பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மலிவு விலை மருந்துக்கடை;
பிரதமர் மோடி பெருமிதம்

லக்னோ: ''மத்திய அரசு துவங்கி உள்ள மலிவு விலை மருந்து கடைகளால் சாதாரண மக்களுக்கு மருந்து செலவு மிச்சமாகி உள்ளது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மலிவு விலை,மருந்துக்கடை,பிரதமர்,மோடி,பெருமிதம்


மத்திய அரசின் மலிவு விலை மருந்து கடைகளால் பயன் அடைந்தவர்களுடன் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக நேற்று உரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது: பா.ஜ., ஆட்சியில் நாடு முழுவதும் 5000க்கும் அதிகமான மலிவு விலை மருந்து கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு உயர்தர மருந்துகள் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. 50 - 90 சதவீதம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 850 உயிர் காக்கும் மருந்துகள் விலை மலிவாக விற்கப்படுகின்றன.

இருதயம் மற்றும் மூட்டு அறுவை சிகிச்சைகளுக்கான மருந்து களை மலிவு விலையில் விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் வாயிலாக லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். சாதாரண மக்களின் மருந்து செலவு மிச்சமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

அதிர்ஷ்ட நாற்காலி:

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மோடி அமருவதற்காக பா.ஜ., நிர்வாகிகள் அதிர்ஷ்ட நாற்காலிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த 2014 லோக்சபா மற்றும் 2017 உ.பி. சட்டசபை தேர்தல் பிரசாரங்களின் போது பிரதமர் மோடி பயன்படுத்திய நாற்காலியை பத்திரப்படுத்தி வைத்து அதை இந்த விழாவில் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Govindarajan. - chennai ,இந்தியா
08-மார்-201919:54:16 IST Report Abuse

S.Govindarajan.எனது மருந்து மாத்திரை செலவு மாதம் ஐயாயிரம் வரை ஆனது தற்போது மலிவு விலை மருந்துக் கடை மூலம் மூன்று மாதங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே செலவாகிறது வாழ்க மோடி

Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
08-மார்-201918:58:37 IST Report Abuse

RameshDoctors and Medical shops (Private) would be DISCOURAGE to use as their LOOTING BUSINESS (Medical Shops 25%, Doctors 15%,Marketing & Advt - 25% etc. out of medicine price) is BEING HAMPERED...All are fear creating strategy among people only...As of now it is there for approximately 600 medicines in Jan Ausadh Shop /Makkal Marunthagam...Assume if Modi and Present government wants to loot people , they would not have introduced this scheme itself and can be kept in PAPER for next few decades like One Rank One Pension , Defense Procurement, Electricity to all village etc...If they(Modi government) would have done deal with Pharma company they would have easily given 5,00,000 to 10,00,000 crores easily as Pharma companies are such huge money...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
08-மார்-201916:16:14 IST Report Abuse

ஆரூர் ரங்வலையில் janaushadhi.gov.in Store Details. எனத்தேடிப்பாருங்கள். தமிழகத்தில் செயல்படும் 474  ஜன் அவுஷதி சகாயவிலை மருந்துக்கடைகளில்  விலாசமும் கிடைக்கும் . சேவையைப்  பயன்படுத்தியோர் அனைவரும் வாழ்த்துகிறார்கள் 

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X