அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., நடத்தும் தேர்தல் நாடகம்: இ.பி.எஸ்.,

சேலம்: ''எதிர்க்கட்சியாக இருக்கும் போது, பல்வேறு விமர்சனங்கள் வரும். கூட்டணி அமைக்கும் போது, ஒருமித்த கருத்து ஏற்படும். தி.மு.க.,வை எதிர்த்து, வைகோ எந்தளவு வசைபாடினார்! தற்போது கூட்டணியில் இணைந்து, புகழ்பாடுகிறார்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.


சேலத்தில் நேற்று, முதல்வர், இ.பி.எஸ்., அளித்த பேட்டி:


தே.மு.தி.க., கூட்டணி இழுபறியாக உள்ளதே?
ஊடகங்கள் தான், கூட்டணி இழுபறி என்கின்றன. ஒவ்வொரு கட்சிக்கும், ஒரு நிலைப்பாடு உள்ளது. அது, அவர்கள் நிலைப்பாடு.


எம்.பி.,க்கள், 37 பேர், தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என, தே.மு.தி.க., பொருளாளர், பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளாரே?

எதிர்க்கட்சியாக இருக்கும்போது, பல்வேறு விமர்சனங்கள் வரும். கூட்டணி அமைக்கும் போது, ஒருமித்த கருத்து ஏற்படும். அவர்கள், 'எதிர்க்கட்சியாக இருக்கும் போது தட்டி கேட்போம்; நல்லது செய்தால் பாராட்டுவோம்' என்றனர்.தி.மு.க.,வை எதிர்த்து, வைகோ எந்தளவு வசைபாடினார்... தற்போது கூட்டணியில் இணைந்து, புகழ்பாடுகிறார்!
கூட்டணி குறித்து பேசும் போது, பிரேமலதா, இப்படி கருத்து தெரிவிப்பது பற்றி?
இது, சட்டசபை தேர்தல் இல்லை. லோக்சபா தேர்தல். இந்தியா மிகப்பெரிய, 130 கோடி மக்கள் கொண்ட ஜனநாயக நாடு. அதற்கு, திறமையான, வலிமையான, அனுபவமிக்க, மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பவர், நரேந்திர மோடி தான். அந்த நோக்கில், கூட்டணி ஏற்பட்டுள்ளது. பா.ம.க., - பா.ஜ., உட்பட, தொடர்ந்து பல்வேறு கட்சிகள், எங்கள் கூட்டணியில் சேர்ந்தன. மேலும் சில கட்சிகள் இணையவுள்ளன. அ.தி.மு.க., தலைமையில், மெகா கூட்டணி ஏற்பட்டுள்ளது.


கே.சி.பழனிசாமி சந்திப்பு தொடர்பாக, அரசு தலைமை செயலகத்தை, அ.தி.மு.க., கட்சி அலுவலகமாக மாற்றியதாக, தி.மு.க.,

சார்பில், கவர்னரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதே?
பொய் புகார் கொடுப்பது தான், அவர்கள் வேலை. அவர், கட்சியில் சேர்க்கப்பட்டதாக தகவல்வெளியிடப்பட்டதா... இல்லையே! முன்னாள், எம்.பி., என்ற முறையில், என்னை சந்திக்க வந்தார். ஏன், எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் கூட, தலைமைச் செயலகத்தில் என்னை சந்தித்து சென்றார். கே.சி.பழனிசாமி, சில கோரிக்கைகளை வைத்து சந்தித்தார்.பூத கண்ணாடி வைத்து தேடினாலும், தவறை கண்டுபிடிக்க முடியாது. அது தவறான கருத்து.ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை குறித்து?
எங்கள் அதிகாரப்படி நடவடிக்கை எடுக்கிறோம். விடுவிக்க வேண்டும் என, அமைச்சரவையை கூட்டினோம். கவர்னருக்கு அனுப்பிவைத்தோம். மறைந்த, தி.மு.க., தலைவரின் ஆட்சி காலத்தில், அமைச்சரவையில் எழுதி வைத்திருப்பது என்ன என்பது குறித்து, என்னால் கூற முடியும். அவர் மறைந்ததால், தற்போது தெரிவிக்க முடியாது. ஆனால், நேரம் வரும் போது தெரிவிப்பேன். தி.மு.க.,வினர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது குறித்து பேச, அக்கட்சியினருக்கு தகுதியில்லை. தேர்தலுக்காக, நாடகம் ஆடுகின்றனர். இவ்வாறு, முதல்வர், இ.பி.எஸ்., பேட்டிஅளித்தார்.

D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம், முதல்வர் இ.பி.எஸ்., பா.ம.க., பாமக, தேமுதிக, தே.மு.தி.க., அ.திமு.க., அதிமுக, எடப்பாடி பழனிசாமி,
தே.மு.தி.க.,வுக்கு பா.ம.க., வரவேற்புசேலம் வந்த, முதல்வர் இ.பி.எஸ்.சை, மரியாதை நிமித்தமாக, பா.ம.க., தலைவர், ஜி.கே.மணி சந்தித்தார்.பின், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், அ.தி.மு.க., பெரிய கட்சி. கடந்த, சட்டசபை தேர்தலில், மூன்றாவது கட்சியாக, பா.ம.க., உருவெடுத்தது. முதலாவது, மூன்றாவது கட்சிகள் இணைந்து, மெகா கூட்டணி

Advertisement

அமைத்துள்ளன. அ.தி.மு.க.வுடன், பா.ம.க., சேர்ந்தவுடனே, தி.மு.க., ஆடிப்போய்விட்டது. இது, வலிமையான கூட்டணி என தெரிந்து, அதற்கு எதிராக சதி நடக்கிறது.தே.மு.தி.க.,வை, பா.ம.க., முழு மனதோடு வரவேற்கிறது. எந்த கூட்டணியில் சேர வேண்டும் என, முடிவெடுப்பது, அந்த கட்சியின் உரிமை. நாங்கள் வேகமாக முடிவெடுத்துவிட்டோம். மோடி மீண்டும் பிரதமராகி, தமிழகத்தின் கோரிக்கைகளை செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.'கூட்டணியை உடைக்க சதி'


சேலம் மாவட்டம், ஓமலுாரில் உள்ள, அ.தி.மு.க., புறநகர் கட்சி அலுவலகத்தில், நேற்று நடந்த, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது:வலிமையான கூட்டணி அமைத்துள்ளோம். அதை உடைக்க, எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்து வருகின்றன. அ.தி.மு.க., கூட்டணியை கண்டு, ஸ்டாலின் அரண்டு போய் உள்ளார். இக்கூட்டணி, அடுத்த தேர்தலிலும் தொடரும். பாலில், ஒரு துளி விஷம் கலந்தாலும் கெட்டுவிடும். அதனால், கூட்டணி கட்சியினர், கவனமாக செயல்பட்டு, முழு ஒத்துழைப்பு நல்கி, தேர்தலை சந்திக்க வேண்டும்.கூட்டணி வலிமையை, தேர்தலில் உணர்த்த வேண்டும். இரு நாட்களில், ஒரு சில கட்சிகள் இணையவுள்ளன. புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளிலும், நாம் வெற்றி பெற வேண்டும். ஒரு மாதம் மட்டுமே, தேர்தலுக்கு உள்ளதால், கட்சியினர் தீவிரமாக பணிபுரிய வேண்டும். கூட்டணி இறுதியான பின், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து, ஊழியர் கூட்டங்களை நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
11-மார்-201905:05:16 IST Report Abuse

meenakshisundaramஎன்னவொப்பா மாதவா இந்த தடவை மக்கள் நல்ல படி சிந்திச்சு திமுகவை ஒழிக்க வழிசெய்யணும்பா,

Rate this:
Chowkidar Muthukon - madurai,இந்தியா
10-மார்-201915:53:28 IST Report Abuse

Chowkidar Muthukonமுடியட்டும் தெலுங்கர்கள் சுடலைகளின் தமிழர்களினமிதான ஆட்சி, அதிகாரம். தொடரட்டும் கொங்கு தமிழன், முக்குலத்து சிங்கத்தமிழர்களின் ஆட்சி. பித்தலாட்ட திமுகவிற்கு கொங்கு தமிழன் சுத்த தாயமொழியை தமிழக கொண்டவர் எடப்பாடி, எவ்வளவோ மேல். இந்துவிரோதி திமுக, இந்துக்களின் துரோகி திமுக அழியும் நாளே தமிழர்களின் முழு சுதந்திரம். பார்த்த மாதா வாழ்க, ஜெய்ஹிந்த்.

Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
10-மார்-201918:10:57 IST Report Abuse

sankarஇந்துக்களை ஆதரிக்கும் கட்சிக்கு மட்டும் ஒட்டு போடுங்க . மகளை பெற்ற இசுலாமியர்களே உங்களுக்கு முத்தலாக்கிலிருந்து விடுதலை கொடுப்பவர் மோடி தான் அதற்காகவும் மோடியின் ஆட்சியில் எந்த முஸ்லிமும் பாதிக்க படவில்லை . வியாபாரம் பெருகு கிறது அது உங்களுக்கு நல்லது . கிறிஸ்தவர்களே காசு கொடுத்து வேலை கொடுத்து மதம் மாற்றம் செய்யும் ஊழியர்கள் இருந்தால் அவர்களை ஒதுக்கி தள்ளுங்கள் . இயேசு கிறிஸ்து யாரையும் அப்படி மதமாற்றம் செய்யவில்லை . மனம் மாறி வருபவர்கள் எந்த மதத்திலிருந்து எந்த மதம் வேண்டுமானாலும் போகலாம் . காங்கிரஸ் ஒரு கிறிஸ்த்தவ கட்சி என்ற எண்ணத்தில் நீங்கள் ஒட்டு போடுவீர்கள் என்றால் உங்களை இயேசு மன்னிக்க மாட்டார் . பாவிகளுக்கு துணை போவதும் பாவம் செய்வதே . ...

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-மார்-201912:00:44 IST Report Abuse

Malick Rajaஉலகத்துக்கே தங்களின் நாடகத்தை நடத்திய ஈபிஎஸ் அண்ட் ஓபிஎஸ் கம்பெனி தனிப்பெருமை கொண்டது ..

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X