பிரதமரிடம் விசாரணை தேவை : ராகுல்

Updated : மார் 07, 2019 | Added : மார் 07, 2019 | கருத்துகள் (160)
Advertisement

புதுடில்லி : ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்., தலைவர் ராகுல் வலியுறுத்தி உள்ளார்.

ரபேல் ஆவணங்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக மத்திய அமைச்சரவையின் அவசர கூட்டம் இன்று (மார்ச் 07) நடக்கிறது. இந்நிலையில் ரபேல் விவகாரம் தொடர்பாக காங்., தலைவர் ராகுல், டில்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பிரதமரை காப்பாற்ற அரசு முயற்சித்து வருகிறது. பா.ஜ., தற்போது காணாமல் போன நாடகம் ஆடுகிறது. பா.ஜ.,வின் புதிய பொய் தான் ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டது. ரபேல் ஆவணங்களை போல் 2 கோடி வேலைவாய்ப்புக்களும் இந்தியாவில் மாயமாகி உள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர், அனில் அம்பானிக்கு உதவி செய்துள்ளார். ரபேல் விவகாரத்தில் விசாரணை நடத்த அரசு ஏன் தயங்குகிறது? ரபேல் ஆவணங்கள் பிரதமரின் ஊழலை அம்பலமாக்கிவிடும். பிரதமரின் நேரடி கண்காணிப்பில் இருந்த பல ஆவணங்கள் மாயமாகி உள்ளன.

ஆவணங்கள் மாயமாகி உள்ளதாக ஒருபுறம் கூறுகிறீர்கள். அப்படியானால் அதில் உண்மைகள் உள்ளன. ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவணங்கள் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்துவதுடன், ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது பற்றியும் விசாரிக்க வேண்டும். ரபேல் ஆவணங்கள் காணாமல் போனதற்கு மீடியாக்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் மாயமான ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட ரூ.30,000 கோடி ஊழல் செய்தவர் மீது எந்த விசாரணையும் இல்லையா?

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மீது விசாரணை தேவை. முதலில் பிரதமர் அலுவலக தலையீடு குறித்து விசாரியுங்கள். பிறகு மீடியாக்களிடம் விசாரிக்கலாம். எதிர்க்கட்சிகளை பாக்.,ன் போஸ்ட் பாய் எனக் கூறும் பிரதமர் தான், பாக்.,ன் மிகப் பெரிய போஸ்ட் பாய். ஷெரீப் பிறந்தநாளின் போது திடீரென சென்று வாழ்த்திய பிரதமர் தான் பாக்.,ன் போஸ்ட் பாயாக செயல்படுகிறார் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (160)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
08-மார்-201908:35:43 IST Report Abuse
ஆரூர் ரங் அரசு மானியமாகக் கொடுத்த 500 கோடி நேஷனல் ஹெரால்டு இடத்தை பத்திரிக்கை அச்சகமே நடத்தாமல் பலகோடி ரூ உள்வாடகைக்கு விட்டு ஆட்டயப் போட்டவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை திருடனென்கிறான். அசிங்கம். அப்போ நிலக்கரி ஊழலில் பிரதமர் மற்றும் நிலக்கரி இலாக்கா மந்திரியாக இருந்த மன்மோகனை விசாரிக்க இவன் ஏன் கேட்கவில்லை? ஓஹோ ஊழலில் முக்கிய பயனாளி எப்படி வாய்திறப்பான்?
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
07-மார்-201921:14:59 IST Report Abuse
Krishnamurthy Venkatesan எதிர்கட்சிகள் இந்த ரகசிய ஆவணங்களை திருட முயற்சிக்கும் என்பதை உளவு அறிந்து திருட்டுபோனதாக நாடகம் நடத்த படுகிறதோ என்னவோ?
Rate this:
Share this comment
Cancel
Smancool - Salem,இந்தியா
07-மார்-201920:59:02 IST Report Abuse
Smancool பப்பு .. உங்கள் அரசியல் காலகட்டத்தில் எத்தனை கேஸ் நோண்டி நொங்கு எடுக்கலாம்.. நீங்களும், தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் கட்சியும் இணைந்து எத்தனை மெகா ஊலல் .... அப்பப்ப.. சுடுகாட்டில் இருந்து ... 2G வரை அங்கே அவரு காமன்வெல்த் வரை ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X