ராகு காலத்தில் அறிவிப்பா? கட்சி தலைவர்கள் கவலை

Added : மார் 11, 2019 | கருத்துகள் (41)
Advertisement

புதுடில்லி: ராகு காலத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியானதால், தென் மாநிலங்களை சேர்ந்த சில அரசியல் கட்சி தலைவர்கள் பீதி அடைந்துள்ளனர்.






லோக்சபா தேர்தல் தேதிகளை, தேர்தல் கமிஷன், நேற்று(மார்ச் 10) மாலை, 5:00 மணிக்கு வெளியிட்டது. இதற்கு, தென் மாநிலங்களை சேர்ந்த, பல அரசியல் கட்சி தலைவர்கள் கவலை தெரிவித்தனர்.


காத்திருந்தார்:



'மாலை, 4:30 - 6:00 வரை ராகு காலமாக இருப்பதால், அதற்கு முன், தேர்தல் தேதியை வெளியிட்டு இருக்கலாம்' என, அவர்கள் கூறினர். தெலுங்கானா மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், ராகு காலத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு, அதிக கவலை தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இவர், கடந்தாண்டு டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பின், நல்ல நேரத்தில் பதவி ஏற்க வேண்டும் என்பதற்காக, டிச., 13 வரை காத்திருந்தார்.


ஆழ்ந்த நம்பிக்கை:



அதற்கு முன்னதாக, தெலுங்கானா சட்டசபையை கலைப்பதற்கும், 'நல்ல நேரம் வரட்டும்' என அவர் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநில, பா.ஜ., தலைவர் எடியூரப்பா, முன்னாள் பிரதமரும், மதச் சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான, தேவகவுடா ஆகியோரும், ஜோதிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள்.





ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான, சந்திரபாபு நாயுடுவும், நல்ல நேரம் பார்த்தே எதையும் செய்து பழக்கப்பட்டவர். இந்த தலைவர்கள் அனைவரும், தேர்தல் தேதி, ராகு காலத்தில் வெளியானதற்கு கவலை தெரிவித்ததாக, மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naduvar - Toronto,கனடா
11-மார்-201918:57:19 IST Report Abuse
Naduvar எந்தக்கட்சிக்காரன் என்ன சொன்னாலும் , 2000 நோட்டுக்கு 4 மணிநேரம் வருசைலெண்ணினதையும் அதே நாள் ஒருத்தர் வீட்டுல இங்கு 82 கோடி கண்டுபுச்சத்தையும் , GST யால் திருப்பூர் ஈரோடு மாவட்டம் அழிஞ்சுபோனதையும் மக்கள் மறக்கமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
11-மார்-201914:59:27 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ///தென் மாநிலங்களை சேர்ந்த சில அரசியல் கட்சி தலைவர்கள் பீதி அடைந்துள்ளனர்./// இதில் சுடாலின் பெயரை ஏன் போடவில்லை , அவர்தானே அதிகம் நேரம் காலம் பார்ப்பவர். போன பொதுக்கூட்டம் கூட அமாவாசை அன்று போட்டார்.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
11-மார்-201914:43:58 IST Report Abuse
Indhuindian ராகு காலத்தில் அறிவித்ததை நாங்கள் ஆதரிக்கிறோம் - இப்படிக்கு கி வீரமணி மற்றும் திராவிட பாசறை திலகங்கள் (இது தெரிஞ்சுதான் நாங்க எங்க வூட்டுகாரஅம்மாவை கோயிலுக்கு போயி அங்கபிரதட்சணம் செய்ய சொல்லிட்டோமே)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X