முதுகெலும்பு இல்லாத நத்தை கமல்: எச்.ராஜா ஆவேச தாக்கு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதுகெலும்பு இல்லாத நத்தை கமல்: எச்.ராஜா ஆவேச தாக்கு

Updated : மார் 10, 2019 | Added : மார் 10, 2019 | கருத்துகள் (43)
கமல், எச்.ராஜா, பா.ஜ., கட்சி

சென்னை: இன்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் அளித்த பேட்டியில்: பா.ஜ., வை நோட்டாவை போல் தேட வேண்டிய கட்சி என விமர்சித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள பா.ஜ.,தேசிய செயலர் எச்.ராஜா அவரது டுவிட்டரில்: " விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் எதிப்பு தெரிவித்த போது பணத்திற்காக பிழைப்பிற்காக அழுது புலம்பி மண்டியிட்டு வெட்டுக்களை ஏற்ற முதுகெலும்பு இல்லாத நத்தை நாடாளும் பாஜகவை நக்கலடிப்பது வேடிக்கையாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு இவரை தேட வேண்டியிருக்கும். இவ்வாறு ராஜா கூறியுள்ளார்.




கமல் கூறியது என்ன ?

தமிழகத்தில் நோட்டாவில் கண்ணுக்கு தெரியாமல் உள்ள பா.ஜ.,வை தேடி கண்டுபிடிக்க எங்களின் சின்னமான டார்ச் உதவும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X