அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது
ரஜினி அதிரடி

சென்னை: 'அரசுக்கு எதிராக, எந்த போராட்டமும் நடத்தக்கூடாது' என, ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Kollywood,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த், அரசு, போராட்டம்



லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என, முடிவு எடுத்துள்ள ரஜினி, 'சட்டசபை தேர்தல் தான் எங்கள் இலக்கு' என, தெளிவுப்படுத்தி இருந்தார்.இதனால், லோக்சபா தேர்தலில், ரஜினியின், 'வாய்ஸ்' யாருக்கு ஆதரவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில், 'மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, தீர்வு காண வேண்டும்.'ரஜினியின் அறிவிப்பின்றி, எந்த கூட்டமோ, போராட்டமோ நடத்தக்கூடாது'என, நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பில், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


இது குறித்து, ரஜினி மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:தேர்தல் நிலைப்பாடு குறித்து, ரஜினி தெளிவுப்படுத்தி விட்டார். ஆனால், பதவி ஆசைக்காக சிலர், மற்ற கட்சி களுக்கு ஆதரவுதெரிவித்து வருவதால், குழப்பம் ஏற்படுகிறது.சமீபத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் மற்றும்நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர். தி.மு.க.,வில், 20 ஆயிரம் உறுப்பினர்கள் இணைந்ததாக, போலி இணைப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து செல்லும் நபர்கள், தி.மு.க., உள்ளிட்ட எந்த

Advertisement

கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், அவரை எதிர்த்தே, ரஜினி மக்கள் மன்றத்தினர் ஓட்டளிப்பர்.அடிப்படை பிரச்னைகளை காரணம் காட்டி, போராட்டம் நடத்தும்போது, அது எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும்.எனவே, அரசுக்கு எதிராக எந்த போராட்டமும் நடத்தக்கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BoochiMarunthu - Paradise papers,பனாமா
10-மார்-201917:52:06 IST Report Abuse

BoochiMarunthuவாங்கின பணத்திற்கு அப்போ அப்போ வந்து கூவுவான்

Rate this:
Suri - Chennai,இந்தியா
10-மார்-201914:30:29 IST Report Abuse

Suriஇப்படிப்பட்ட செய்திகளை தொடர்ந்து நீங்கள் வெளியிட்டுக்கொண்டே இருங்கள். மக்கள் சேவை புரியுங்கள். புல்லுருவிகள் குறித்த தெளிவு மக்களுக்கு தெரியும்.

Rate this:
Suri - Chennai,இந்தியா
10-மார்-201914:26:43 IST Report Abuse

Suriமக்கள் மன நிலையில் இருந்து வேகுதூராம் தள்ளி இருக்கும் இந்த ஆசாமி மக்களிடம் ... படுவது உறுதி.

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X