பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
என்.ஜி.ஓ.,க்களுக்கு நிதி
40 சதவீதம் குறைந்தது

மும்பை: என்.ஜி.ஓ., எனப்படும், அரசு சாரா அமைப்புகள் மீது, மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், அவற்றுக்கு, வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி உதவி, 40 சதவீதம் குறைந்துள்ளதாக, ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

NGO,என்.ஜி.ஓ.,நிதி,40 சதவீதம்,குறைந்தது


அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'பெயின் அண்டு கம்பெனி' எனப்படும், சர்வதேச நிர்வாக ஆலோசனை நிறுவனம், என்.ஜி.ஓ., செயல்பாடுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு அமைந்த பின், அரசு சாரா அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி உதவி குறித்து ஆராயப்பட்டது. வெளிநாட்டு நன்கொடை சட்ட விதிகளை மீறியதாக, பல அமைப்பு கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளில், 13 ஆயிரம் அமைப்புகளுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கைகளால், வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடை, 40 சதவீதம் குறைந்துள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், அரசு சாரா அமைப்புகள், பல சமூக முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களுக்கான வெளிநாட்டு நிதி குறைந்த அதே நேரத்தில், உள்நாட்டில் நன்கொடை அதிகரித்தது.

Advertisement



கடந்த, 2014 - 15ம் நிதியாண்டில், 60 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த மொத்த நன்கொடை, 2017 - 18ம் ஆண்டில், 70 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தொழில் நிறுவனங்கள், சமூக பொறுப்புடைமை திட்டத்தின் கீழ் செலவிடும் தொகையும், 12 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthikeyan - singapore,சிங்கப்பூர்
12-மார்-201907:38:26 IST Report Abuse

karthikeyanஎவ்வளவோ கிறிஸ்தவ நாட்டில் ஏழைகள் உள்ளனர் ( உதாரணம் ஹெய்ட்டி ) ஏன் அங்கு இந்த பணத்தை வைத்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த கூடாது ? அவர்கள் நோக்கம் இந்தியாவில் மத மாற்றம் செய்ய வேண்டும் அதுதான் . மத மாற்ற தடை சட்டம் இந்தியா முழுவதும் கொண்டு வரவேண்டும் .

Rate this:
Manian - Chennai,இந்தியா
13-மார்-201912:19:29 IST Report Abuse

Manian... அடிப்படை சித்ததாந்தமே அடுத்த பொருளாதார அடிமையை எப்படி தேடுவது என்பதுதான். ...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-மார்-201923:03:14 IST Report Abuse

Pugazh Vஎப்ப பார்த்தாலும் மதம் பாகிஸ்தான் காங்கிரஸ் இவைகளை தவிர எழுத பாஜக வினருக்கு எதுவுமே இல்லை. மூன்று மாதம் முன்பு இதை பத்திரிகை யில் தான் "பாஜக விற்கு நன்கொடை 1050 கோடி" என்று செய்தி வந்தது.

Rate this:
Manian - Chennai,இந்தியா
13-மார்-201912:20:02 IST Report Abuse

Manianதம்பி, அதெயெல்லாம் எழுத நீ ஒருத்தன் போதும் என்று எண்ணுகிறார்கள் போலும். ...

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
11-மார்-201920:15:20 IST Report Abuse

siriyaarஎப்படியோ மோடி 40 மார்க் வாங்கி பாஸ் ஆயிட்டார். அடுத்தவாட்டி இன்னொறு 40 மார்க் வாங்கனும்.

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X