பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
துவங்குகிறது ஜனநாயகப் போர்!

அடுத்த இரண்டு மாதங்களில், பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின், 'மெகா' கூட்டணிக்கு இடையேயான, ஜனநாயகப் போரான, 17வது லோக்சபாவை நிறுவுவதற்கான, லோக்சபா தேர்தல், நாடு முழுவதும் நடக்க உள்ளது. இந்தப் போரின் முடிவு எப்படி இருந்தாலும், இந்திய ஜனநாயகத்தின் வலிமையை மீண்டும் நிரூபிக்கும் களமாக இருக்கும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

துவங்குகிறது,ஜனநாயகப் போர்


இந்தியாவின் பெருமை, உலகம் முழுவதும் அறிவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
* 17ம் நுாற்றாண்டில், முழுவதும் பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ள, காதல் சின்னமான, தாஜ் மஹால்.
* அமைதி மற்றும் அஹிம்சையை உலகுக்கு போதித்ததுடன், அவற்றின் மறு உருவமாக திகழ்ந்த, மஹாத்மா காந்தி
* இந்தியாவின் ஜனநாயக நடைமுறை.

மிகவும் பிரமாண்டமான, விரிவான, சிக்கல் இல்லாத, இந்திய தேர்தல் நடைமுறை, உலக நாடுகளால் வியப்புடன் பார்க்கப்படுகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நடைமுறையாக, லோக்சபா தேர்தல் பார்க்கப்படுகிறது. கடந்த, 2014ல் நடந்த தேர்தலில், 83.4 கோடி வாக்காளர்கள் ஓட்டளித்தனர். இது, ஒரு சாதாரண புள்ளி விபரம் அல்ல. நம் தேர்தல் முறை எவ்வளவு பிரமாண்டமானது என்பதை உணர்வோம்.

* ஐரோப்பாவைச் சேர்ந்த, 50 நாடுகளில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை, 49.2 கோடி. இந்த, 50 நாடுகளை விட, இரண்டு மடங்கு அதிகமான வாக்காளர்கள் பங்கேற்கும் தேர்தலாக, நம் லோக்சபா தேர்தல் அமைந்துள்ளது

* கடந்த தேர்தலில் நாடு முழுதும், 8.34 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அதில், குஜராத்தின், ஜுனாகட் மாவட்டத்தின், பனேஜ் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஒரு ஓட்டுச் சாவடியும் அடங்கும்.

இந்த ஓட்டுச் சாவடிக்கு என்ன சிறப்பு என்றால், ஆசிய சிங்கங்கள் நடமாடும், புகலிடத்தில் அமைந்துள்ளது. இதில் மற்றொரு சிறப்பம்சம் என்றால், ஒரே ஒரு வாக்காளருக்காக இந்தச் சாவடி அமைக்கப்பட்டது. இதில் இருந்து, ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்ற அடிப்படையில், நம் ஜனநாயகம் செயல்படுவதை உணரலாம். அந்த வகையில், நாட்டின் சமூக - பொருளாதார, நலத் திட்டங்களை உருவாக்கும் பார்லிமென்டின், லோக்சபாவுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

Advertisement

பல்வேறு ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகள், ஜனநாயகத்துக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் இடையே சிக்கித் தவிக்கின்றன; சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை உள்ளது. இவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, நமது ஜனநாயகத்தின் வலிமை நமக்கு நிச்சயம் புரியும். நம் நாட்டின் ஜனநாயக முறையை, பல அண்டை நாடுகளும், தங்கள் நாட்டில் பரிசோதித்து பார்த்துள்ளன. ஆனால், சில நாடுகளில், குறுகிய காலங்களே அங்கு வெற்றி பெற்றது. ஆனால், பல நாடுகளில் ஜனநாயகத்துக்கான விதையை, நம் நாடு விதைத்துள்ளது.

வங்கதேசம், பாகிஸ்தான், பூட்டான், இலங்கை என, பல அண்டை நாடுகளில், ஜனநாயகத்துக்கான முயற்சிக்கு, இந்தியாவே காரணமாக அமைந்துள்ளது.நாடு சுதந்திரம் அடைந்த, 1947ல் இருந்து, இந்தியா, இதுவரை, 16 பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட, 70 ஆண்டுகளில், மிகவும் அமைதியான, ஜனநாயகத்தின் மாண்புக்கு பங்கம் ஏற்படுத்தாமல், இந்த தேர்தல் நடைமுறைகளை, தேர்தல் கமிஷன் நடத்தி வந்துள்ளது, மிகப் பெரிய சாதனையாகும்.

ஒவ்வொரு தேர்தலிலும் முடிவுகள் வேறுபட்டாலும், மாறுபட்டாலும், எப்போதும், ஜனநாயகத்தின் வலிமை பறைசாற்றப்பட்டு வந்துள்ளது. நம் வாக்காளர்களின் எண்ணிக்கை வளர்ந்துள்ளது; தேர்தல் நடைமுறை நவீனமாகி உள்ளது; வாக்காளர்கள் விழிப்புடன், எச்சரிக்கையுடன், தங்களின் தேர்வை, ஓட்டுக்களாக அளிக்கின்றனர். இவ்வாறு தேர்தல் நடைமுறையில் மாற்றங்கள் இருந்தாலும், ஜனநாயகம் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது வாழ்க்கையின் நடைமுறை, வாழ்க்கையை மாற்றும் நடைமுறை என்பதை, அனைவரும் உணர்ந்துள்ளதே, இதன் வெற்றியாகும்!
- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
11-மார்-201921:45:48 IST Report Abuse

s t rajanநண்பர் ஒருவர் திரட்டிய உண்மை தகவல்கள். (நன்றி வாட்ஸாப்) இதை எழுத கிட்ட தட்ட ஒரு நாள் ஆகிவிட்டது , கண்டிப்பாக நிறைய விடுபட்டு இருக்கும் , முடிந்தவரை திரட்டி இருக்கிறேன் இதே போல் கடந்த 60 வருடம் இந்த தேசத்தை ஆண்டவர்கள் தங்கள் பட்டியலைத் தரட்டும். இந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்து பார்த்து விடுவோம்.. ❤❤ 📍1. தமிழக மீனவர் சுடப்படவில்லை, 📍2. இந்தியாவில் பொது மக்கள் மீது தீவிரவாத தாக்குதல் இல்லை, 📍3. ஆளில்லாத ரயில்வே கேட் இல்லை, 📍4. மின்சாரம் இல்லாத கிராமம் இல்லை, 📍5. 16 மணி நேர மின் தடை இல்லவே இல்லை, 📍6. 5 வருடமாக ஊழல் இல்லை, 📍7. விலைவாசி உயர்வு இல்லை, 📍8. 17 விதமான வரிகள் இல்லை, 📍9. போலி கீஸ் சிலிண்டர் இல்லை, 📍10. போலி ஆசிரியர்கள் இல்லை, போலி ஸ்காலர்ஸிப் இல்லை இன்னும் பல இல்லைகள் 📍11. நக்சல் தொந்தரவு குறைந்தது, 📍12. தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லை தாண்டுவதற்கு உயிருடன் இல்லை, 📍13. ரயில் விபத்துக்கள் குறைவு, 📍14.சாலைகள் அமைப்பது வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு, 📍15. நீர்வழி சாலைகள் அமைப்பு, 📍16.கங்கை சுத்தமானது, 📍17. கும்ப மேளா அருமையாக நெரிசல் இல்லாமல் நடக்கிறது, 📍18. பாக்கிஸ்தான் பணத்துக்கு பல நாடுகளிடம் கையேந்துகிறது, 📍19. வீடு கட்ட கடன் சுலபமாக குறைந்த வட்டியில் கிடைக்கிறது, 📍20 மருந்துகள் விலை மிக குறைவு, 📍21. இதய வால்வு, செயற்கை மூட்டு போன்றவை விலை மிக குறைவு, 📍22. மருத்துவ காப்பீடு 5 லட்சத்திற்கு, 📍23. 5+4.5 லட்சம் வரை வருமான வரி இல்லை, 📍24. பயிர் காப்பீடு, பயிர்களுக்கான குறைந்த பட்ச விலை 1.5 மடங்காக அதிகரிப்பு, 📍25. இதுவரை இல்லாத அளவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த வட கிழக்கு மாநிலங்களுக்கு விமான மற்றும் நெடுச்சாலை இணைப்புகள், விமான நிலையங்கள் 📍26. தமிழ்நாட்டுக்கு AIIMS, மற்றும் 📍27. நாடு முழுவதும்,. பல புதிய IIT மற்றும் IIM கள், 📍28. கோதாவரி- காவிரி இணைப்பு, 📍29. காவிரி ஆணையம் அமைப்பு, 📍30. பெரியாறு அணை நீர் இருப்பு உயரம் அதிகரிப்பு, 📍31. 2 ஆண்டுகளில் APJ கலாமுக்கு நினைவிடம் அமைப்பு, 📍32. முகம் தெரியாத பலருக்கு பத்ம விருதுகள், 📍33. கந்து வட்டியில் இருந்து விடுபட வங்கியில் முத்ரா கடன் திட்டங்கள், 📍34. மோடியின் தொகுதியான காசியின் சுத்தம், 📍35. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் உயர்வை கட்டுக்குள் வைத்து இருப்பது, 📍36. இந்திய ரூபாயில் வெளிநாடுகளுடன் கச்சா எண்ணெய் வணிகம், 📍37. வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு, 📍38. உலகத்தின் 5 வது பெரிய பொருளாதரமாக வளர்ச்சி, 📍39. ஊழல் நாடுகள் பட்டியலில் முன்னேற்றம், 📍40. தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் முன்னேற்றம், 📍41. GDP கிட்ட தட்ட 8 சதவீதம், 📍42. OROP அமல்படுத்தியது, 📍43. பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்து இருப்பது, 📍44. அனைத்து ஊழல் வாதிகளையும் ஒன்று சேர்த்து இருப்பது, 📍45. ஆயுத பேரத்தில் இடைத்தரகர்களை ஒழித்தது, 📍46. உள்நாட்டில் ஆயுத, ராணுவ தளவாட உற்பத்தியை ஊக்குவிப்பது, 📍47. இடைத்தரகர்களை நாடு கடத்தி கொண்டு வருவது, 📍48. ஸ்விஸ் வங்கியில் விபரங்களை பெற்றது, 📍49. தினமும் 18 முதல் 20 மணி நேரம் உழைப்பது, 📍50. தமிழ்நாட்டுக்கு Defence corridor அமைத்து கொடுப்பது, 📍51. 8 வழி சாலை, 📍52. அனைத்து நாடுகளிடமும் நட்பு பாராட்டுவது, 📍53. இலங்கை தமிழ் பகுதிக்கு சென்றது, 📍54. அங்கே ஆட்சி மாற்றம் ஏற்படச் செய்தது, 📍55. இலங்கை தமிழர்க்கு வீடு கட்டி கொடுத்தது, 📍56. கள்ள நோட்டை ஒழித்தது, 📍57. NEET மூலம் ஏழையும் மருத்துவம் படிக்க வழி செய்தது, 📍58. GST மூலம் விலைவாசியை கட்டுக்குள் வைத்தது 📍59.ந.2 வியாபாரத்தை படி படியாக ஒழித்து வருவது, 📍60. பணமதிப்பு இழப்பு கொண்டு வந்தது, 📍61. ஏழைகளுக்கு 10 %இட ஒதுக்கீடு 📍62. ராணுவத்துக்கு நவீன தளவாடங்கள், 📍63. குண்டு துளைக்காத ஆடைகள், 📍64. புதிய ஹெலிகாப்டர்கள், 📍65. புதிய விமானங்கள், 📍66. ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், 📍67. குண்டு துளைக்காத தலை கவசங்கள், 📍68. ரயில் 18, 180 km வேகத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில், 📍69. ஜப்பான் உடன் இணைந்து புல்லட் ரயில் திட்டம், 📍70. அனைவருக்கும் இன்டர்நெட் இணைப்பு, கிராமங்கள் வரை, 📍71. பல பாலங்கள் மற்றும் குகை பாதைகள் மூலம் நேர, பண விரையம் தவிர்ப்பு, 📍72. மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் நீக்கம் 📍73. இதனால் லஞ்சம் தவிர்ப்பு, 📍74. நாட்கணக்கில் தாமதம் தவிர்ப்பு, 📍75. ஓட்டுனர்களுக்கு வருடத்திற்கு 100 நாள் சேமிப்பு, 📍76. தேய்மானம் குறைவு,எரிபொருள் சேமிப்பு, 📍77. 28 % GST இல் 10 க்கும் குறைவான பொருட்கள், 📍78. அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் 12 % உள், 📍79. 5 கோடிக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகள், 📍80. அனைத்து அரசாங்க உதவியும் நேரடியாக வங்கியில் செலுத்துவதால் பல ஆயிரம் கோடி சேமிப்பு, 📍81. பங்கு சந்தை உயர்வு, 📍82. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கிட்ட தட்ட 100 % கழிப்பறை வசதி 📍83. மக்களின் சுகாதாரம் மேம்பட்டது,நோய்கள் குறைந்தது, 📍84. காஷ்மீரில் பல மாவட்டங்கள் தீவிரவாதம் இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டது 📍85. எதிர் கட்சியின் முலாயம் சிங் மீண்டும் மோடியின் ஆட்சி வேண்டும் என பாராட்டினார், பல பன்னாட்டு அமைப்புகளும் ,உலக தலைவர்களும் ,பல உள்நாட்டு நற்பெயர் கொண்ட தொழில் அமைப்புகளின் தலைவர்களும் மீண்டும் மோடியின் ஆட்சி வர வேண்டும் என்றுதான் சொல்கின்றனர் 📍86. Insolvency சட்டத்தில் மாற்றம் மூலம் பல பெரிய கடன்கள் வசூல், 📍87. இலங்கையில் தூக்கில் இருந்து தமிழக மீனவர்கள் மீட்பு 📍88. வெளியுறவு துறை மூலம் பல நன்மைகள்,அப்படி ஒரு துறையில் இப்படி எல்லாம் செயல்படமுடியும் என்று காட்டினார்கள் 📍89. பல வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பல வகையில் எதிர்பாராத மீட்பு பணிகள்,பாஸ்போர்ட் சேவைகள்,விசா சேவைகள்,இன்னல்களில் இருந்த்து மீட்பு 📍90. பாஸ்போர்ட் வாங்கும் வழிகள் எளித்தாக்கப்பட்டது 📍91. விண்வெளி இஸ்ரோ மூலம் பல செயற்கை கோள்கள் ஏவப்பட்டது 📍92. இந்தியாவின் எல்லைகள் எப்போதும் கண்காணிக்கப்பட்டது 📍93. இந்தியா எல்லையில் ஊடுருவலை தடுக்க நவீன லேசர் கண்காணிப்பு வேலிகள் அமைப்பு 📍94. பங்களாதேஷ் உடனான பல ஆண்டு எல்லை பிரச்சனைக்கு தீர்வு 📍95. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் மற்ற தென் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பாதிப்பு என்று கொடுக்க மறுத்து கூட்டணியை இழந்தது 📍96. சீனாவை விட அந்நிய முதலீட்டில் முன்னணி வகிப்பது 📍97. தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் ஸ்மார்ட் நகரங்கள் 📍98. தமிழ்நாட்டுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு 📍99. 18 % இருந்த உணவக வரியை 5% ஆக்கியது 📍100. காங்கிரஸ் வாங்கிய கடனை வட்டியுடன் 200000 கோடி திருப்பி செலுத்தியது 📍101. சிறு குறு விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் உதவித்தொகை 📍102 .கணக்கு காண்பிக்காத 20,000 NGO உரிமங்கள் ரத்து 📍103. கள்ளப்ணம், வரி ஏய்ப்பின் ஊற்றுக்கண்ணான லட்சக்கணக்கான ஷெல் கம்பெனிகள் அழிப்பு 📍104. 59 நிமிடத்தில் 10000000 வரை கடன் திட்டம் 📍105. கட்டற்று இருந்த மத மாற்றம் இப்போது கட்டுக்குள் இருக்கிறது 📍106. VVIP கார்களில் பொருத்தப்பட்ட சிவப்பு விளக்குகள் அகற்றம் 📍107. கிட்ட தட்ட அனைவருக்கும் வங்கி கணக்கு (குறைந்த பட்ச தொகை தேவை இல்லாதது ) 📍108. தனி நபர் வருமானம் 1 .17 லட்சமாக அதிகரிப்பு 📍109. பினாமி சொத்து சட்டம் 📍110. உள்நாட்டு பாதுகாப்பில் பொது மக்கள் உயிரிழப்பு இல்லை என்ற சாதனை 📍111. மத கலவரங்கள் கட்டுக்குள் 📍112. முத்தலாக் தடை சட்டம் , மற்ற கட்சிகள் ஒத்துழைப்பு இல்லை 📍113. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரில் ரயில் பாதை அமைக்க அனுமதி 📍114. LED விளக்குகளின் மூலம் மின் நுகர்வு மற்றும்,விலை மிக குறைவு 📍115. உபயோகப்படுத்தாத பல விமான நிலையங்கள் மீண்டும் போக்குவரத்தில் இணைப்பு 📍116. UDAN திட்டத்தில் விமான கட்டணம் குறைப்பு 📍117. அமைச்சரவை சகாக்கள் யார் மீதும் குற்ற சாட்டு இல்லை 📍118. பெண்களுக்கு அமைச்சரைவயில் முக்கிய பதவிகள் , 📍119. சூரிய மின் உற்பத்தியில் சாதனை 📍120. நிலக்கரி இறக்குமதி குறைக்கப்பட்டு ,உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு 📍121. மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி கையிருப்பு எப்பபோதும் நல்ல நிலையில் 📍122. திருக்குறள் நாடு முழுவதும் பாடத்திட்டத்தில் இணைப்பு 📍123. மீன் வளத்துக்கு தனி அமைச்சரவை, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு கப்பல் மாண்யம் 📍124. ரயில் பயண கட்டணம் ஏற்றப்படவில்லை 📍125. தமிழ் நாட்டில் கோவை -பெங்களூரு இரண்டு அடுக்கு ரயில் ,மதுரை சென்னை பகல் நேர ரயில் போன்ற பல ரயில்கள் 📍126. 17 வருடமாக விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் 📍127. வெளி நாட்டு பயணத்தின் போது ஜால்ரா போடும் பத்திரிக்கையாளர்களை அழைத்து செல்லாத ஒரே தலைவர் 📍128. வெளிநாட்டு பயணங்களில் விமானத்திலேயே உறங்கி நேரத்தையும் செலவையும் குறைத்தது 📍129. விவசாயி விற்பனையில் படிப்படியாக இடைத்தரகர் ஒழிப்பு E - NAM திட்டம் 📍130. திருப்பூருக்கு பல ஆண்டாக கேட்ட ESI மருத்துவமனை 📍131. பல அரசாங்க மருத்துவ மனைகள் தரம் உயர்வு 📍132. சென்னை விமான நிலைய விரிவாக்கம் 📍133. கோவை விமான நிலைய விரிவாக்கம் ,நில உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருவதாக அறிகிறேன் 📍134. கோவைக்கு வெளி சுற்று வட்ட சாலை 📍135.முத்ரா திட்டத்தில் கடந்த 7 தேதி வரை 15,73,78,344 கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன 📍136. மின்னணு பண பரிவர்த்தனை ஊக்குவிப்பு ,BHIM செயலி அறிமுகம் 📍137. மாஸ்டர், விசா அட்டைகளுக்கு இணையாக RUPAY அட்டை ஊக்குவிப்பு 📍138. மிக முக்கியமாக பாக்கிஸ்தான் மற்றும் பர்மா வில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கு எதிராக துல்லிய தாக்குதல் (surgical strike ) 📍139. சிறுபான்மையினர் பாதுகாப்பு 📍140. GST யில் 40 லட்சம் வரை விற்று முதல் உள்ளவர்க்கு விலக்கு 📍141. முறை சாரா(un organised sector ) தொழில் செய்யும் தொழிலாளர்க்கும் ஓய்வூதிய திட்டம் 📍142. பெண் தொழில் முனைவோர் அதிகளவில் ஊக்குவிப்பு 📍143 தட்டுப்பாடு இல்லாத உர விநியோகம் 📍144. UREA வில் வேப்பை எண்ணெய் கலந்து தவறான உபயோகம் தவிர்ப்பு 📍145. இதுவரை அமைக்கப்படாத NATIONAL WAR MEMORIAL டெல்லியில் அமைப்பு 📍146. குடும்பத்தில் ஒருவர் கூட அரசியல் பதவியிலோ ,அரசாங்க பதவியிலோ இல்லை , அரசாங்க வேலையில் கூட மிகவும் குறைந்த அந்தஸ்தில் இருப்பதாக அறிகிறேன் 📍147. இந்தியா ரயில்வே ரயில் பெட்டி தொழிற்சாலை 17 வருடமாக தயாரித்த பெட்டிகளின் அளவை கடந்த 2 ஆண்டுகளில் கடந்து உள்ளது 📍148. Tax free Gratuity limit increase to 20 Lakhs from 10 Lakhs 📍149. பெண்களுக்கு 26 வாரங்கள் பேறு கால விடுப்பு 📍150. ரயில் நிலையங்கள் விமான நிலையங்களுக்கு இணையாக வடிவமைப்பு 📍151. உலக அளவில் 2 வது மிக பெரிய எக்கு உற்பத்தியாளர் என்ற அந்தஸ்து 📍152. ஈரானில் சப்பார் துறைமுகம் 📍153. சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றம் 📍154. உலகத்தில் பெரிய சிலையாக சர்தர் வல்லபாய் படேல் சிலை அமைப்பு 📍155. மனித உரிமை கவுன்சில் தேர்தலில் 193 ஓட்டுக்கு 188 வாங்கி வெற்றி 📍156. அண்ணா பல்கலைக்கழகம் வேந்தர் போன்றவைகளில் சூரப்பா போன்ற கல்வியாளர்கள் நியமனம் 📍157. L & T மூலம் HOWITZER பீரங்கிகள் உற்பத்தி செய்து ராணுவத்தில் இணைப்பு 📍158. எந்த மிரட்டலுக்கும் பயப்படாத அரசாங்கம் ,உதாரணம் ௧.தங்க நகை உற்பத்தியாளர் கடை அடைப்பு 2 .லாரிகள் வேலை நிறுத்தம் 3 அய்யாக்கண்ணுவின் உள்நோக்கம் கொண்ட ஆடை அவிழ்த்து போராட்டம் 📍159. ஹாஹாஹா மறந்துட்டேன் தமிழ்நாட்டுக்கு ஜல்லிக்கட்டு 📍160. தீவிரவாதம் இல்லா நாடு மற்றும் பல நாட்டவர்க்கு visa on arrival என்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வு ,பல வேலை வாய்ப்புகள் பெருக்கம் 📍161. காடுகளின் பரப்பு 10 ஆயிரம் சதுர கிலோமீட்டர் க்கு மேல் அதிகரிப்பு 📍162. பரோடாவில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி 📍163. சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்று பாகுபாடு இல்லாத திட்டங்கள் மற்றும் வளர்ச்சி 📍164. சர்வதேச மதிப்பீட்டில் நமது பொருளாதாரம் Fragile 5 என்ற நிலையில் இருந்து BAA3 என்ற நல்ல தரம் உயர்த்தப்பட்டது. 📍165. RERA மூலம் வீடு வாங்குபவர்களின் சிரமங்களைக் குறைத்தது 📍166. ஆழ்கடல் மீன்பிடிக்க ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பயிற்சி மற்றும் படகுகள் வாங்க 90 % மானியம் 📍167. புதிய வீடுகளுக்கு GST குறைப்பு 📍168. ஒரு நாடு ஒரு அட்டை, One Nation One Card திட்டம் அறிமுகம். 📍169. விளையாட்டை ஊக்குவிக்க புதிய செயலி அறிமுகம். 📍170. புல்வாமா தாக்குதலுக்கு உடனே பதிலடி, பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 📍171. சிறை பிடிக்கப்பட்ட விமானி ஒரே நாளில் விடுதலை என்ற சரித்திரம். 📍172. சாகர் மாலா திட்டத்தின் கீழ் பல புதிய துறைமுகங்கள். 📍173. ராமேஸ்வரம் - மண்டபம் இடையே புதிய பாம்பன் பாலம். 📍174. கன்யாகுமரியில் இதுவரை இல்லாத அளவு 40,000 கோடிக்கு வளர்ச்சித் திட்டங்கள் 📍175. பலரும் பரப்பும் பொய் போல் இல்லாமல் 6 மான்ய சிலிண்டர் என்பதை 12 ஆக உயர்த்தி விலை ஏற்றம் இல்லாமல், பதிவு செய்த உடன் கிடைக்க செய்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 1200 + விற்கப்பட்டது என்பதை இங்கே தவிர்க்க முடியாமல் பதிவு செய்கிறேன். 📍176. சீனா எல்லையில் பல சாலைகள் மற்றும் பாலங்கள். 📍177. பலமான அயல்நாட்டு உறவு ,அனைத்து நாடுகளும் நமது நிலைப்பாட்டுக்கு ஆதரவு 📍178. மலிவு விலை மத்திய அரசு மருந்து கடைகள் 📍179. பாக்கிஸ்தான் உடனான நதி நீர் பங்கீட்டில் நமது பங்கை சரியாக உபயோகப்படுத்த நடவடிகக்கை. 📍180. விபத்து காப்பீடு வருடம் 2 லட்சம் பலனுக்குப் பிரீமியம் தொகை வெறும் 12 ரூபாய் 📍181. உயிர் காப்பீடு 2 லட்ச ரூபாய்க்குப் பிரீமியம் தொகை 330 ரூபாய் 📍182. ஸ்டாண்ட் அப் இந்தியா மூலம் SC/ST, பெண்களுக்கு 10 லக்ஷம் முதல் 2 கோடி வரை தொழில் தொடங்க கடன். 📍183. ஈரான் நாட்டிலிருந்து எரிவாயு பைப் மூலமாக கொண்டு வர ஒப்பந்தம். செய்ததை மட்டுமே எழுதி இருக்கிறேன்.. விடுப்பட்டதை சொன்னால் சேர்க்கிறேன்.. நீ ஏன் செய்யவில்லை என்று கேட்கவில்லை, செய்ததை சொல்லியிருக்கிறேன். நெகடிவ் அரசியல் செய்ய விரும்பவில்லை நல்லதை சொல்லுவோம்.. பாரத் மாதா கிஜே.. வந்தே மாதரம்..நண்பர் ஒருவர் திரட்டிய உண்மை தகவல்கள். இதை எழுத கிட்ட தட்ட ஒரு நாள் ஆகிவிட்டது , கண்டிப்பாக நிறைய விடுபட்டு இருக்கும் , முடிந்தவரை திரட்டி இருக்கிறேன் இதே போல் கடந்த 60 வருடம் இந்த தேசத்தை ஆண்டவர்கள் தங்கள் பட்டியலைத் தரட்டும். இந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்து பார்த்து விடுவோம்..

Rate this:
Manian - Chennai,இந்தியா
13-மார்-201912:03:50 IST Report Abuse

Manian, மோடி லஞ்சமே வான்காவிடாலும், அவரை நாளாவர் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும். மோடியின் அரசு பொதுவாக நல்லதையே செய்கிறது என்பாதை ஒப்புக்கொண்டால், இதுவரை லஞ்ச வியாதிகள் காங்கிரஸ், தீருடர்கள், கம்மிகள் நம்மை ஆண்ட பொது நாம் முடடால்களாவே இருந்தோம் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? நமக்குத்தான் சுதந்திரம் பற்றி தெரியாதே உரிமை என்று மட்டுமே சொல்லுவோம், பொறுப்பு என்பதை வெருப்போம்.மோடியோ அவரது மந்திரிகளோ லஞ்சம் வாங்காதது, அவர்களது திறமை இண்மையையே காட்டுகிறது. - ...

Rate this:
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
11-மார்-201917:04:35 IST Report Abuse

Mohan Sundarrajaraoஇந்த தேர்தலே வேண்டாம். யாராவது நல்ல மனத்துடைய பட்டாளத்துக்காரன் வந்து ஆட்சி செய்யவும்.

Rate this:
P.Rengaraj - Madurai,இந்தியா
11-மார்-201915:52:17 IST Report Abuse

P.Rengarajஇந்த நாட்டில் நேரு மறைவுக்குப்பின் நிகழ்ந்தவையே , அதுவும் இந்திராவின் ஆட்சிக்காலத்திலும் அவர்களுக்கு பிறகு நடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் நடந்தவையே பிரதமர் மோடியால் இன்றும் அரசியல் ரீதியில் விவாதத்துக்கு உள்ளாகிறது என்று சொல்லலாம். காங்கிரஸ் எப்போதும் நேரு காலத்தின் பழங்கதையே பேசி அரசியல் செய்கிறது . நாட்டுக்கு, இந்திரா காந்தி முதல் அவர்கள் குடும்பத்தை உயிர் தியாகம் செய்ததையே கடைசி வரை சொல்லி அரசியல் செய்ய நினைக்கிறது. இன்று ராகுல் அறிவிக்கும் தேர்தல் வாக்குறுதி ஒவ்வொன்றும் தொலைநோக்கு பார்வை உடையதாக தெரியவில்லை.

Rate this:
Manian - Chennai,இந்தியா
13-மார்-201912:07:46 IST Report Abuse

Manianபெருங்காய டப்பா இன்று ராகுல் அறிவிக்கும் தேர்தல் வாக்குறுதி ஒவ்வொன்றும் தொலைநோக்கு பார்வை தொலைந்தாகவே தெரிகிறது முழு கண் மாறாம தேவை? அதற்கு எங்கே போவது அவன் பொறந்த வேளை அப்படி- அரியலூர் அப்பாவு சோதிடர், எல்லாவித வெற்றி தாயத்துக்களும் விற்பவர். ...

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X