அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்தலில் கமல் போட்டி
ரஜினி போட்டியில்லை

சென்னை: ''கூட்டணி பேச்சு முடிந்து விட்டது; மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்; தொகுதி பின்னர் அறிவிக்கப்படும்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர், நடிகர் கமல் கூறினார்.

தேர்தல்,கமல்,போட்டி,ரஜினி,போட்டியில்லை


மக்கள் நீதி மையம் கட்சி, வழக்கறிஞர்கள் அணியின் ஆலோசனை கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. ஒரு தொகுதிக்கு, ஆறு வழக்கறிஞர்களை நியமித்து, கட்சியினருக்கு உதவுவது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு பின், நடிகர் கமல் கூறியதாவது: அரசியலுக்கு வரும் நடிகர்கள் காணாமல் போவார்கள் என, சிலர் கூறுகின்றனர். எம்.ஜி.ஆர்., சாதிக்கவில்லையா; அனைத்து நடிகர்களையும், பொதுப்படையாக கூற முடியாது. எங்கள் கூட்டணி பேச்சு முடிந்து விட்டது; நாங்கள் மக்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம். லோக்சபா தேர்தலில் போட்டியிட, 1,137 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களிடம், 15ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்படும்.

பூரண மதுவிலக்கு என்பது, உடனே முடியாது; படிப்படியாகவே செயல்படுத்த முடியும். இதற்கு, மக்களும் ஒத்துழைக்க வேண்டும். ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட, அவர் கேட்காமல் கொடுப்பதும், பெறுவதும் பெரிய விஷயம். நான், அவரை நம்புகிறேன். லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடுவேன்; எந்த தொகுதியில் போட்டி என, விரைவில் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

'பேட்டரி டார்ச் லைட்' சின்னம்:நடிகர் கமலின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு, 'பேட்டரி டார்ச் லைட்' சின்னத்தை, தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது.

தேர்தல் சின்னம் குறித்து, 'டுவிட்டர்' பதிவில், கமல் கூறியுள்ளதாவது: மக்கள் நீதி மையம் கட்சிக்கு, பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கிய, தேர்தல் கமிஷனுக்கு நன்றி. எங்களுக்கு, மிக பொருத்தமான சின்னத்தை ஒதுக்கியுள்ளனர். தமிழகத்தின் புதிய சகாப்தத்திற்கும், இந்திய அரசியலுக்கும், பேட்டரி டார்ச் லைட் சின்னம் புதிய ஒளி பாய்ச்சும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இடைத்தேர்தலில் போட்டியில்லை: ரஜினி''லோக்சபா தேர்தலுடன், சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், போட்டியிட மாட்டோம்,'' என, நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

Advertisement

சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: லோக்சபா தேர்தலுடன், 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால், நாங்கள் போட்டியிட மாட்டோம். 'தண்ணீர் பிரச்னையை யார் தீர்க்கின்றனரோ; அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என, நீங்கள் கூறியது, மத்திய அரசை சார்ந்து கூறினீர்களா; மாநில அரசை சார்ந்து கூறினீர்களா' என, கேட்கிறீர்கள். நான், மத்திய - மாநில அரசுகளை சார்ந்து தான் கூறினேன். இவ்வாறு, ரஜினிகாந்த் கூறினார்.

அரசியலுக்கு வருவார்:''ரஜினி, கண்டிப்பாக அரசியல் பிரவேசம் செய்வார்,'' என, அவரது அண்ணன் சத்தியநாராயணன் கூறினார்.

கிருஷ்ணகிரியில் இருந்து, ஊத்தங்கரைக்கு, மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், லாரிகளில் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை, நடிகர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணன் துவக்கி வைத்து, அளித்த பேட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில் உள்ள, 34 பஞ்.,களுக்கும் நாள்தோறும், 1.50 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க, ரஜினி மக்கள் மன்றம் உறுதி எடுத்துள்ளது. ஒரு மாதத்துக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

லோக்சபா தேர்தலோடு, சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடந்தாலும், ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடாது. லோக்சபா தேர்தல் முடிந்த பின், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, நிர்வாகிகளை ரஜினி சந்திக்க உள்ளார். ரஜினி, கண்டிப்பாக அரசியலில் குதிக்கிறார். இது குறித்த அறிவிப்பை, அவர் வெளியிடுவார். அவர், எந்த முடிவை எடுத்தாலும் நல்லதாகவே இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.P SARATHI - chennai,இந்தியா
12-மார்-201912:57:25 IST Report Abuse

K.P  SARATHIஅளவுக்கு கடந்த புகழும் செலவும் ஒருவருக்கு கிடைப்பதால் அது மற்றவர்களுக்கு பயன் அளிப்பதாக இருக்கவேண்டும் ஆனால் ரஜினியோ இன்னுமும் தன் குடும்ப நலன் பற்றிய கவலை மட்டும்தான் ஒரு கிராமத்தை தத்தெடுக்க சொல்லுங்களேன்

Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
11-மார்-201917:12:15 IST Report Abuse

Mirthika Sathiamoorthiரஜினி எப்பொழுதும் தமிழக அரசியலை மற்றும் இந்திய அரசியலை உற்றுநோக்கும் ஒருவர்...நீண்டகாலமாக அரசியலில் இருந்து தேர்தல் களத்தை சந்தித்த MGR , அரசியலில் தன்னை இணைத்த போது இருந்த அவரது வாக்கு வங்கி தனி கட்சியின் போது பாதியாக குறைந்ததும், தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சி தொடங்கிய NTR வாக்குவங்கியும் இரண்டும் அரசியலில் புதியதாக வருவோர்க்கு ஒரு பாடம்...அதை கருத்தில் கொண்டே ரஜினியின் அரசியல் கணக்கு இருக்கும் ...ரஜினியின் அரசியல் வருகை பலருக்கு அரசியலில் ஆதாயமாக பார்க்கப்படுகிறார் ( கூட்டணி வாய்ப்பு )...அதனால் தான் ரஜினியின் மீதான கடும் விமர்சனத்தை குறைத்துக்கொண்டனர்..( அன்பு மணி ராமதாஸ் ) ரஜினியை முழமையாக எதிர்ப்பது சீமான் மட்டுமே ஏனென்றால் தமிழ் தேசிய அரசியல் நடத்தும் சீமானுக்கு அவரை எதிர்தாக்கவேண்டிய கட்டாயம்....இந்த நாடாளுமன்ற தேர்தல் மோடிக்கு அலை மோடி எதிர்ப்பு அலை...இதில் தனக்கு வேலையில்லை என நினைக்கிறார் அதுதான் நாடாளுமன்ற புறக்கணிப்பு...அதேசமயம், சட்டமன்ற தேர்தலில் தன்னை சுற்றி தேர்தல் களம் இருக்கவேண்டும் என நினைக்கிறார்..இன்றய அரசியல் தலைவர்களிடம் தலித் எதிர்ப்பு மனப்பான்மை தீவிரமாக இருக்கிறது குறிப்பாக இரண்டாம் கட்ட தலைவர்கள்...திராவிடம் பேசி இங்கு பல சமூகங்களை அரசியலில் ஆதிக்கம் செய்யவிடவில்லை...அதனால் மகாராஷ்டிரா அசாம் போன்ற இடங்களில் பிஜேபி செய்ததுபோல் தமிழகத்தில் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சமூகங்களையும், தலித்துகளை அரவணைத்து அணைத்து சமூகங்களுக்கும் பொதுவான ஒரு கட்சியாக சமூக நீதி பேசும் கட்சியாக ரஜினியால் சாதிக்க முடியும்...பெரியார் காலத்தில் சமூக நீதி பேசிய தமிழகம் இன்று ஜாதி மதம் இனம் பேசும் மாநிலமாக மாறிக்கொண்டிருக்கிறது..சமூகநீதிதான் இன்றய வெற்றிடமாக இருக்கிறது. காசுக்கு ஓட்டை பற்றி பேசும் அரசியல் காட்சிகள் ( கமல் உள்பட )...ஜாதிக்கு ஓட்டுபோடுவதை ஒருவரும் கண்டும்காணாமல் இருப்பதே தமிழகத்தில் ஜாதியின் அதிகம் புரியும்...எல்ல அரசியல் கட்சிகளும் ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. அதனால் தான் சமூக நீதி இங்கு வெற்றிடம் என்கிறேன்....தமிழக் தேர்தலை தீர்மானிக்கும் வன்னியர், கொங்குவேளாளர், முகுளத்தூர், நாடார் சமூகங்கள்...இந்த சமூகநீதி வெற்றிடத்தை ரஜினி கையிலெடுத்து எல்லோருக்குமான சக்தியாக சாதிப்பார் என நினைக்கிறன்...கமலை பொறுத்தவரை கடந்த ஒருவருடத்திற்கு முன்பு வரை அரசியலில் நான் வரமாட்டேன் சொன்னவர் யார்மேது கொண்ட கோபமோ வெறுப்போ அரசியலுக்கு வந்து எல்லோரும் சொல்வதைப்போல ஊழல் அற்ற ஆட்சி அப்புடிங்கறார். கமலுக்கு கோபமூட்டும் எதிர்க்கும் நபர்கள் அரிசிலுக்கு முன்பே அதிகம்..ஆனால் ரஜினி எதிரிகளே இல்லாமல் எல்லோரையும் அனைத்துச்செல்ல நினைக்கிறார். தேர்தல் களத்தில் யாரையும் சாடாமல் நலத்திட்டங்கள் மூலமே அவர் மக்களை சநதிப்பார்..இப்போது வைக்கப்படும் கேள்விகளுக்கு அவரின் அப்போதைய பதில் அவரின் அரசியல் வெற்றியை உறுதி செய்யும்.. ..ரஜினிக்கு எதிர்பார்ப்பே இல்லாமல் செலவு செய்ய தயாராயிருக்கும் நபர்கள் கமலுக்கு கிடையாது...ரஜினி தனது முடிவுகளுக்கு பலரை ஆலோசித்து முடிவு சொல்லும் அரசியல் ஆலோசகர் பலர் உள்ளனர்...கமல் தனது முடிவுகளை தானே எடுக்கும் சூழ்நிலை...அது ரஜினி களம் வரும்போது கமலின் முடிவுகள்தான் கமலை ரஜினிக்கு எதிரே நிப்பாட்டும்..கமல் ரஜினியை போல் crowd-puller கிடையாது என்பதே உண்மை..இதை நான் சொல்லவில்லை..கமலின் அண்ணன் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது..

Rate this:
அறவோன் - Chennai,இந்தியா
11-மார்-201911:39:10 IST Report Abuse

அறவோன்தேர்தலில் போட்டியிட முதுகெலும்பு வேண்டும்.

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X