அதிமுக - தேமுதிக கூட்டணி உடன்பாடு; தே.மு.தி.க., வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக - தேமுதிக கூட்டணி உடன்பாடு; தே.மு.தி.க., வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

Updated : மார் 10, 2019 | Added : மார் 10, 2019 | கருத்துகள் (52)

சென்னை: அதிமுக - தேமுதிக கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளதாகவும் இந்த கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., நிருபர்களிடம் தெரிவித்தார்.







கூட்டணியில் யார் யார்?


லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பதில் தேமுதிக இடம்பெறுவது தொடர்பாக இழுபறி ஏற்பட்டது. அதிமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வருவாரா, வரமாட்டாரா என்ற சந்தேகம் நிலவியது.இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்றார். அதிமுக கூட்டணியில் பா.ஜ., பா.ம.க., புதியதமிழகம், புதியநீதிக்கட்சி, என்ஆர் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது.






கையெழுத்து


இந்நிலையில் தேமுதிகவுடன் கூட்டணி இறுதிக்கட்ட பேச்சு இன்று ( 10 ம் தேதி) இரவு சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் நடந்தது. முன்னதாக கட்சி தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஒட்டலுக்கு வந்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பி.எஸ்.,சும் ஓட்டலுக்கு வந்தார். இதன்பின்னர் முதல்வர் இ.பி.எஸ்சும் வந்தார். அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும் வந்தனர். இரு தரப்பினர் இடையே நடந்த பேச்சில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.






நிருபர்களுக்கு பேட்டி


பின்னர் முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் அதிமுகவும், தேமுதிகவும் கூட்டணி அமைத்து தமிழகம், புதுச்சேரியில் தேர்தலை சந்திப்பது என நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில், தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவை அளிக்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மெகா கூட்டணி, வெற்றி கூட்டணியில், கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை கலந்து பேசி சுமூகமாக முடிவெடுக்கப்பட்டு தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


வரவேற்பு


பின்னர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறியதாவது: அதிமுக தேமுதிக கூட்டணி வெற்றி கூட்டணி. 2011 ம் ஆண்டை போல், லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். உள்ளாடசி தேர்தலிலும் கூட்டணி தொடரும். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆட்சிக்கு முழு ஆதரவை அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X