பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வெறுப்புணர்வை பரப்பாதீர்!
பிரதமர் மோடி வேண்டுகோள்

வாரணாசி: மக்களிடையே வெறுப்புணர்வை பரப்புவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசுகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வெறுப்புணர்வு,பரப்பாதீர்,பிரதமர்,மோடி,வேண்டுகோள்



உ.பி.,யில், தன் சொந்த தொகுதியான, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் சாலையை அழகுபடுத்தும் திட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று அடிக்கல் நாட்டினார்.


இந்த விழாவில், அவர் பேசியதாவது: நம் நாட்டை, 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள், தங்களைப் பற்றி மட்டும் சிந்தித்தனரே தவிர, கடவுளைப் பற்றி சிந்திக்கவே இல்லை. எனவே தான், இந்த இடம், கவனிப்பாரற்று கிடந்தது.

நான் அரசியலுக்கு வருவதற்கு முன், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு பல முறை வந்து உள்ளேன். இந்த புனித தலத்தின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என, அப்போது நினைப்பேன். என் பல நாள் கனவு, இப்போது நினைவாகி உள்ளது.


காசி விஸ்வநாதர் கோவிலை சுற்றி, ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தன. அதை சுற்றியுள்ள கோவில்களில் பலர் நிரந்தரமாக வசித்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதில், 40 புராதன கோவில்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த கோவில்களின் வரலாறுகளை அறிய, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலையை விரிவுபடுத்தி, அழகுபடுத்தும் பணிக்காக, பல தனியார் சொத்துக்களை, அரசு கையகப்படுத்த வேண்டி இருந்தது. இறைவனுக்காக, தங்கள் சொத்துக்களை மகிழ்ச்சியுடன் கொடுத்தவர்களுக்கு, என் நன்றி. இந்த அழகுபடுத்தும் பணி, நிச்சயம் ஒரு முன்மாதிரி திட்டமாக அமையும். காசி நகரத்துக்கு, உலக அளவில் தனி அடையாளத்தை பெற்று தரும்.


Advertisement

உ.பி.,யில் ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சியினர், இந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு தரவில்லை. அவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து இருந்தால், அடிக்கல் நாட்டு விழாவுக்கு பதிலாக, இந்நேரம் பணிகளை முடித்து, துவக்க விழாவே நடத்தி இருக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.


பின், உ.பி., தலைநகர் லக்னோவில், 'மெட்ரோ' ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: உ.பி.,யில், நேற்று முன்தினம், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சில வியாபாரிகள் தாக்கப்பட்டனர்; இது கண்டிக்கத்தக்கது. இது போன்ற வெறுப்புணர்வுகளை, மாநில அரசுகள் ஊக்கப்படுத்தக் கூடாது. அதை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (28+ 21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
09-மார்-201920:32:41 IST Report Abuse

Visu Iyerயோகி அவர்களின் ஆட்சி சில வருடங்களாக நடந்து வருகிறதே.. அப்போ அடிக்கல் நாட்ட எண்ணம் இல்லையா.. இல்லை.. தேர்தல் வரட்டும் என காத்திருந்ததா... எதுவாக இருந்தாலும் மக்கள் பொறுமையுடன் இருக்கிறார்கள்..

Rate this:
Anandan - chennai,இந்தியா
09-மார்-201919:52:02 IST Report Abuse

Anandan//வெறுப்புணர்வை பரப்பாதீர்// அதெல்லாம் பிஜேபி வேலை.

Rate this:
Arul Kavimani - Bangalore,இந்தியா
09-மார்-201919:49:32 IST Report Abuse

Arul Kavimaniசொல்வது யாரு தெரியுதா?

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X