தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை! கோவை எம்.பி., நாகராஜ் தகவல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை! கோவை எம்.பி., நாகராஜ் தகவல்

Added : மார் 10, 2019
Share

அன்னுார்:'வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை' என, கோவை எம்.பி., நாகராஜ் தெரிவித்துள்ளார்.கோவை எம்.பி., நாகராஜ், அ.தி.மு.க., சார்பில் கோவை லோக்சபா தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டுவெற்றி பெற்றார். அ.தி.மு.க., பிளவின்போது, இவர் இ.பி.எஸ்., அணிக்கு செல்லவில்லை. தினகரன் ஆதரவாளர் என்பதால் அவருடைய அணிக்கு செல்வார் எனக் கூறப்பட்டது. ஆனால் எந்த அணிக்கும் செல்லாமல் இருந்து வருகிறார்.
நேற்று அவர் கோவில்பாளையத்தில் கூறியதாவது:லோக்சபா எம்.பி., என்கிற முறையில், என் பணியை சரியாக செய்துள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதியை, 100 சதவீதம் பயன்படுத்தி வளர்ச்சி பணிகள் செய்துள்ளேன்.
முதல்வர் ஜெயலலிதா இறந்தபோதும், மேகதாது விவகாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதும் மட்டுமே லோக்சபா கூட்டத்திற்கு செல்லவில்லை.மற்றபடி, 95 சதவீத கூட்டங்களுக்கு சென்று, பல விவாதங்களில் பங்கேற்றுள்ளேன். திண்டுக்கல் மைசூர் தேசிய நெடுஞ்சாலைக்கு லோக்சபாவில் குரல் கொடுத்துள்ளேன்.மத்திய அரசு அச்சகம் மூடப்படுவது குறித்தும் பேசியுள்ளேன். வரும் தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை. தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு எம்.பி.,நாகராஜ் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X