அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நாட்டின் பாதுகாப்பில் அக்கறை இல்லை
காங்., மீது ராணுவ அமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை: ''நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில், காங்கிரஸ் தளர்வு காட்டியதால், 10 ஆண்டுகளில், நவீன ஆயுதங்கள் அதிகம் வாங்கப்படவில்லை,'' என, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.

பாதுகாப்பில்,அக்கறை இல்லை,காங்.,bjp, ராணுவ அமைச்சர்,நிர்மலா சீதாராமன்,குற்றச்சாட்டு


தமிழக, பா.ஜ., சார்பில், சென்னையில் நேற்று நடந்த, 'தமிழ்நாடு நமோ வாரியர்ஸ்' என்ற, சமூக ஊடக பிரிவினருக்கான கூட்டத்தில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: சமூக ஊடகம் என்பது, சக்தி வாய்ந்த சாதனம். இதன் வழியாக, சிறப்பாக பிரசாரம் செய்ய முடியும். இதை, நாம் நல்ல விதமாக பயன்படுத்த வேண்டும். மோடி அரசு, ஐந்து ஆண்டுகளில், மக்களுக்கு செய்த நன்மைகள் அனைத்தையும், துறை வாரியாக மக்களுக்கு பட்டியலிட வேண்டும். இதற்காக, நாம் ஊதியம் கொடுத்து ஆள் வைக்கவில்லை.

ஆனால், எதிர்க்கட்சிகள், சமூக ஊடகங்களில் பொய் பிரசாரம் செய்ய, மாதம் தோறும் ஊதியம் கொடுத்து, ஆட்களை நியமித்துள்ளதாக, தகவல்கள் வருகின்றன. காங்., ஆட்சியில் ஊழலை தவிர, சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. இதனால், நம் மீது பொய் பிரசாரம் செய்கின்றனர். நாம், நல்லதை மட்டும் எடுத்து சொன்னால் போதாது;

பொய் பிரசாரங்களுக்கு, உடனடியாக எதிர் கருத்து தெரிவித்து, அதை, முறியடிக்க வேண்டும். அப்போது தான், அது பொய் தகவல் என, மக்களுக்கு தெரிய வரும்.

பாகிஸ்தான் மீது, நாம் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. புல்வாமா தாக்குதலை நடத்திய, பயங்கரவாத அமைப்பு மீதும், அவர்களின் பயிற்சி முகாம் மீதும் தான், துல்லிய தாக்குதல் நடத்தினோம். இதனால், அருகில் உள்ள மக்களுக்கோ, கிராமங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில், தங்கள் ஆட்சியின் போது, காங்., தளர்வு காட்டியது. இதனால், ராணுவத்துக்கு தேவையான, நவீன ஆயுதங்களை அதிகம் வாங்கவில்லை. ஆனால், பாகிஸ்தான், நம் மீது தாக்குதல் நடத்த, போர் விமானங்களை அனுப்பியது. அப்போது, பழைய போர் விமானத்தை வைத்தும், நம் வீரர்களின் திறமையாலும், பாகிஸ்தானின் நவீன ரக போர் விமானத்தை, நாம் விரட்டி அடித்தோம்.

நாம் நடத்திய தாக்குதலுக்கு, உலக நாடுகள் எதிர் கருத்து தெரிவிக்கவில்லை. நமக்கு சாதகமான தகவல்களை மட்டுமே தெரிவித்தனர். சீனா அரசும், நடுநிலை கருத்தையே பதிவு செய்தது. இதற்கு, உலக நாடுகளிடையே, நம் பிரதமர் உருவாக்கி உள்ள நட்புதான் காரணம். பல்வேறு நாடுகளுக்கு சென்ற பிரதமர், இந்தியாவுக்கும், இதர நாடுகளுக்கும் இடையே, நல்ல உறவை வளர்த்தார். பாகிஸ்தான், பயங்கரவாதத்திற்கு எவ்வாறு உதவுகிறது; அவர்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் எப்படி கிடைக்கின்றன என்பது குறித்து, அனைத்து நாடுகளுக்கும் புரிய வைத்தார்.

Advertisement

இதன் காரணமாகவே, அனைத்து நாடுகளும், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. நாட்டின் நலனை கருத்தில் வைத்தே, பிரதமர் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்தார். தற்போது, உலக நாடுகள் மத்தியில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஒன்பது கோடி பேர் பயன்:

தென்னிந்திய வர்த்தக சபை சார்பில், சென்னையில் நடந்த மகளிர் தின விழாவில், ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: சில துறைகளில், ஆச்சர்யப்படும் வகையில், பெண்கள் முன்னேறி வருகின்றனர். மேலும், பல துறைகளிலும் அவர்கள் முன்னேற, தேவையான வசதிகள் செய்து தர வேண்டும். 'முத்ரா' கடன் திட்டத்தால், ஒன்பது கோடி பெண்கள் பயன் அடைந்து உள்ளனர். அடுப்பு எரிக்கும் பெண்கள் புகையால் பாதிக்கப்பட்டனர். இது, 400 சிகரெட் பிடிப்பதற்கு சமம். அவர்களை காப்பாற்ற, எட்டு கோடி ஏழைகளுக்கு, இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது. பெண்கள் அதிகம் உள்ளதால், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, ஓய்வூதியம் வழங்க, பிரதமர் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selvakumar - chennai,இந்தியா
12-மார்-201910:26:54 IST Report Abuse

selvakumarStill bjp believes that congress is ruling party to blame congress.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-மார்-201923:15:05 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்அரசியல் ஆதாயம் பார்ப்பதில் தான் கவனம். உண்மையாக // நாட்டின் பாதுகாப்பில் அக்கறை இல்லை..//

Rate this:
Manithan - Chennai,இந்தியா
11-மார்-201914:28:09 IST Report Abuse

Manithanநமது ராணுவ வீரர்களை பலி கொடுப்பதற்கு முன்பாக நீங்க அக்கறையா இருந்துவிட்டு அடுத்தவர்களை குறை சொன்னால் ஒத்து கொள்ளலாம். மொதல்ல தாக்குதல் ஆதாரத்தை கொடுங்கள்,

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-மார்-201916:09:03 IST Report Abuse

ஆரூர் ரங்அப்போ 1400 IPKF வீரர்கள் ஈழத்தில் யாருக்காக பலிகொடுக்கப்பட்டார்கள்? என்ன விளைவு? அது எந்தமாதிரி சாதனை? ...

Rate this:
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
11-மார்-201917:22:20 IST Report Abuse

Bhagat Singh Dasanமனிதன் பெயரளவில் தான். அடுத்த முறை துல்லிய தாக்குதல் நடத்தும் போது உங்களை rafale விமானத்தில் கட்டி தூக்கி போவார்கள் அப்போது படம் பிடித்துக்கொள்ளுங்கள் ...

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X