ஒன்றிய செயலாளர் பொறுப்பேற்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய செயலாளர் பொறுப்பேற்பு

Added : மார் 10, 2019 | கருத்துகள் (1)

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் அ.தி.மு.க.,ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்ற திருமூலஸ்தானம் வாசு முருகையன் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.பி., எம்.எல்.ஏ., முருகுமாறன் ஆகியோர் பரிந்துரையின் பேரில். திருமூலஸ்தானம் கிராமத்தை சேர்ந்த வாசு முருகையன் காட்டுமன்னார்கோவில் ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.அதனை தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் அடுத்த தெற்கிருப்பில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை, எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., முருகுமாறன் தலைமையில், வாசு முருகையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, காட்டுமன்னார்கோவில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. எம்.எல்.ஏ., முருகுமாறன் பேசுகையில், 'காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வரும்நாடாளுமன்ற தேர்தலில், அதிக ஓட்டுக்களை பெற்று தரவேண்டும். இதற்கு கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும்' என்றார்.நகர செயலாளர், எம்.ஜி.ஆர்., தாசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அறிவுக்கரசன். ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் அசோகன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், நகர பொருளாளர் வசந்தகுமார், நகர துணை செயலாளர் கலியமூர்த்தி, இளைஞர் அணி செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் தோத்தாத்திரி, பாலச்சந்தர், வாசு கிருஷ்ணமூர்த்தி சுவாமிநாத சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X