அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தர்மசங்கட நிலையில் தே.மு.தி.க.,
பின்னணியில் பலவித பேரங்கள்
கசிந்தது '25 மாடி' ரகசியம்

லோக்சபா தேர்தல் களத்தில் கவலைக்கிடமான நிலைக்கு தே.மு.தி.க., தள்ளப்பட்டுள்ளது. ஆனால் கூட்டணி அமைப்பதாக பா.ஜ.,விடம் வாக்குறுதி கொடுத்து சொந்த வேலைகளை தே.மு.தி.க., 'பெரும்புள்ளி' ஒருவர் சாதித்துக் கொண்டது அம்பலமாகி உள்ளது.

 D.M.D.K,DMDK,Vijayakanth,தே.மு.தி.க,விஜயகாந்த்

தி.மு.க., கூட்டணி கதவை அடைத்ததாலும், அ.தி.மு.க.,வில் கேட்ட தொகுதி கிடைக்காததாலும் லோக்சபா களத்தில் அக்கட்சி தன்னந்தனியாக தவிக்கிறது. தே.மு.தி.க., 'பெரும்புள்ளி' ஒருவராலே அக்கட்சி 'ஊசலாடும்' நிலைக்கு வந்த பின்னணி ரகசியம் தற்போது கசிந்துள்ளது.


அதன் விவரம்:அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி பல மாதங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமற்ற வகையில் உறுதியானது. இக்கூட்டணியில் தே.மு.தி.க.,வை எப்படியாவது சேர்க்க வேண்டுமென பா.ஜ., விரும்பியது. இத்தேர்தலில் அக்கட்சிக்கு 2.4 சதவீதம் ஓட்டு கிடைக்கும் என உளவுத்துறை அறிக்கை அளித்திருந்ததே அதற்கு காரணம்.இதனால் அக்கட்சியையும் சேர்த்தால் பலம் அதிகரிக்கும். வெற்றி வாய்ப்பு கூடும் என பா.ஜ., கணக்கு

போட்டது. இதற்கு ஏற்பாடு செய்யும்படி முன்பே அ.தி.மு.க.,வுக்கு உத்தரவிடப்பட்டது. அவ்விருப்பத்தை பா.ஜ., மூத்த தலைவர்கள் தே.மு.தி.க., தலைமையிடமும் தெரிவித்தனர்.


25 மாடி ரகசியம்இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்பிய தே.மு.தி.க.,வின் முக்கிய புள்ளி
ஒருவர், சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் பெட்ரோல் பங்க் அமைக்க பா.ஜ.,விடம் உதவி கோரியுள்ளார். இதற்கு உடனடியாக மத்திய அரசு மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் புதிய மெட்ரோ ரயில் திட்ட மண் பரிசோதனை பணிகள் நடக்கின்றன. இதற்கான வழித்தடங்கள் வரைபடம் மூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த வழித்தடம் செல்லும் பகுதியில் 'பெரும்புள்ளி' 25 மாடிகள் கொண்ட குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறார்.


சற்று தொலைவில் அமைக்க திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் தடத்தை தனது குடியிருப்பு அருகே கொண்டு வந்து, ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என 'விருப்பம்' தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழித்தடம் மாற்றுவதற்கான ஏற்பாடும் நடக்கிறது.தே.மு.தி.க.,வில் முடிவெடுக்கும் பொறுப்பில் இருக்கும் அப்புள்ளி பா.ஜ., மூலம் உதவிகளை பெற்றதால் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தினார்.'தி.மு.க., பக்கம் செல்ல வேண்டும்' என்ற நிர்வாகிகள் விருப்பத்தை நிராகரித்து, அ.தி.மு.க.,விடம் பேச்சு நடத்தியதற்கு இதுவே காரணம்.


தாமதம் ஏன்கூட்டணி பேச்சில், பா.ம.க.,வுக்கு 7 தொகுதி வழங்கப்பட்டு இருக்கும் நிலையில்,

Advertisement

தங்களுக்கு கூடுதலாக தொகுதிகளை தர வேண்டும் என அ.தி.மு.க.,விடம் தே.மு.தி.க., வலியுறுத்தியது. ஆனால், இடைத்தேர்தல் நடக்க உள்ள 21 சட்டசபை தேர்தலில் வடமாவட்டங்களின் 9 தொகுதிகளில் கணிசமான அளவு வன்னியர் ஓட்டு உள்ளது.அதை பா.ம.க., மூலம் வேட்டையாடவே அக்கட்சிக்கு 7 தொகுதிகளை அ.தி.மு.க., அள்ளி கொடுத்திருந்தது. இடைத்தேர்தலில் தே.மு.தி.க.,வால் பெரிய அளவில் பயன் இருக்காது என்பதால், அக்கட்சிக்கு 4 தொகுதிகளை மட்டும் கொடுக்க விரும்பியது. இதை ஏற்க தே.மு.தி.க., மறுத்தது.இதில் சமரசம் செய்ய முயன்ற பா.ஜ., மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு ராஜ்யசபா 'சீட்' ஒதுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தும் தே.மு.தி.க., உடன்படவில்லை. இதனால் அ.தி.மு.க., பா.ஜ., தலைமை 'அப்செட்' ஆனது; இழுபறி நீடிக்கிறது.மொத்தத்தில் கூட்டணி அமையாவிட்டாலும் 'பெரும்புள்ளி' நினைத்த காரியம் நிறைவேறிவிடும்.நடிகர் கவுண்டமணி சொல்வது போல், 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...'


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
12-மார்-201910:33:19 IST Report Abuse

oceதேமுதிகவுக்கு அல்வா கொடுத்து அந்த 25 மாடி வீடு கட்டும் நபர் யார் என எவருக்காவது தெரியுமா. பிழைக்க தெரிந்த ஆள். தெரிந்தால் பெரிய மாலையாக வாங்கி போடலாம்.

Rate this:
12-மார்-201913:24:42 IST Report Abuse

வெற்றிக்கொடி கட்டு மச்சானுங்கோ ...

Rate this:
Young Prince - Bangalore,இந்தியா
14-மார்-201913:39:48 IST Report Abuse

Young Princeஎப்படி பாஸ் உங்களுக்கு theriyum. என்னமோ ponga. எவன் வந்தந்தாலும் நமக்கு ஆப்பு தான் ...

Rate this:
chandranaidu - Theni,இந்தியா
12-மார்-201909:42:43 IST Report Abuse

chandranaiduவிஜயகாந்த் கட்சியை இழுத்து மூடுவது நல்லது கொஞ்சம் நஞ்சம் மரியாதை காப்பாத்திக்கலாம் இல்லனா கேவலப்படவேண்டிருக்கும்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-மார்-201908:12:39 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎவனவனோ சாப்பிடுகிறான்

Rate this:
மேலும் 46 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X