பொது செய்தி

இந்தியா

ஏப்., 18ல் தமிழகத்தில் ஓட்டுப்பதிவு; இடைத்தேர்தலும் நடக்குது

Updated : மார் 10, 2019 | Added : மார் 10, 2019 | கருத்துகள் (23)
Share
Advertisement
LokSabhaElections2019, Sunil Arora, ElectionCommission, லோக்சபா தேர்தல், தமிழகம்

புதுடில்லி: தமிழகத்தில் வரும் ஏப்.,18ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்தார். மேலும் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகம் , புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்., 18 ம் தேதி தேர்தல் நடக்கும்


latest tamil news




தமிழக வேட்பு மனு விவரம்


வேட்புமனு தாக்கல்: மார்ச் 19 ல் துவங்கும்

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: மார்ச் 26

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 27

திரும்ப பெற கடைசி நாள்: மார்ச் 29
தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் மே 23 ல் எண்ணப்படும் இவ்வாறு அவர் கூறினார்.


21 சட்டசபைக்கு இடைத்தேர்தல்


தமிழகத்தில் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு தேர்தல் கமிஷனர் அளித்த பதிலில்: லோக்சபா தேர்தல் நடக்கும் போதே காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும் என அவர் தெரிவித்தார்.




இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகள்


அரூர், குடியாத்தம், பாப்பிரெட்டிபட்டி, பெரம்பூர், சோளிங்கர், திருப்போரூர், பூந்தமல்லி, தஞ்சை, நிலக்கோட்டை, ஆம்பூர், பெரியகுளம், ஆண்டிபட்டி, பரமக்குடி, சாத்தூர், மானாமதுரை, விளாத்திக்குளம், திருவாரூர், ஒசூர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ
11-மார்-201900:20:00 IST Report Abuse
srideesha திமுக கூட்டணி தேர்தலில் தோற்றுவிட்டால் ஸ்டாலின் அவருடைய மைண்ட் வாய்ஸ் தேர்தல் தேதி ஏப்ரல் 18 ஆனால் முடிவு அறிவிப்பு மே 23, இடைப்பட்ட நாட்களில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து திமுக கூட்டணிக்கு விழுந்த வாக்குகள் காணாமல் போய்விட்டது, அதனால் தான் திமுக கூட்டணி தேர்தலில் தோல்வி அடைந்தது. எப்பூடி
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
10-மார்-201921:37:45 IST Report Abuse
மலரின் மகள் மே இரண்டாவது அல்லது முதல் வாரத்தில் வைத்திருக்கலாம். பள்ளி கல்லூரிகளை அவசரப்படுத்தி வேகமாக பரீட்சை வைக்க சொல்லி அவகாசம் இல்லாமலே செய்து விட்டது ஆணையம். தமிழகத்தில் தான் என்றுமே பிரச்சினைகள் இல்லையே தேர்தல் நடத்துவதில். மேலும் மே மாதம் தாங்கவே அனைத்து பரிட்சைகளும் முடிந்து விடும். ஓட்டுக்கள் எண்ணுவது மே கடைசி வாரம் எனும்போது அதற்கு மூன்று ஐந்து தினங்களுக்கு முன்பு கூட தாராளமாக தேர்தலை நடத்தி இருக்கலாம்.
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-மார்-201923:07:09 IST Report Abuse
தமிழ்வேல் மெஷின் எண்ணுறதுக்கு நாள் வேணும் இல்ல இல்ல, மாதம் வேணும். ஆறு காதம் உள்ள போதே..........னு சொல்லுவாங்க. /// ஓட்டுக்கள் எண்ணுவது மே கடைசி வாரம் எனும்போது அதற்கு மூன்று ஐந்து தினங்களுக்கு முன்பு கூட தாராளமாக தேர்தலை நடத்தி இருக்கலாம். ///...
Rate this:
Cancel
மூ. மோகன் - வேலூர்,இந்தியா
10-மார்-201921:32:54 IST Report Abuse
மூ. மோகன் அரசு கஜானாவை காலி செய்து, ஓட்டை அறுவடை செய்யக் காத்திருக்கும் கூட்டத்துக்கு மக்கள் தங்கள் சக்தியைக் காட்டணும் இந்த தேர்தல் மூலம் பார்ப்போம் நம் மக்கள் எந்த அளவுக்கு புத்திசாலிகளென்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X