மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர்தேடி வந்ததே...

Updated : மார் 09, 2019 | Added : மார் 09, 2019
Advertisement


இஷா ஷர்வானி
பிரபலமான வானியல் நடனக்கலைஞர்

நடன கலைஞரான இந்திய தாய்க்கும்-இசைக்கலைஞரான ரஷ்ய தந்தைக்கும் பிறந்தவர்.இரண்டு வயதில் இருந்து நடனமாடிவருபவர்.நடிகையும் கூட.கதக் முதல் களரி வரை பல்வேறு கலைகளை கற்றுவர் தான் கற்ற விஷயங்களில் இருந்து இவரே உருவாக்கியதுதான் வானியல் நடனங்கள்.(aerial dancer)
Advertisement


வானியல் நடனக்கலைஞர் என்றால் இவரது நடனம் பெரும்பாலும் தரையில் இருக்காது கயிற்றில் தொங்கியபடி அல்லது அந்தரத்தில் கம்பிகளின் உதவியால் பறந்தபடி நடனமாடுவர் தொங்குவதற்கு பரப்பதற்கு வாய்ப்பில்லாத இடத்தில் தரையில் கொஞ்சமாக கால் பதித்தபடி பறந்து பறந்து ஆடுவர்.சிவசக்தி நடனம் மிகவும் பிரபலம்.
பெரும்பாலும் வெளிநாடுகளில் பிரம்மாண்டமான அரங்குகளில் இவரது நடனம் இடம் பெறும் இந்தியாவில் எப்போதாவது இவரது நடனம் நடைபெறும்.உலகின் சிறந்த கலைஞர்கள் எங்கு இருந்தாலும் அவர்களது நிகழ்ச்சியை நடத்தி வருபவரான கோவை ஈஷா மைய நிறுவனர் சத்குரு அவர்கள் இந்த வருட மகா சிவராத்திரிக்கு இஷா ஷர்வானியின் நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.இதற்காகவே ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்தார்.
முப்பது நிமிட நிகழ்ச்சிதான் ஆனால் முப்பது நொடிக்குள் நடந்து முடந்தது போன்ற ஒரு விறுவிறுப்பு.ஓரு மின்னலைப் போல மேடையில் தோன்றிய இஷா ஷர்வானி அடுத்த அடுத்த தனது நடனத்தால் அனைவர் மனதையும் ஈர்த்துக் கொண்டார்.முரசு முழங்க பல்வேறு வாத்திய இசை பின்னனியில் இயங்க இவர் பறந்து பறந்து ஆடிய நடனம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X