அயோத்தி பிரச்னையில் சமரச பேச்சுவார்த்தை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Updated : மார் 08, 2019 | Added : மார் 08, 2019 | கருத்துகள் (70)
Advertisement
Court,Supreme Court,கோர்ட்,சுப்ரீம் கோர்ட்,நீதிமன்றம்,Faizabad, Constitution Bench, Sriram Panchu, Ravi Shankar

புதுடில்லி: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய, ராமஜென்மபூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான பிரச்னையில், நிரந்தர தீர்வு காண சமரச பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி கலிபுல்லா தலைமையில் 3 மத்தியஸ்தர்களையும் நியமித்துள்ளதுடன், 8 வாரங்களில் சமரச பேச்சுவார்த்தையை முடிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


மேல்முறையீடு


உத்தர பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள, சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது.
'சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பகிர்ந்து கொள்ளலாம்' என, அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, 14 மேல் முறையீட்டு மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. நசீர் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கின் விசாரணையின்போது, இந்த பிரச்னை தொடர்பாக சமரசம் ஏற்படுத்தும் வகையில் பேச்சு நடத்துவது குறித்து ஆராயும்படி, சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்னையில் சமரசம் செய்வதற்கு அனுமதி அளிப்பது குறித்து விசாரிக்கப்பட்டு, தீர்ப்பை ஒத்தி வைப்பதாக, சுப்ரீம் கோர்ட், நேற்று முன்தினம்(மார்ச்6) கூறியிருந்தது.
கோர்ட் கண்காணிப்பு


இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், அயோத்தி நில பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண சமரச பேச்சுவார்த்தை நடத்த பரிந்துரை செய்ததுடன் இதற்காக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில், வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


மேலும், சமரச பேச்சுவார்த்தையை ஒரு வாரத்தில் துவங்கி 8 வாரங்களில் முடிக்க வேண்டும் எனவும், வீடியோ பதிவுடன், பைசாபாத்தில் கோர்ட் கண்காணிப்புடன் பேச்சுவார்த்தை ரகசியமாக நடக்கும். இந்த விவரங்களை மீடியாக்களில் வெளியிடக்கூடாது. சமரச பேச்சு குறித்த அறிக்கையை 4 வாரங்களில் மத்தியஸ்தர்கள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மத்தியஸ்தர்கள் குழுவில் இடம்பெற உள்ள 3 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
08-மார்-201921:26:47 IST Report Abuse
M.COM.N.K.K. ஒரு தாய் மக்கள் நாம் என்போம் ஒன்றே எங்கள் குலமென்போம் தலைவன் ஒருவன் தான் என்போம் சமரசம் எங்கள் வாழ்வவென்போம் சமரசம் எங்கள் வாழ்வென்போம்
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
08-மார்-201921:39:04 IST Report Abuse
Darmavanஇதை மூர்க்க மத்தினனும் /பாவாடைகளும் ஒத்துக்கொள்கிறான்னா என்று கேள் அப்படியானால் ஏன் விட்டுக்கொடுக்கவில்லை ஆதாரங்களிண்டுகளுக்கு ஆதங்கமாக இருந்த போதும் .இந்த மாதிரி வேற்று உளர்களினால் பயனில்லை....
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
08-மார்-201920:38:49 IST Report Abuse
ravichandran குட்டைய குழப்பியாச்சு வாழ்க சட்டம் படித்தவர்கள் நாட்டில் சட்டம் படிச்சவர்கள் எதற்குமே தீர்வு சொல்ல மாட்டார்கள் குட்டையை குழப்பி தொடர்ந்து அப்பீல் தான் தீர்வே கிடைக்காது கிடைக்க விடமாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
08-மார்-201919:14:59 IST Report Abuse
vbs manian தன பொறுப்பை உச்சநீதி மன்றம் தட்டி கழிக்கிறது. ஏற்கனவே கஞ்சி சங்கராச்சாரியார். ரவிசங்கர் ஆகியோர் சமரசம் செய்ய முயன்று தோல்வியுற்றனர். சமரச தீர்ப்பை ஹிந்து முஸ்லீம் பிரிவுகள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X