அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரெண்டு பக்கமும் பேச்சு: தேமுதிகவுக்கு போச்சு

Updated : மார் 06, 2019 | Added : மார் 06, 2019 | கருத்துகள் (103)
Advertisement

சென்னை: கூட்டணி குறித்து ஒரே நேரத்தில் திமுக, அதிமுகவிடம் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியது , இரு கட்சி தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணையும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால், கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.



பேச்சுவார்த்தை


இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் தேமுதிகவின் சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி ஆகியோரை சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


சந்திப்பு

அதே நேரத்தில், தேமுதிகவின் அனகை முருகேசன், இளங்கோவன் ஆகியோர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.துரைமுருகனை சந்தித்த பின்னர் தேமுதிக நிர்வாகிகள், தனிப்பட்ட முறையில் சந்தித்ததாக கூறி விட்டு சென்றனர். எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.


அகற்றம்

ஒரே நேரத்தில், இரண்டு பக்கமும் தேமுதிக பேசியது, திமுக மற்றும் அதிமுக தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேமுதிகவின் இரட்டை நிலைப்பாடு தெரிய வந்ததை தொடர்ந்து, பா.ஜ., பொதுக்கூட்ட மேடையில் இருந்து விஜயகாந்த்தின் படம் உடனடியாக அகற்றப்பட்டது. இந்த கோபத்தில் தான் தேமுதிகவுடன் பேசி வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டார்.





தொகுதி இல்லை




இதற்கிடையே திமுக பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுக கூட்டணியில் இணைய விரும்புவதாகவும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனக்கூறினார். அதற்கு ஸ்டாலின் ஊரில் இல்லை. கொடுக்க தொகுதிகளும் இல்லை என பதில் அளித்துவிட்டேன். வீட்டிற்கு வந்த தேமுதிக நிர்வாகிகளிடமும் இதனையே கூறினேன். தேமுதிகவிற்கு கொடுக்க எங்களிடம் போதிய தொகுதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


பேச்சுவார்த்தை தொடரும்




சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தேமுதிகவின் சுதீஷ் கூறுகையில், மத்திய அமைச்சர் கோயல் அழைப்பின் பேரில் , அவரை சந்தித்தோம். கூட்டணி குறித்தும், தொகுதி குறித்தும், எந்தெந்த தொகுதி என்பது குறித்தும் பேசினோம்.
பிரதமர் மோடி சென்னை வருவதால், நேரம் குறைவாக உள்ளது. இதனால், கோயல் சென்றுள்ளார். பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும். 2014 தேர்தலை போல் அனைவரையும் அழைத்து தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விரும்பினோம். எங்கள் கட்சியின் பலத்தின் அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். இன்று நடந்த பேச்சுவார்த்தையில் இறுதி நிலை ஏற்பட்டுள்ளது. நாளை அல்லது மறுநாள் முடிவு ஏற்படும். துரைமுருகனுடன் பேசியது உண்மைதான். அதிமுக பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான போது அவருடன் பேசினேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
08-மார்-201906:28:56 IST Report Abuse
Thalaivar Rasigan ஒவ்வொரு தேர்தலுக்கும் குறிப்பிட்ட தொகுதிகள் - தேர்தல் செலவுக்கு பணம் (உண்மையில் கட்சி வளர்ச்சி நிதி?) என்று வாழ்க்கையை ஒட்டி வரும் தேமுதிகவை அதிமுகவும் ஒதுக்க வேண்டும். பிஜேபி என்றாலும் ஓகே காங்கிரஸ் என்றாலும் ஓகே என்பது ஒரு கொள்கையா? மக்கள் அருவெறுப்பு அடைந்துள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-மார்-201902:09:05 IST Report Abuse
தமிழ்வேல் மத்தளத்துக்குத்தானே ரெண்டுபக்கமும் அடி விழும் ? டமாரத்துக்கு ஒரு பக்கம்தானே.........
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
07-மார்-201917:57:44 IST Report Abuse
madhavan rajanடமாற்றத்தையும் ரெண்டு குச்சி வச்சு அடிப்பாங்கல்ல....
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
07-மார்-201901:25:43 IST Report Abuse
Cheran Perumal விலாங்குமீன் போல திமுகவுக்கு வால், அதிமுக வுக்கு தலை காட்டும் தேமுதிக தேறாது போலிருக்கிறதே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X