பதிவு செய்த நாள் :
சோகம்!
எத்தியோப்பியா விமான விபத்தில் 157 பேர் பலி;
இந்தியர்கள் நான்கு பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு

அடிஸ் அபாபா: வறுமைக்கு பெயர் பெற்ற, கிழக்கு ஆப்ரிக்க நாடான, எத்தியோப்பியாவில், பயணியர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில், விமானத்தில் இருந்த, எட்டு விமான ஊழியர்கள், 149 பயணியர் என, 157 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில், இந்தியர்கள் நான்கு பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா,விமான விபத்து, 157 பேர் பலி,இந்தியர்கள்,நான்கு பேர்,உயிரிழப்பு


எத்தியோப்பியாவில், அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் விமானம், தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து, மற்றொரு கிழக்கு ஆப்ரிக்க நாடான, கென்யாவின் நைரோபிக்கு, நேற்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில், 50 கி.மீ., தொலைவில் உள்ள, பிஷோப்டு பகுதியில், இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த, எட்டு விமான ஊழியர்கள், 149 பயணியர் உட்பட, 157 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, எத்தியோப்பிய விமான நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 'போயிங் 737 - 8௦௦ மேக்ஸ்' என்ற இந்த விமானம், கடந்தாண்டு நவம்பரில் தான் வாங்கப்பட்டது. இந்த விமானம் விழுந்து நொறுங்கி, 157 பேர் பலியாகி உள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வறுமைக்கு பெயர் பெற்ற எத்தியோப்பியாவை வளர்ச்சியின் பாதைக்கு எடுத்துச் செல்ல, பிரதமர், அபி அஹமது, பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

விமான துறையில், வெளிநாடுகளின் முதலீடு செய்வதற்கும் அவர் அழைப்பு விடுத்து உள்ளார். ரஷ்யாவின் மாஸ்கோ உட்பட, பல நாடுகளுக்கு மீண்டும் விமான சேவையை துவக்கி உள்ளோம். நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனமாக, எத்தியோப்பிய விமான நிறுவனம் விளங்கி வருகிறது. தற்போது விபத்து நடந்துள்ள, பிஷோப்டு பகுதியில், மிகப் பெரிய நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விபத்து நடந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த விமான விபத்தில், இந்தியாவைச் சேர்ந்த, நான்கு பேர் உயிரிழந்ததாக, எத்தியோப்பிய விமான நிறுவனம் கூறியுள்ளது. கென்யாவைச் சேர்ந்த,

Advertisement

32 பேர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த, ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவைச் சேர்ந்த, 18 பேர், சீனா, அமெரிக்கா, இத்தாலியைச் சேர்ந்தவர்கள், தலா, எட்டு பேரும் பலியாகியுள்ளனர்.

பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த, தலா, ஏழு பேரும், எகிப்தைச் சேர்ந்த ஆறு பேர்; நெதர்லாந்தைச் சேர்ந்த ஐந்து பேர்; இந்தியா, ஸ்லோவாகியாவைச் சேர்ந்த, தலா, நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக விமான நிறுவனம் கூறியுள்ளது. உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த விபத்துக்கு, எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமது, அதிபர் உஹுரு கென்யட்டா உள்ளிட்டோர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, தென்கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட, போயிங் 737 - 8௦௦ மேக்ஸ் விமானம், ஜாவா கடலில் விழுந்ததில், 189 பேர் பலியாகினர். லயன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில், சில தொழில்நுட்ப கோளாறுகள் இருந்ததாக கூறப்பட்டது. மத்திய கிழக்கு நாடான, லெபனானின் பெய்ரூட்டில், 2010ல் நடந்த விபத்தில், எத்தியோப்பிய விமான நிறுவனத்தின் விமானம் சிக்கியது. அதில், 90 பேர் உயிரிழந்ததே, இந்த விமான நிறுவனத்தின் மிக பெரிய விபத்தாக இருந்தது.

கொலம்பியாவிலும் கோர விபத்து:

தென் அமெரிக்க நாடான, கொலம்பியாவில், 'லாசர் ஏரியோ' நிறுவனத்திற்கு சொந்தமான பயணியர் விமானம், வில்லாவிசென்சியோ நகரம் அருகே, தரையில் விழுந்து, தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த, தரைரா நகர பெண் மேயர், டோரிஸ் வில்லேகாஸ், அவரது கணவர், மகள் உட்பட, 12 பேர், உடல் கருகி பலியாகினர். இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விமானத்தை தரையிறக்க முயன்றபோது, இந்த விபத்து ஏற்பட்டதாக, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சூறாவளியில் சிக்கி, 30 பேர் காயம்:

மத்திய கிழக்கு நாடான துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு இயக்கப்பட்ட, துருக்கி விமான நிறுவன விமானம், அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்றபோது, கடும் சூறாவளியில் சிக்கியது. தரையிறங்குவதற்கு, 45 நிமிடங்கள் இருந்த நிலையில், சூறாவளியில் விமானம் சிக்கியது. மிகுந்த போராட்டத்துக்குப் பின், விமானம் தரையிறக்கப்பட்டது. சூறாவளியில் சிக்கி, விமானம் குலுங்கியதில், அதில் பயணம் செய்த, 30 பயணியருக்கு காயம் ஏற்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
11-மார்-201921:18:34 IST Report Abuse

மலரின் மகள்உள்நாட்டு கிளர்ச்சியால் வறுமைக்கு தள்ளப்பட்ட நாடு. வெளிநாட்டவர்களின் குறிப்பாக ஐ நா வின் உதவியால் கொஞ்சம் வளர்ச்சிப்பாதைக்கு செல்ல முயல்கிறார்கள். இருந்தாலும் மக்களின் கோரிக்கைகளை அரசு ஏற்க முன்வந்தாலும் தொடர்ந்து ஆங்காங்கே கிளர்ச்சிகள் நடைபெறுவதால் வறுமை ஏழ்மை மாறவில்லை. உணவு தட்டுப்பாடு அதிகம். பல்கலையின் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கூட மூன்றுவேளை நல்ல உணவு இல்லை என்கிறார்கள். ஒருவிதமான செய்டயையும் புல்லையும் அப்படியே எடுத்து உண்கிறார்கள் என்று கூட சொல்கிறார்கள். ஐ நா நிதியுதவியில் பல்கலைக்கழகங்கள் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து சற்று குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தி இருக்கிறார்களாம். வெளிநாட்டவர்களுக்கு உள்நாட்டவர்களை விட சில மடங்கு கூடுதல் சம்பளம் என்பதால் வெளி நாட்டவர்கள் இந்தியா போன்ற தேசத்தில் இருந்து சென்றவர்கள் சற்று வசதியானவர்களாக தெரிகிறார்கள். ஐ நா விலிருந்து பெரும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை வெளிநாட்டு ஆசிரியர்களுக்கு அளித்து விட்டு மீதமுள்ள பணத்தை வைத்து தான் பல்கலைகள் நிர்வகிக்க படுகிறது என்கிறார்கள். கல்வி அறிவு பெற்றதா தேசத்தில் கல்வி அறிவு பெற்றால் நன்கு வளமடைவார்கள் என்று ஐ நா உதவுகிறது. ஆசிரியர்களுக்கும் குறிப்பாக இந்தியர்களுக்கும் எத்தியோப்பியர்கள் நல்ல மதிப்பும் மரியாதையும் தருகிறார்கள். தொண்ணூறுகளில் பேருந்தும் சாலைவசதிகளும் பீகாரில் எப்படி இருந்ததோ அந்த நிலையில் தான் எத்தியோப்பியாவில் இன்று இருக்கிறது. அங்கிருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பினால் வந்து சேர்வதற்கு இரண்டு மாதங்கள் வரை ஆகும். பிரச்சினைகளை புரிந்து கொள்ளலாம். விபத்துக்கு பிந்தைய கூட்டம் நடைபெறும் இடத்தில் உயரதிகாரிகளை பாருங்கள் அனைத்தையும் தெரிய படுத்துவதாக இருக்கும்.

Rate this:
DINAKARAN S - Debrezeit/ Bishoftu,எத்தியோப்பியா
11-மார்-201916:12:00 IST Report Abuse

DINAKARAN Sஎத்தியோப்பியா என்றும் வறுமைக்கு பெயர் போனது அல்ல ..இந்தியா 1990 க்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படி தான் உள்ளது..ஆப்பிரிக்காவில் கடந்த 25 ஆண்டுகளாக நிலையான ஆட்சி நடை பெறுவதும் இங்கே மட்டும் தான்.. Ethiopian ஏர்லைன்ஸ் நிறுவனம் மிகச் சிறப்பான சேவை அளிக்கிறது..100 கும் அதிகமான விமானங்களை இயக்குகிறது..லாபகரமாக இயங்குகிறது.. இந்தியாவில் இருந்து தினம்தோறும் நான்கு சேவைகள் Mumbai மற்றும் டெல்லி நகரிலிருந்து இயக்குகிறது, ...

Rate this:
Narasimhan - Manama,பஹ்ரைன்
11-மார்-201920:55:26 IST Report Abuse

Narasimhanநன்றாக சொன்னீர்கள். ஒன்றும் தெரியாதவர்கள் வறுமை நாடு என்றெல்லாம் பிதற்றுகிறார்கள். அடிஸ் அபாபா இந்திய நகரங்களை காட்டிலும் நன்றாகவே உள்ளது. கண்டிப்பாக அவர்கள் விமான சேவையும் மிக அருமையாக உள்ளது. ...

Rate this:
metturaan - TEMA ,கானா
11-மார்-201912:49:21 IST Report Abuse

metturaanஆழ்ந்த இரங்கல்கள் .. அனைவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X