பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'பயங்கரவாத விஷயத்தில்
இனி பொறுக்க மாட்டோம்'

காசியாபாத்: ''பயங்கரவாதத்துக்கு, நாட்டை பலிகடா ஆக்க மாட்டோம்; பயங்கரவாத விஷயத்தில் இனி பொறுக்க மாட்டோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமர்,மோடி,பயங்கரவாதம்,இனி பொறுக்க மாட்டோம்,சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின், 50வது ஆண்டு நிறைவையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், காசியாபாதில் நேற்று அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: எவ்வளவு ஆண்டுகளுக்குத்தான்,

பயங்கரவாத தாக்குதல்களுக்கு பலிகடா ஆவது; இனி, பயங்கரவாதத்துக்கு எதிராக பொறுமையுடன் இருக்க மாட்டோம்.


அண்டை நாடு விரோத போக்குடன் உள்ளது; இங்குள்ள சிலர், அவர்களுக்கு ஆதரவாக, நம் நாட்டுக்கு எதிராகவே சதி செய்கின்றனர். இது போன்ற சூழ்நிலையில், நாட்டின் பாதுகாப்பில், சி.ஐ.எஸ்.எப்., போன்ற துணை ராணுவப் படைகளும், நம் முப்படைகளும் மிகவும் தீவிரமாகவும், அதிக விழிப்புடனும் இருக்க வேண்டியுள்ளது.


நாட்டை பாதுகாக்கும் இது போன்ற வீரர்களை மதிக்க வேண்டும். ஆனால், வி.ஐ.பி., கலாசாரம் இன்னும் இங்கு ஒழியவில்லை. அனைவரையும் மதிக்கும் கலாசாரம், மனமாற்றம் மக்களிடையே ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

'பதில் சொல்லுங்க'

காங்கிரஸ் தலைவர், ராகுல், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், நேற்று வெளியிட்டுள்ள செய்தி: கடந்த, 1999ல், ஆப்கானிஸ்தானுக்கு, நம் விமானத்தை, பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். சிறையில் உள்ள, பயங்கரவாதி, மசூத் அஸாரை விடுவித்தால் தான், அந்த விமானத்தை விடுவதாக கூறினர். அப்போது, இது தொடர்பான பேச்சில் ஈடுபட்டது, தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள, அஜித் தோவல் தான். பயங்கரவாதியை விடுவித்தது, அப்போதைய, பா.ஜ., அரசு. சமீபத்தில், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், மசூத் அஸாரின் அமைப்பு நடத்திய தாக்குதலில் உயிரிழந்த, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்களின் குடும்பத்தாருக்கும், இந்த உண்மையை, பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai,இந்தியா
12-மார்-201910:12:19 IST Report Abuse

Nisha Rathiராகுல் நீ ஒரு நாலாந்தர கூமுட்டை என்பதை தெளிவுபடுத்திவிட்டாய் விமானம் கடத்தி பயணிகளை கொல்வேன் என்று சொல்லும் தீவிரவாதியை உன் காங்கிரஸ் ஆட்சியில் தான் வளர்க்கப்பட்டது என்ற உண்மை நீ மக்களிடம் தெரிவிக்க வேண்டும் மக்கள் எதையும் மறக்கவில்லை தீவிரவாதிகளுடன் உனக்கும் உன் கட்சிகாரர்களுக்கும் எந்த அளவு தொடர்பு உள்ளது என்று மக்கள் நன்றாக அறிவார்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கேர்ள் இம்ரானைகனை பாராட்டுகிறாள் என்றால் உன் கட்சி எந்த அளவிற்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்று தெரிந்து விட்டது ராகுல்

Rate this:
Shroog - Mumbai ,இந்தியா
11-மார்-201916:35:52 IST Report Abuse

Shroogஇவரை யார் நம்புவார்கள்?? போன தேர்தலில் சுவிஸ் கருப்பு பணத்தை சொல்லி ஒட்டு வாங்கினார். சுவிஸ் கருப்பு பணத்தை கொண்டு வந்தாரா??? பிஜேபிக்கு எதிராக இருப்பவர்களிடமிருந்து மட்டும் CBI ரெய்டு விட்டு விட்டு., அவர்களிடம் கறுப்போ வெள்ளையோ, அந்த பணத்தை பிஜேபி கட்சியின் முதலீடாக ஆக்கிவிட்டார். இந்த தேர்தலில், பாகிஸ்தானை, கையில் எடுத்து கொண்டு விளையாட்டு காட்டுகிறார். 40+ CRPF jawans இறந்ததற்கு பிஜேபி தான் காரணம். 5 செக் போஸ்ட். 5 இடத்திலும் கண்டு பிடிக்க முடியாதவாறு, தீவிரவாதியை பெர்மிட் பண்ணி விட்டார்கள். 350 கிலோ வெடிகுடுகளை கொண்டு வந்த வாகனத்தை தடுக்க முடியவில்லை. தடுக்க முடியாதவாறு plan பண்ணி 42 CRPF ஜவான்ஸை கொன்று விட்டார். இவரை நம்பும் ஒவ்வொருவரும் கொலை குற்றவாளிகள்.

Rate this:
Manithan - Chennai,இந்தியா
11-மார்-201914:30:55 IST Report Abuse

Manithanநாட்டு மக்களும் இனி பொறுக்க மாட்டார்கள், போன தேர்தலில் நீங்க கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆச்சு, மொதல்ல அதை பத்தி பேசுங்க. அனைவரையும் மதிக்கும் கலாச்சாரத்தை உங்க கட்சி ஆட்களும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

Rate this:
pandi79 - denver,யூ.எஸ்.ஏ
11-மார்-201923:38:58 IST Report Abuse

pandi79ஐயா , மோடி வெற்றி பெற வேண்டுமா இல்லையா என்பதை பெருவாரியான இந்துக்கள் முடிவு செய்து கொள்ளட்டும் . காங்கிரஸ் இதுவரை அறுபது ஆண்டுகள் கொடுத்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று சொல்லவும் . ...

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X