அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.,
நான்கு லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: நீண்ட இழுபறிக்கு பின், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்துள்ளது. தே.மு.தி.க.,விற்கு, நான்கு லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க., தே.மு.தி.க.,கூட்டணி,இணைந்தது,நான்கு தொகுதிகள்,ஒதுக்கீடு,லோக்சபாதமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ம.க., - பா.ஜ., - புதிய நீதிக்கட்சி - புதிய தமிழகம் - என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை இணைந்தன. இக்கூட்டணியில், தே.மு.தி.க.,வும் இணைய விரும்பியது. ஆனால், அக்கட்சி அதிக இடங்களை கேட்டதாலும், தி.மு.க., உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாலும், கூட்டணி முடிவாகாமல் இழுபறி நீடித்தது.


கெடு:இந்நிலையில், தி.மு.க., தன் கூட்டணியை இறுதி செய்து, தே.மு.தி.க.,விற்கு இடமில்லை என, அறிவித்தது. அதனால், அ.தி.மு.க., கூட்டணியில் இணைய, தே.மு.தி.க., முன் வந்தது. கூட்டணியில் இணைய, நேற்று வரை,

தே.மு.தி.க.,விற்கு, அ.தி.மு.க., கெடு விதித்தது. இதையடுத்து, நேற்று இரவு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலர் சுதீஷ் ஆகியோர், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, தனியார் ஓட்டலுக்கு சென்றனர். முதல்வர், துணை முதல்வர் ஆகியோரும், அந்த ஓட்டலுக்கு வந்தனர்.


இதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு நடந்தது. பேச்சின் முடிவில், கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அ.தி.மு.க., சார்பில், ஒருங்கிணைப்பாளர், பன்னீர், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., ஆகியோரும், தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்தும் கையெழுத்திட்டனர்.


முடிவு:இது குறித்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வும் - தே.மு.தி.க.,வும் கூட்டணி அமைத்து, தமிழகத்திலும், புதுச்சேரியிலும், தேர்தலை சந்திப்பது, என்ற நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு, நான்கு லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்படும்.


தமிழகத்தில், காலியாக உள்ள, 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, தே.மு.தி.க., தன் முழு ஆதரவை

Advertisement

அளிக்கும். அ.தி.மு.க., மெகா கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை, முறைப்படி கலந்து பேசி அறிவிப்போம். த.மா.கா.,வுடன் கூடிய விரைவில், நல்ல முடிவு எட்டப்படும். எங்கள் கூட்டணி வலிமையான அணி. தே.மு.தி.க., - அ.தி.மு.க., எப்போதும், உணர்வுப்பூர்வமான கூட்டணியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

'உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்':

தே.மு.தி.க., பொருளாளர், பிரேமலதா கூறியதாவது: அ.தி.மு.க., - தே.மு.தி.க., மாபெரும் வெற்றி கூட்டணி. 2011ல், ஜெயலலிதா - விஜயகாந்த் கூட்டணி அமைத்து, மிகப்பெரிய வெற்றியை பெற்றனர். அதேபோல, தற்போதைய கூட்டணி, 40 தொகுதிகளை வெல்லும்; மகுடம் சூடும். சட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, முழு ஆதரவு அளிப்போம்; உள்ளாட்சி தேர்தலிலும், இந்த கூட்டணி தொடரும். அ.தி.மு.க., ஆட்சிக்கு, தே.மு.தி.க., முழு ஆதரவு அளிக்கும். தொகுதி உடன்பாட்டில் மனநிறைவு ஏற்பட்டுள்ளது. எண்களில் ஒன்றுமில்லை; எண்ணம் தான் முக்கியம். தேர்தல் பிரசாரத்திற்கு, விஜயகாந்த் வருவார். தி.மு.க., குறித்து தான், அன்று பேசினேன்; என் பேச்சு, திசை திருப்பப்பட்டு விட்டது. 15 நாட்களாக, இந்த கூட்டணி தான், 'லைம்லைட்'டில் உள்ளது. மற்றொரு கூட்டணி இருக்கிறதா என்றே, தெரியவில்லை. நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதுபோல், மாபெரும் வெற்றி கூட்டணி அமைந்துள்ளது. ஜெ., பெண் தலைவர். அவர் வழிநடத்திய கட்சியுடன், இயற்கையான கூட்டணி அமைத்துள்ளோம். அனைத்து இடங்களிலும், ஒன்றாக பயணித்து, இக்கூட்டணியை வெற்றி கூட்டணியாக்குவோம். இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement

வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naduvar - Toronto,கனடா
11-மார்-201918:58:16 IST Report Abuse

Naduvarஎந்தக்கட்சிக்காரன் என்ன சொன்னாலும் , 2000 நோட்டுக்கு 4 மணிநேரம் வருசைலெண்ணினதையும் அதே நாள் ஒருத்தர் வீட்டுல இங்கு 82 கோடி கண்டுபுச்சத்தையும் , GST யால் திருப்பூர் ஈரோடு மாவட்டம் அழிஞ்சுபோனதையும் மக்கள் மறக்கமாட்டார்கள்.

Rate this:
உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி - உண்மையூர் ,இந்தியா
11-மார்-201916:38:51 IST Report Abuse

உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி ஜெய விஜயீபாவ....ஜெய விஜயீபாவ....ஜெய விஜயீபாவ.... திருமதி. பிரேமலதா விஜயகாந்திற்கு இப்போது நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது. பெண்ணிற்கு பெருமை சேர்த்த அதே பெண்ணால் வரலாற்று பெருமை பெற்ற அ இ அ தி மு க வுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்ட நீங்கள் மாபெரும் வெற்றியையும்....... மங்கா புகழும் தமிழக சரித்திரத்தில் பெற்றீர்கள்.... மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி அவர்கள் வெல்வது 100 % உறுதியானது என்றாலும் தங்களின் வருகை வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400 மக்களவை இடங்களுக்கு மேல் அமோக வெற்றி பெற்று சிறந்த அரசை அமைக்க வழி வகுக்கும் என்பதே உண்மை.... விசுவாச தலைவன் O பன்னீர்செல்வம் அவர்களும் ராஜதந்திரி K பழனிசாமி அவர்களும் மரியாதை மிகு மருத்துவர் ராமதாசர் அவர்களும் கொக்கென்று நினைத்தாயா கொங்கனவா என சத்யபாமாவை போல் சீறி எழுந்த திருமதி. பிரேமலதா சமேத விஜயகாந்த் அவர்களும் கூட்டணியில் பெற்ற பாரத பிரதமர் திரு. நரேந்திர தாமோதர தாஸ் மோடி அவர்களின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது... அடுத்த பாரத பிரதமராக மீண்டும் பொறுப்பேற்கும் திரு நரேந்திர தாமோதர தாஸ் மோடி அவர்கள் இம்முறை பதவி ஏற்பு விழாவிற்கு அமெரிக்கா.... ரஷ்யா.... பிரான்ஸ்..... ஜப்பான் ..... சீனா ஆகிய உலக தலைவர்களை அழைக்க அன்புடன் வேண்டுகிறேன்.... ஜெய விஜயீபாவ....ஜெய விஜயீபாவ....ஜெய விஜயீபாவ....

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
11-மார்-201918:10:04 IST Report Abuse

BoochiMarunthuஇருக்கிறே சொம்புலே ரொம்ப அடி வாங்கி நசுங்கின சோம்பு நீ தான் போல . நேத்து வரைக்கும் திட்டிவிட்டு இன்று சேர்ந்தவுடன் மாறி பேசுகிறாய் . ...

Rate this:
elangovan - TN,இந்தியா
11-மார்-201915:27:07 IST Report Abuse

elangovanNo use for this alliance. Alliance are formed based on safe their deposit. No concept and no principle. People saw all the actives happen in past politics between both two parties. The people to analyze and judge their vote to go for good people and party. Why not we support MNM. People to change their mind not to vote for symbols vote for good person with no corruption. MNM is choice in peoples hand.

Rate this:
மேலும் 58 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X