பதிவு செய்த நாள் :
மோடியையும் விசாரிக்க
ராகுல் வலியுறுத்தல்

புதுடில்லி: ''ரபேல் போர் விமானம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டது குறித்து, பத்திரிகை மீது விசாரணை நடக்கட்டும்; இந்த மோசடி குறித்து, பிரதமர் மோடியிடமும் விசாரணை நடத்த வேண்டும்,'' என, காங்., தலைவர், ராகுல் கூறியுள்ளார்.

மோடி,விசாரிக்க,ராகுல்,வலியுறுத்தல்


நம் விமானப் படைக்கு, ஐரோப்பிய நாடான, பிரான்சிடம் இருந்து, 'ரபேல்' ரக போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், பல மோசடிகள் நடந்துள்ளதாக, காங்., தலைவர், ராகுல், தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக, ஒரு ஆங்கில பத்திரிகையில், சமீபத்தில் செய்தி வெளியானது.

இந்நிலையில், போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, 'ராணுவ அமைச்சகத்தில் இருந்த, ரபேல் தொடர்பான கோப்புகள் திருடு போயு ள்ளன' என, மத்திய அரசு, நேற்று முன்தினம் தெரிவித்தது.

இது குறித்து, காங்., தலைவர், ராகுல், நேற்று கூறியதாவது: ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோசடி நடந்துள்ளது குறித்து, ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்நிலையில், ராணுவ அமைச்சகத்தில் இருந்த, ரபேல் போர் விமானம் தொடர்பான கோப்புகள் திருடப்பட்டுள்ளதாக, மத்திய அரசு கூறியுள்ளது. இந்த ஆட்சியில், மக்களின் வேலை வாய்ப்பு திருடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உரிமை திருடப்பட்டு உள்ளது, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என, வாக்குறுதி திருடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது, ரபேல் போர் விமான கோப்பும் திருடப்பட்டுள்ளது.

திருடப்பட்ட கோப்பு களின் அடிப்படையில், பத்திரிகையில் செய்தி வெளியானதாக அரசு கூறியுள்ளது. இதில் இருந்து, ரபேல் ஒப்பந்தத்தில் மோசடி நடந்துள்ளதை, அரசு ஒப்புக் கொண்டுள்ளது. பத்திரிகை மீது, நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறுகின்றனர்; நடவடிக்கை எடுக்கட்டும். அதே நேரத்தில், சட்டம் என்பது, நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவானது. ரபேல் ஒப்பந்தத்தில், 30 ஆயிரம் கோடி ரூபாயை, தன் நண்பரான, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு கிடைப்பதற்காக, மோடி ஊழல் செய்துள்ளார்.

Advertisement

இந்த, 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்தும் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் அலுவலகம் தனியாக பேரத்தை நடத்தியுள்ளது. அதனால், முதலில், நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்த வேண்டும். மோடியின் இந்த நடவடிக்கையால் தான், ரபேல் போர் விமானம் நமக்கு கிடைப்பது, தாமதமாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

'போஸ்டர் பாய்' யார்?

என்னை, பாகிஸ்தானின், 'போஸ்டர் பாய்' எனப்படும், ஆதரவாளன் என்கின்றனர். ஆனால், பிரதமர் மோடிதான், உண்மையான பாக்., ஆதரவாளர். பதன்கோட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக விசாரிக்க, பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,க்கு அனுமதி அளித்தார். பாக்., பிரதமராக இருந்த, நவாஸ் ஷெரீப்பை, தன் பதவியேற்பு விழாவுக்கு அழைத்தார்.

-ராகுல், தலைவர், காங்கிரஸ்


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-மார்-201908:22:26 IST Report Abuse

Pugazh V"நாற்சந்தியில் ஆதாரங்கள் இல்லாமல் கூச்சலிட்டால் மக்கள் தவறாக நினைக்கக்கூடும். நல்ல மனநல மருத்துவரை அணுகுவது சாலச்சிறந்தது."/ கூடுவஞ்சேரி சீனு. வெரி கரெக்ட். இதை..ஆதாரங்கள் இல்லாமல் திமுகவை ஊழல் கட்சி என்று எழுதும் அனைவரும் படிக்க வேண்டிய கருத்து. குறிப்பாக டுமிள்சன் மற்றும் நண்பர்கள் படிக்க வேண்டிய கருத்து. நன்றி சீனு.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-மார்-201900:12:58 IST Report Abuse

Pugazh V"நாற்சந்தியில் ஆதாரங்கள் இல்லாமல் கூச்சலிட்டால் மக்கள் தவறாக நினைக்கக்கூடும்.நல்ல மனநல மருத்துவரை அணுகுவது சாலச்சிறந்தது."/ கூடுவஞ்சேரி சீனு. வெரி கரெக்ட். இதை..ஆதாரங்கள் இல்லாமல் திமுகவை ஊழல் கட்சி என்று எழுதும் அனைவரும் படிக்க வேண்டிய கருத்து. குறிப்பாக டுமிள்சன் மற்றும் நண்பர்கள் படிக்க வேண்டிய கருத்து. நன்றி சீனு.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
08-மார்-201917:09:38 IST Report Abuse

Endrum Indianராவுல் வின்சி தி கிரேட் பப்பு உன்னைத்தான் முதலில் விசாரிக்கவேண்டும் , ஏன் தெரியுமா நீ தான் காசு கொடுத்து ஆவணங்களை திருடிகொண்டுவந்து காட்டச் சொன்னதாக செய்தி வரும்

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X