நானும் கும்பமேளா போய்வந்தேன்...

Updated : மார் 07, 2019 | Added : மார் 07, 2019
Advertisement


அலகபாத்தி்ல் நடந்துமுடிந்த கும்பமேளாவில் கலந்து கொண்ட பல கோடிபேரில் நானும் ஒருவன்.
கும்பமேளா என்பது எல்லோரும் நினைப்பது போல அது ‛நாக சாதுக்கள்' என்றழைக்கப்படும் நிர்வாண சாமியார்கள் கூடும் இடமல்ல ,காலம் காலமாக மனித குலத்தை காப்பாற்றி வரும் நதியைக் கொண்டாடும் விழா அது.

அமுதத்துளிகள் சிந்திய இடத்தில், சிந்திய நேரத்தில் இந்த விழா நடக்கிறது என்ற புராண பெருமை இந்த விழாவின் மையமாக இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி பல விஷயங்கள் இங்கு சங்கமி்த்து இருந்தது.
இந்த விழாவிற்காக ஒரு வருடமாக உழைத்துள்ளனர் செலவு செய்த பணம் பெரும்பாலும் சுகாதாரத்திற்கு என்பதால் ஊரும் நீரும் சுத்தமாக காட்சிதருகிறது.பாலத்தின் துாண்கள் கூட வண்ண மயமாக ராமயாண பாத்திரங்களை ஏந்தி அழகுடன் மிளிர்கிறது.
Advertisement

எத்தனை கோடி பேர் வந்தாலும் அத்தனை பேரின் உடலையும் உள்ளத்தையும் குளிர்விக்கும்படி கங்கை,யமுனையும் ஒடிக்கொண்டு இருக்கிறது.
கங்கை,யமுனை,சரசுவதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் குளிப்பதற்காக மக்கள் படகுகளில் பயணம் செய்து குளித்துவிட்டு வருகின்றனர்.கரையோரங்களில் இரவு பகலாக நீராடுகின்றனர்.
நாக சாதுக்கள் எல்லாம் இரவில்தான் வலம்வருவர் என்றனர் ஒன்றிரண்டு பேர்தான் பகலில் நடமாடிக்கொண்டு இருந்தனர் அவர்களிடம் பணத்தை கொடுத்து மக்கள் ஆசிபெற்றுக் கொண்டு இருந்தனர்.
எந்தப்பாதை வழியாக வெளியேறுவது என்பது தெரியாமல் ஆரம்பத்தில் திணறல் ஏற்பட்டது அங்குள்ள உயரமான காஞ்சிமடத்து கட்டிடத்தை அடையாளமாக வைத்துக்கொண்டபின் அந்தப் பிரச்னை தீர்ந்தது.
இந்தி மொழி தெரியாவிட்டால் ரொம்பவே சிக்கல் ஆபிசர்களே ஆனாலும் இந்தியில்தான் பேசுகின்றனர்,‛ இந்தி தெரியாமல் நீ என்ன இந்தியன்?' என்பது போல புருவம் நெரி்க்கின்றனர்.
வழிபாட்டுத் தலங்களில் உள்ளவர்கள் வரக்கூடிய பக்தர்களிடம் விதவிதமாய் பணம் பறிப்பதில்தான் குறியாக இருக்கின்றனர் பக்தி இருந்தாலும் இவர்களை நினைத்து பயந்து போன பக்தர்கள் பலர் வெளியே நின்றே கும்பிட்டுவிட்டு செல்கின்றனர்.
நதிக்கரையில் பிளாஸ்டிக் கேன்கள் பிரமாதமாக வி்ற்கிறது வரக்கூடியவர்கள் ஒருவர் விடாமல் கேன்களை வாங்கி கங்கை நீரை நிரப்பி எடுத்து வீட்டிற்கு தீர்த்தமாக எடுத்துச் செல்கி்ன்றனர்.
கும்பமேளாவின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் மலர்களை துாவி ஆரத்தி எடுத்து வழிபட்டதன் மூலம் கங்கையும்,யமுனையும் கூடுதல் மகிழ்ச்சி பெற்றிருப்பது நிச்சயம்.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X