பதிவு செய்த நாள் :
அபாயம்
84 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்...
சிறப்பு அனுமதியை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு

புதுடில்லி : அமெரிக்காவில், 'எச் - 4' விசா பெற்று, பணியாற்றி வருவோருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அனுமதியை ரத்து செய்ய, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து, அங்கு பணியாற்றும், 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு, வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, இந்தியர்கள், வேலை, டிரம்ப், விசா

பொறியியல் அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு, அமெரிக்காவில் பணியாற்ற, 'எச் - 1பி' என்ற விசா வழங்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் இந்த விசா பெற்று, பணியாற்றி வருகின்றனர்.இந்த விசா பெற்றவர்கள், தங்கள் மனைவி அல்லது கணவனை, தங்களுடன் அமெரிக்கா அழைத்துச் செல்ல, எச் - 4 என்ற விசா வழங்கப்படுகிறது.இந்த விசா பெற்றவர்கள், தங்கள் கணவர் அல்லது மனைவியுடன், அமெரிக்காவில் வசிக்கலாம். ஆனால், அங்கு வேலை பார்க்கவோ, சொந்த தொழில்


செய்யவோ முடியாது.

பரிந்துரைஇந்நிலையில், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்தபோது, 2015ல், இந்த, எச் - 4 விசா நடைமுறையில் சிலசலுகையை அறிவித்தார்.அதில், 'எச் - 4 விசா வைத்திருப்பவர்கள், இ.ஏ.டி., எனப்படும், சிறப்பு பணி அனுமதி ஆவணம் என்ற திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் பணியாற்ற அனுமதி வழங்கப்படும்' என, அறிவித்தார். இதன் வாயிலாக, எச் - 4 விசாவில் அமெரிக்கா சென்ற இந்தியர்கள் பலர், வேலைவாய்ப்பு பெற்றனர்.இந்நிலையில், இந்த, எச் - 4 விசாவில் உள்ள சிறப்பு பணி அனுமதி ஆவண திட்டத்தை ரத்து செய்ய, அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.இந்த முடிவு, ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'சிறப்பு பணி அனுமதி நடைமுறையை ரத்து செய்ய வேண்டாம்' என, அமெரிக்க அதிபரிடம் கோரிக்கை வைக்க, எச் - 4 விசா வைத்துள்ளோர் தரப்பில் முடிவுசெய்யப்பட்டது.

அமெரிக்காவில் வாழும், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை ஒன்றிணைக்கும் விதமாக, 'ஐ.டி., ப்ரோ அலையன்ஸ்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பின் உதவியுடன், 'எச் - 4 விசா வைத்துள்ளவர்களுக்குவழங்கப்பட்டு வந்த சிறப்பு பணி அனுமதியை ரத்து செய்ய வேண்டாம்' என, வலியுறுத்தி,

Advertisement

வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கையெழுத்து
இந்த மனுவுக்கு ஆதரவு தெரிவிப்போர், இந்த இணையதளத்தில் பதிவாகியுள்ள மனுவில் கையெழுத்திட வேண்டும். இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட ஒரு மாத காலத்திற்குள், இதற்கு ஒரு லட்சம் பேர் ஆதரவு தெரிவித்தால், இதை அதிபர் மாளிகை மறுபரிசீலனை செய்யும் என்பது அந்நாட்டு நடைமுறை. அமெரிக்காவில், எச் - 4 விசாவில் சிறப்பு அனுமதி பெற்று பணியில் இருப்பவர்களில், இந்தியர்களே அதிகம். எனவே, அதிபர் டிரம்பின் பரிந்துரை நடைமுறைக்கு வந்தால், 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.


Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
17-மார்-201914:19:07 IST Report Abuse

Sathish அதெல்லாம் ஒன்றும் பறிபோகாது மோடி இருக்கும் வரை. நல்லா சம்பாரிக்கிறாங்க அமெரிக்கா போயி, இங்க அவங்க குடும்பத்தாருக்கு ஒரு கவலையும் இல்ல. கேட்டா ஐயோ என் புள்ள அவன் சம்சாரம் என்னோட பேரபுள்ளைங்க அங்க என்ன கஷ்டப்படறாங்களோ என்று ஒரு செண்டிமெண்ட் பிட்ட போடவேண்டியது நம்மகிட்ட. மாசா மாசம் சின்னதா ஒரு ஆன்மீக டூர், எல்லா கோவில் விழாக்களிலும் மொதல்ல தெரியிற தலைகள் இவங்க வீட்டு ஆளுங்கதான். தினமும் ipad இல் சாட்டிங், இங்கிருந்தே சமையல் முதல் சாமி கும்பிடுவது வரை ஆன்லைனிலேயே நடத்தும் இவராகலாவது வேலையை இழந்துவிட்டு இந்தியா வர்றதாவது. நல்லா சம்பாரிச்சு பழகிடிச்சுன்னா அதை விட்டுவிட்டு வர மனசு வராது. எப்படியாவது அங்கேயே தங்கிவிடுவார்கள்.

Rate this:
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
16-மார்-201910:21:29 IST Report Abuse

Muthukrishnan,Ramஅமேரிக்கா இப்போ தான் அறிவுப்பூர்வமாக முடிவெடுத்துள்ளது.

Rate this:
Antony Raj - tirunelveli,இந்தியா
15-மார்-201912:34:55 IST Report Abuse

Antony Rajஇது என்ன தகவல்? எச்-4 க்கு எதிராக சட்டம் அமெரிக்க காங்கிரசில் பாஸ் ஆகி 84 ஆயிரம் இந்தியருக்கு வேலை இல்லாமல் ஆகிவிட்டது என்றால் அந்த தகவலை தெரிவிக்கலாம். எச்-4 க்கு அதுவும் இந்தியருக்கு எதிராக ஒரு சட்டமும் பாஸ் ஆகப்போறதும் இல்லை யாரும் வேலை இல்லாமல் இருக்கப்போறதும் இல்ல ஒரு அபாயமும் இல்ல.

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X