பொது செய்தி

இந்தியா

பெட்ரோல், 'பங்க்'கில் கைமாறிய பழைய நோட்டுகள் எத்தனை?

Updated : மார் 11, 2019 | Added : மார் 11, 2019 | கருத்துகள் (38)
Share
Advertisement

புதுடில்லி:'செல்லாத ரூபாய் நோட்டு திட்ட காலத்தில், பெட்ரோல், 'பங்க்'குகளில் மாற்றப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் பற்றிய தகவல் இல்லை' என, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.கடந்த, 2016, நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, பிரதமர் மோடி அறிவித்தார்.



latest tamil news



அதன்படி, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அவற்றுக்கு பதில், வேறு ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.அப்போது, குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும், பெட்ரோல் பங்க், மருத்துவமனை, ரயில்வே டிக்கெட், பொது போக்குவரத்து, விமான சேவை டிக்கெட் உட்பட, 18 சேவைகளுக்கு, செல்லாத, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த, மத்திய அரசு அனுமதி அளித்தது.


latest tamil news



பின், 2016 நவ., 25 - டிச., 15 வரை, பெட்ரோல் வாங்குதல் உட்பட, 18 சேவைகளுக்கு, பழைய, 500 ரூபாய் நோட்டுகளை மட்டும் பயன்படுத்தலாம் என கூறப்பட்டது.ஆனால், இந்த சேவைகளை பயன்படுத்தி, ஏராளமான பழைய ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்ததால், 2016 டிச., 2ம் தேதி, பழைய, 500 ரூபாய் நோட்டுகளுக்கு முழு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 18 சேவைகள் மூலம், மாற்றப்பட்ட, பழைய ரூபாய் நோட்டுகள் குறித்து,தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அதற்கு, ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், 'பெட்ரோல், டீசல் வாங்குதல், மருத்துவ சேவை உட்பட, 18 சேவைகளுக்காக, மாற்றப்பட்ட, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் பற்றிய தகவல் ரிசர்வ் வங்கியிடம் இல்லை' என, கூறப்பட்டு உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naduvar - Toronto,கனடா
11-மார்-201918:56:10 IST Report Abuse
Naduvar எந்தக்கட்சிக்காரன் என்ன சொன்னாலும் , 2000 நோட்டுக்கு 4 மணிநேரம் வருசைலெண்ணினதையும் அதே நாள் ஒருத்தர் வீட்டுல இங்கு 82 கோடி கண்டுபுச்சத்தையும் , GST யால் திருப்பூர் ஈரோடு மாவட்டம் அழிஞ்சுபோனதையும் மக்கள் மறக்கமாட்டார்கள்.
Rate this:
Cancel
S.Aruna - Trichy,இந்தியா
11-மார்-201917:06:31 IST Report Abuse
S.Aruna பேருந்துகளில் வாங்கமறுத்த ஐநூறு ஆயிரம் நோட்டுகளை மட்டும் வங்கிகளில் டெபாசிட் செய்தவகையில் எவ்வளவு கள்ளப்பணம் அதிகார வர்க்கத்தால் மாற்றப்பட்டது என்ற கணக்கை வெளியிடுவார்களா?
Rate this:
Cancel
11-மார்-201916:52:08 IST Report Abuse
mannanthai இதில் என்ன சந்தேகம். சராசரியாக 53 நாட்களில் உலகம் முழுவதும் எவ்வளவு ஆயில் இறைக்கபபடுமோ அதைப் போல நூறு மடங்கோ இருநூறு மடங்கோ பெட்ரோல் டீஸல் போட்டிருப்பார்கள். Thats India.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X