் என்னை சந்திக்க உள்ளனர். அப்போது கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்து தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் இறுதிக்கட்ட ஆலோசனை நடந்தது. காலை முதல் நடந்த ஆலோசனைக்கு பிறகு விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

விஜயகாந்த் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த்தின் படம் வைக்கப்பட்டது.


latest tamil news


இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதியானது. தொடர்ந்து ஓபிஎஸ்.,ம் இந்த தகவலை உறுதி செய்தார்.


latest tamil news



அதிமுக கூட்டணியில் தேமுதிக.,வுக்கு நீலகிரி, தூத்துக்குடி, நாகை மற்றும் டெல்டா பகுதிகளில் ஒரு தொகுதியும் என 4 தொகுதிகள் ஒத்துக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக 7 தொகுதிகள் கேட்டதாகவும், ஆனால் அதிமுக 4 தொகுதிகள் மட்டுமே தர முன்வந்ததாலேயே கூட்டணி பேச்சில் இழுபறி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


ஆலோசனை

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் தேமுதிகவின் சுதீஷ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambika. K - bangalore,இந்தியா
06-மார்-201916:38:33 IST Report Abuse
Ambika. K யாரு யாரோட வேணா கூட்டு வைங்க ஆனா திருட்டு முன்னேற்ற கூட்டணி ஒழிஞ்சா சரி
Rate this:
Cancel
S.Kumar - New Delhi,இந்தியா
06-மார்-201915:57:09 IST Report Abuse
S.Kumar எங்க சுடலையை காணோம். இப்போ வந்து கூவலாம்ல அப்பனும் மவனும்.. வெட்கம் மானம் ரோஷம்னு.. நீங்களும் உங்க கல்யாணமும்..
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
06-மார்-201915:42:46 IST Report Abuse
ஆரூர் ரங் DMDK 😏😩😡
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X